Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் உண்ணாவிரதம்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கடலூர்:

     புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை 28/02/2012 அன்று உண்ணாவிரதம்  நடந்தது. 

         புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இக்கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தலைவர், தி.வேல்முருகன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பேராசிரியர் தீரன், மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி, மாணவரணிச் செயலாளர் அருள்பாபு, இளைஞரணிச் செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

சேலம்: 

       தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் சக்திவேலன், ஜெயமோகன், சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 

        கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் வரும் மார்ச் 4ம் தேதி நடக்கிறது. இக்கூட்டத்தை பிரமாண்ட முறையில் நடத்த வேண்டும். மாவட்ட, மண்டல, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

    பொதுக்கூட்டத்திற்கு வரும் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன் மற்றும் பொதுச்செயலாளர் காவேரி, இணைப்பொதுச் செயலாளர் சண்முகம், அமைப்புச் செயலாளர் காமராஜ் ஆகியோரை வரவேற்று மாவட்டம் முழுவதும் கொடி, தோரணம், அலங்கார வளைவுகள் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
 
         மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் சந்திரன், பாலு, அஸ்தம்பட்டி பகுதி அமைப்பாளர் வெங்கடேஷ், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அழகேசன், பொதுக் குழு உறுப்பினர் ஆறுமுகம், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







Read more...

பா.ம.க. தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய உள்ளார்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

       விரைவில் பா.ம.க. தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய உள்ளார்.

       பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

சென்னையில் பேசிய
பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா

       "நான் பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த 33 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளேன். பல லட்ச ரூபாய் செலவு செய்தும், பலமுறை கட்சிக்காக சிறைக்கும் சென்று வந்துள்ளேன். மூன்றுமுறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். அதன் பின்பு நடைபெற்றத் தேர்தல்களில் மற்றொருவரை சைதை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி டாக்டர் ராமதாஸ் என்னைப் புறக்கணித்தார். இதுபோல் வெளியில் சொல்ல முடியாத பல காரணங்களால் பாதிக்கப்பட்ட நான் இப்போது பாமகவில் வகித்து வந்த மாநிலத் தொழிற்சங்கச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். அக்கட்சியிலிருந்தும் விலகியுள்ளேன். விரைவில் பாமக அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து தமிழக வாழ்வுரிமை
க் கட்சியில் இணைய உள்ளோம்' என்றார்.

      இந்நிகழ்ச்சியில் முன்னாள் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வேணுகோபால், முன்னாள் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் வட்ட, மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Read more...

சேலத்தில் மார்ச் 4-ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம்

புதன், 22 பிப்ரவரி, 2012


 தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மார்ச் 4-ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் நடை பெற உள்ளது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி  தி.வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன், பொதுச் செயலர் காவேரி, அமைப்புச் செயலர் ப.காமராஜ் ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.. 



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேலம் மாநகர் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012





    தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேலம் மாநகர் ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் சாலையில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை ( 19/02/2012) நடைபெற்றது.  சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஏ.பி.குமார் தலைமையில்  நடைப்பெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் துணை அமைப்பாளர் சந்திரன், ஏ.பி.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைப் பொது செயலாளர்கள் சக்திவேலன், ஜெயமோகன் ஆகியோர் பேசினார்கள். 


    கூட்டத்தில், கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர்கள் எஸ்.கே.சக்திவேலன், கே.ஜெயமோகன், பொதுக்குழு உறுப்பினர் பி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூடத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 

1. சேலம் மாநகரில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை போக்க, சேலம் மாநகராட்சி பகுதிகளில் 2  நாட்களுக்கு ஒருமுறை சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும்.


 2.சேலம் புதிய பஸ் நிலையத்தின் சுற்றுப்புறத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; 


3. சேலம் மாநகரில் குறைந்தது 10 அல்லது 12 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகத்தை சீரமைத்து 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


4. சேலம் மரவனேரி பிரதான சாலை மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 5. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மார்ச் 4-ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன், பொதுச் செயலர் காவேரி, அமைப்புச் செயலர் ப.காமராஜ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடி கம்பங்கள் பா.ம.க.வினரால் சாய்ப்பு: கடலூரில் பதட்டம்

சனி, 18 பிப்ரவரி, 2012


வன்மையாக கண்டிக்கிறோம்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/ebf4af73-3c13-40e3-957e-47f7da30beea_S_secvpf.gif
கடலூர், பிப்.18-

