Blogger இயக்குவது.

எந்த மதத்தை சேர்ந்த வரும் எந்த கட்சியில் உள்ளவர்களும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையலாம்: பண்ருட்டி தி.வேல்முருகன்

செவ்வாய், 27 மார்ச், 2012






கோவை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில தலைவர் ப்ண்ருட்டி தி. வேல்முருகன் கோவையில் அளித்த பேட்டி :

      தமிழக மக்கள் இழந்து வரும் வாழ்வுரிமையை மீட்கவும் பிரிந்து கிடக்கும் தமிழகத்தை ஒன்று சேர்க்கவும், சாதி, பேதமற்ற தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கட்சியை தொடங்கியுள்ளேன். எந்த மதத்தை சேர்ந்த வரும் எந்த கட்சியில் உள்ளவர்களும் எங்கள் கட்சியில் இணையலாம். எங்கள் கட்சிக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு நிற கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் சமம் என்ற அமைப்பில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அதே போல் இந்திய அரசியல் சட்டத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.

     முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரத்தில் சட்டசபையில் குரல் கொடுத்துள்ளேன். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினைக்கு காந்திய வழியில் போராடும் மக்களுக்கு தண்ணீர், பால் கொடுக்காமல் வாழ்வுரிமையை நசுக்கி வருகின்றனர். வளர்ந்த 22 நாடுகள் அணு உலை வேண்டாம் என்று மூடி விட்டன. 15 நாடுகள் மூட முடிவு செய்துள்ளன. வளர்ந்து வரும் நாடான இந்தியா அணு உலை மூலம் மின்சாரம் தயாரிப்பது ஏற்புடையதல்ல. கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப்பட்டால் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறுகிறார். நெய்வேலியில் தயாரிக்கப்படும் 2800 மெகாவாட் மின்சாரத்தில் 2600 மெகாவாட் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. 200 மெகாவாட் தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது.

       அதை தமிழகத்துக்கு திருப்பி விட வேண்டியதுதானே. தானே புயல் பாதிப்பையே சீர்படுத்த முடியவில்லை. கூடங்குளத்தால் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அதை ஈடு செய்ய முடியாது. ஐ.நா. மனித உரிமை குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெறும் கண் துடைப்புதான். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளி வாய்க்கால், மட்டக்களப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கையை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இப்போது அது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு கடிதம் எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது. 

Read more...

கீரப்பாளையம் ஒன்றியத்தில் 20 கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

வியாழன், 22 மார்ச், 2012

சேத்தியாத்தோப்பு :

     கீரப்பாளையம் ஒன்றியத்தில் 20 கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
 
       கீரப்பாளையம் ஒன்றியத்தில் அள்ளூர், பரிபூரணநத்தம், வடபாக்கம் வெய்யலூர், ஒடாக்கநல்லூர், தென்பாதி, பரதூர்சாவடி, ஆயிப்பேட்டை, சாக்காங்குடி, கீரப்பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நடந்த கொடியேற்று விழாவிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் ஆண்டவர் செல்வம், விஜயகுமார், பரசுராமன் முன்னிலை வகித்தனர் மாவட்ட அமைப்பாளர் வீரசோழன் வரவேற்றார். 20 கிராமங்களிலும் த.வா.க., மாநிலத் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்  பேராசிரியர் தீரன் கொடியேற்றினார்.
 
      நிகழ்ச்சிகளில் சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கண்ணன், சேரலாதன், கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், மகேந்திரன், குணசேகரன், அருள், தில்லை கோவிந்தன் பங்கேற்றனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடலூர் முதுநகரில் ரயில் மறியல் போராட்டம் - புகைப்படங்கள்

ஞாயிறு, 18 மார்ச், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் 17/03/2012 அன்று  கடலூர் முதுநகரில் நடைபெற்ற  ரயில் மறியல் போராட்டம் - புகைப்படங்கள்









Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடலூர் முதுநகரில் ரயில் மறியல் போராட்டம்

கடலூர்:

        கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கடலூர் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டம் செய்தனர்.

         
கடலூர் முதுநகரில் சனிக்கிழமை நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முன்னாள் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் தலைமயில் ரயில் மறியல் போராட்டம்  நடைபெற்றது.  போராட்டத்தில் தி. வேல்முருகன் உள்ளிட்ட 1000  -க்கும் மேற்பட்டோர்  பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 55 பேர் பெண்கள். ரயில்மறியல் போராட்டத்தை முன்னிட்டு கடலூர் முதுநகரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
       
       முதுநகர் ரயில் நிலையத்துக்கு பகல் 1-50 மணிக்கு வந்த ராமேசுவரம் செல்லும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் 15 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி மற்றும் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் பால்ராஜ், இணைச் செயலர் ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகவேந்தன், மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலர் செந்தில், நுகர்வேர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கடல் தனசேகரன், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன், மக்கள் பாதுகாப்புக் கழக மாவட்டத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Read more...

இராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 17 மார்ச், 2012

நெய்வேலி:
         நெய்வேலி மந்தாரகுப்பம் பேருந்து நிலையத்தில்  தமிழக வாழ்வுரிமைக்  கட்சி சார்பில்  இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை நாட்டைவிட்டு வெளியேற்றக் கோரியும், இராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது . அப்போது இலங்கை அதிபர் இராஜபச்சே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை கண்டித்து முழக்கம் செய்தனர்.
 
     

Read more...

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பதிலாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன்

புதன், 14 மார்ச், 2012

கிருஷ்ணகிரி: 
       கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பதிலாக மாற்று மின் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கிருஷ்ணகிரியில் தெரிவித்தார்.
 
      கிருஷ்ணகிரியில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்துகொண்ட  நிறுவனர் தி.வேல்முருகன் பேட்டியளித்தார். 

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் அளித்த  பேட்டி 

        எங்கள் கட்சி தமிழகத்தில் எந்த கட்சிக்கும், எந்த சாதிக்கும் எதிரான கட்சி அல்ல. தமிழக மக்களின் நதிநீர் உரிமைகளை காக்கவும், கச்சத்தீவை மீட்பதும் எங்களின் முக்கிய குறிக்கோள்.  இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை ஐ.நா. சபை மூலம் போர்குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 15ம் தேதி கிருஷ்ணகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
 
        அணுஉலை என்பது உலகம் முழுவதும் இருக்க கூடாது என்பதுதான் எங்களின் குறிக்கோள். கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை விடுத்து விட்டு, மாற்று மின்திட்டங்களான காற்றாலை, நீர்மின் நிலையம், கடல் நீர் மற்றும் கடல் பாசியில் இருந்து மின்சாரம் தயாரித்தல், நமது நாட்டில் கிடைக்கும் கனிம வளங்களில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற மாற்று மின்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கூடாது. 
         மக்களின் உணர்வு ரீதியான போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழகம் இருளில் மூழ்கி கிடக்கும் இந்த சூழ்நிலையில் கூட நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  தமிழகத்திற்கு மின் பற்றாக்குறை உள்ள இந்த சூழ்நிலையில் மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தி விட்டு, தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் தங்கள் தேவைக்கு போக மீதம் உள்ள உபரி நீரைத்தான் தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்திற்கு தேவைப்படும் மின்சாரம் போக மீதம் உள்ள உபரி மின்சாரத்தை மட்டுமே பிற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
 
       எப்போதெல்லாம் பொதுமக்களும், வன்னிய இன மக்களும் பாமகவை புறக்கணிக்கிறார்களோ அப்போதெல்லாம் பாமக சாதி அரசியலை கையில் எடுக்கும். இப்போது ஒட்டுமொத்த வன்னியர் இன மக்களும் பாமகவை புறக்கணித்து விட்டனர். அதனால் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என பாமக சாதி அரசியலை கையில் எடுத்துள்ளது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
 
      பேட்டியின் போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன், பொதுச் செயலாளர் காவேரி, இணை பொதுச் செயலாளர் போரூர் சண்முகம், பொருளாளர் காமராஜ், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் விஜயக்குமார், தவமணி, மாவட்ட அமைப்பாளர்கள் வேல்மணி, ரமேஷ், பாரதி ராமச்சந்திரன், டாக்டர் முனிரத்தினம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read more...

அரூரில் பா.ம.க.,விலிருந்து 100 பேர் விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

அரூர்:

அரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் முன்னிலையில் பா.ம.க.,விலிருந்து விலகி 100 பேர் கட்சியில் இணைந்தனர்.


அரூருக்கு நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் வந்தார். அப்போது அவரது முன்னிலையில் நகர செயலாளர் முருகன் தலைமையில் 50 பேரும், கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த பா.ம.க.,வினர் 50 பேரும் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். மேலும் அரூர் டவுன் பஞ்சாயத்தில் உள்ள அழகுசெல்வி, அப்துல் சுக்கூர் ஆகிய இரண்டு வார்டு உறுப்பினர்களும் பா.ம.க.