      பண்ருட்டி தி. வேல்முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். 
         இதையடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள்  பல இடங்களில் கொடிக்கம்பம் அமைத்து கட்சி கொடி ஏற்றி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடலுர் புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம், மஞ்சக்குப்பம் பிள்ளையார்கோவில் அருகே ஜட்ஜ் பங்களா சாலை மற்றும் பாரதிசாலையில் அமைக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி கொடி கம்பங்களை  வெட்டி சாய்த்து விட்டு கட்சி கொடிகளை எடுத்து சென்று விட்டனர். மேலும் ஜட்ஜ் பங்களா சாலையில் இருந்து கொடிக்கம்பத்தை அடியோடு பிடுங்கி எடுத்து சென்று விட்டனர்.   இன்று காலை இதனை பார்த்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆங்காங்கே கூடிநின்று கொடி கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது இதனால் கடலூரில்  பதட்டமும்- பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 



Read more...

நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்கு தமிழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமரி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ்

புதன், 15 பிப்ரவரி, 2012

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/30bb1b55-8ae7-4521-91ea-974104669b4c_S_secvpf.gif

நாகர்கோவில்:
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

           9 ஆண்டுகளாக காய்ந்து, வறண்டு வெறிச்சோடி கிடக்கிறது நெய்யாறு இடதுகரை சானல் கால்வாய். பசுமை கொழித்த குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் உள்ள 2500 ஏக்கர் விவசாய பூமி, வானம் பார்த்த மானாவாரி பூமியாக்கப்பட்டது. இன்றைக்கு கேரள முதல்-அமைச்சராக இருக்கும் உம்மன்சாண்டிதான் 2003-ம் ஆண்டிலும் முதல்-அமைச்சராக இருந்தார். அப்போதுதான் நெய்யாறு அணையின் ஷட்டரை பூட்டி, இடதுகரை கால்வாயை விரியோட வைத்து விளவங்கோடு விவசாயிகளின் வயிற்றில் நெருப்பை அள்ளிக்கொட்டினார்.

            குமரி மாவட்டம் ஆறுகாணி மலை அடிவாரத்தில் இருந்து காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடி அணைமுகம் ஆற்றில் கலந்து, கேரள நெய்யாற்று அணையை நிரப்பி கேரளாவின் பல பகுதிகளுக்கும் போகிறது. தமிழகத்தில் உருவாகும் நெய்யாற்று நீர், தமிழகத்துக்கும் கொஞ்சம் பயன்படட்டுமே என்று 1962-ம் ஆண்டில் முதல்-அமைச்சராக இருந்த காமராஜரும், கேரள முதல்- அமைச்சர் சங்கரும் ஒப்பந்தம் போட்டனர். அந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக பொய் சொன்னார் உம்மன்சாண்டி. உண்மையில் அந்த ஒப்பந்தத்தில் கால நிர்ணயம் எதுவுமில்லை. நெய்யாறு அணைக்கு வருகிற நீர், தமிழகத்து நீர். எனவே இடதுகரை கால்வாய் மூலம் குமரி மாவட்ட மக்களுக்கு நாம் காடுக்கும் நீரை எந்த காலத்திலும் எந்த அரசும் நிறுத்தி விடக்கூடாது என்று ஒப்பந்தம் போட்ட நாளில் மிகத்தெளிவாக பேசியிருக்கிறார் அன்றைய கேரள முதல்வர் சங்கர்.

          ஆகவே உம்மன்சாண்டி வேண்டுமென்றே தமிழகத்தை வஞ்சிக்கிறார், ஒப்பந்தங்களை மீறுகிறார். தேசிய ஒருமைப்பாட்டை மீறுகிறார் என்பது தெளிவான விஷயம். முல்லை பெரியாறு அணைக்கு ஆதரவு காட்டும் ஒட்டுமொத்த தமிழகமும் நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டும். குமரி மாவட்டம் ஆறுகாணி மலை அடிவாரத்தில் புதிய அணை கட்ட வேண்டும். தண்ணீர் பிரச்சினையில் கேரள அரசியல்வாதிகள் ஒற்றுமையாக செயல்படுவது போல் நாமும் ஒற்றுமையாக இருந்து நெய்யாறு கால்வாயின் குறுக்கே ஆறுகாணி மலை அடிவாரத்தில் அணை கட்ட துணை நிற்க வேண்டும். ஆறுகாணியில் அணை கட்டினால் இடதுகரை கால்வாய்க்காக கேரளாவை கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை.







Read more...

Thamizhaga Vazhvurimai Katchi was against establishing atomic power plants in the entire country -

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

         T.Velmurugan, former MLA, and founder of the new political outfit Thamizhaga Vazhvurimai Katchi, has said that his party was against establishing atomic power plants in the entire country. Power shortage could be managed if the pending thermal, hydel and non-conventional energy projects are completed, he said. “We can do without Kudankulam power plant. The government has to complete pending projects at Neyveli Lignite Corporation (NLC), Tuticorin,” Mr. Velmurugan said.





Read more...

நெய்வேலி நகரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

சனி, 11 பிப்ரவரி, 2012

நெய்வேலி:'

        தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நெய்வேலி நகரில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் கொள்கைகள் குறித்தும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கட்சி சார்பில் நெய்வேலி நகரில் கட்சிக் கொடியேற்றும் விழா நெய்வேலி நகரப் பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜன் முன்னிலையில் வடிவுசிகாமணி, கலைச்செழியன், ராயர் ஞானப்பிரகாசம், இளங்கோவன் உள்ளிட்டோர் நெய்வேலி நகரின் 30 வட்டங்களிலும் கட்சிக் கொடியேற்றினர்.







Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் - காணொளி

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012





சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் பன்னாட்டு தோல் தயாரிப்பு நிறுவனங்களின் கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்தும், இலங்கை அரசின் கொடியை சென்னை வர்த்தக மையத்தில் ஏற்றி வைத்து இருக்கும் இந்திய மத்திய அரசின் போக்கை கண்டித்தும் "தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இளம்புயல் பாசறை நிறுவனருமான முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாரதஜோதி இளம் புயல் திரு.வேல்முருகன் ஆணைக்கு இணங்க  தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்தி உள்ளோம்.  12 கோடிதமிழர்களின் உணர்வை மதிக்காத இந்திய அரசை கண்டிக்கின்றோம்.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதிய உறுப்பினராக இணைய, உறுப்பினர் அட்டை பெற

புதன், 8 பிப்ரவரி, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர் அட்டை பெற:

மிழக வாழ்வுரிமைக் கட்சியில் புதிய உறுப்பினராக இணையவும், உறுப்பினர் அட்டை பெறவும் அந்தந்த ஊரில் உள்ள கிளைக் கழகத்தில்  தொடர்பு கொண்டு உறுப்பினராக  இணைவதற்கான படிவத்தை நிரப்பி கொடுத்து உறுப்பினர் அட்டையை பெறலாம். மேலும் சென்னை போரூரில் உள்ள மிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உறுப்பினராக  இணைவதற்கான படிவம் கிடைக்கும்.



 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலக முகவரி:





கட்சி தலைமையகம்,
எண்.145, எம்.எஸ்.ஆர். வளாகம் ,
குன்றத்தூர் சாலை,
போரூர், சென்னை  - 600116.


Read more...

கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012


        கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டமன்றத்  தொகுதிகளுக்கான தமிழ வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா, நேற்று  சேத்தியாத்தோப்பில்  நடந்தது. தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விழாவில் கலந்துகொண்டு பேசினார். 

 தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது

         ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழக  வாழ்வுரிமைக் கட்சி  துவக்கப்பட்டுள்ளது. 


Read more...

ஏ.ஆண்டிக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா

பண்ருட்டி:

        தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 32-வது வார்டு ஏ.ஆண்டிக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பஞ்சமூர்த்தி கொடியேற்றினார். கட்சிப் பொறுப்பாளர்கள் இரா.கோதண்டபாணி, இராமகிருஷ்ணன், இரா.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கி.பழனிவேல் நன்றி கூறினார்.




Read more...

சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகம் திறப்பு விழா

திங்கள், 6 பிப்ரவரி, 2012

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/63e28401-510c-4f12-a775-1069431df908_S_secvpf.gif

சேலம்:

        சேலம் 5ரோடு அருகே தமிழக வாழ்வுரிமைக்  கட்சி அலுவலகம் 5/02/2012 காலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில துணை பொது செயலாளர் சக்திவேலன் தலைமை வகித்தார்.
தமிழக வாழ்வுரிமைக்  கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான காமராஜ் வரவேற்றார். இதில் பொது செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான வை.காவேரி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் விபரம் :

         சேலத்தில் மார்ச்  மாதம் 4-ம்தேதி பொதுக்கூட்டம் நடத்துவது. இதில்
தமிழக வாழ்வுரிமைக்  கட்சி நிறுவனர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகளை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும். 

         தர்மபுரியில் நடந்த கூட்டத்தில அப்பாவி தொண்டர்களை அனுப்பி ரகளை செய்ய தூண்டிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். 
    
    தர்மபுரி பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் 

        என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேறியது. 

பின்னர் முன்னாள் சட்ட்டமன்ற உறுப்பினர் திரு. காவேரி கூறியது:-

      தமிழக வாழ்வுரிமைக்  கட்சி ஜாதி சமயமற்ற தமிழ், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து உண்மையாக மக்களுக்கு உழைக்கும். முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சினைகளிலும் ஈடுபட்டு இந்த பிரச்சினை தீர பாடுபட உள்ளோம். நல்ல திட்டங்கள் அரசிடம் கேட்டு பெற்று மக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய உள்ளோம். தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேண்டும்என்றே சிலர் புகுந்து கலாட்டா செய்துள்ளனர்.

      எங்களது கட்சியின் வளர்ச்சியை கண்டு அதை தாங்கி கொள்ள முடியாத பா.ம.க.வினர் கலாட்டா செய்துள்ளனர். இவர்களை கைதுசெய்து அமைதி ஏற்படுத்த வேண்டும் என போலீசாரை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை பொது செயலாளர் ஜெய்மோகன், சேலம் மாநகர அமைப்பாளர்கள் மெகாபைட் ஆனந்தன், குமார், தெற்கு மாவட்ட செயலாளர் முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் அழகேசன், வடிவேல், சத்யராஜ், பகுதி செயலாளர் வெங்கடேசன், மேற்கு மாவட்ட அமைப்பாளர் கணேசன், வைரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.









Read more...

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

    கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான ண்ருட்டி தி.வேல்முருகன்அறிவித்துள்ளார்.


இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான ண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட அறிவிப்பு

         எதிர்கால தலைமுறையினரையும் இந்த மண்ணையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் அணு உலைகளை எதிர்த்து காந்திய வழியில் போராடிவரும் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது நேற்று அணு உலைக்கு ஆதரவனோர் என்ற பெயரில் இந்து மக்கள் கட்சி மற்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கைக்ககூலிகளாலும், கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அமைதியான முறையில் அரசின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள சென்றவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினரின் முன்னால் தாக்கியது காட்டுமிராண்டித்தனமானது.

           இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வெறிச்செயலில் ஈடுபட்ட பாசிச இந்து முன்னணியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டோரை கண்டித்து (3-2-2012) ந் தேதி காலை10 மணியளவில், பனகல் மாளிகை எதிரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி , நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

         இதில் மனித நேய ஆர்வலர்களும்,தமிழின உணர்வாளர்களும், இளைஞர்கள், பொதுமக்களும், பெருந்திரளாய் கலந்து  கொள்ள வேண்டுகிறோம்

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக திரு. சக்திவேலன் நியமனம்

புதன், 1 பிப்ரவரி, 2012

சேலம்: 
        தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக, சேலத்தை சேர்ந்த சக்திவேலன் நியமிக்கப்பட்டுள்ளார். 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான   பண்ருட்டி தி. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
 
தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக, சேலம் சக்திவேலன் நியமிக்கப்படுகிறார். 

சேலம் தெற்கு மாவட்ட அமைப்பாளராக முத்து, மாநகர அமைப்பாளராக மெகாபைவ் ஆனந்தன் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
 
 
         தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சக்திவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான   பண்ருட்டி தி.வேல்முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர் தீரன், மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், இணைச் செயலாளர் சண்முகம், மற்றும் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Read more...

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்: முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் பாராட்டு

பண்ருட்டி:

     தானே புயலில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் ரூ.1,000 கோடியில் கட்டப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறினார்.

 ண்ருட்டியில் திங்கள்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறியது:

           புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என அறிவித்த முதல்வரை பாராட்டி வரவேற்கிறேன். விவசாயிகளுக்கு முந்திரி, பலா கன்றுகளை தந்து, ஒரு ஆண்டுக்கு பராமரிப்பு செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.  

          புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் விவசாய, கூட்டுறவு, தேசிய வங்கிக் கடன்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்து, அவர்களது வயிற்றில் பால் வார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். 

கல்விக் கட்டணம்: 

           5 ஆயிரம் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கடலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர்கள் இயக்கம் சார்பில் முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் நியாயமான இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டணத்தை கட்டியாக வேண்டும் என நிர்பந்திப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

          புயல் நிவாரணம் அளிப்பதற்காக, நெய்வேலியில் உள்ள குளுனி பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் ரூ.500 முதல் ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்து வருகிறது. இயலாத மாணவர்களை வகுப்பறையில் சேர்க்க மறுக்கின்றனர். இக்கல்வி நிறுவனத்தின் மீது அரசும், கல்வித் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வசூலித்த பணத்தை திரும்பத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.வேல்முருகன் கூறினார்

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP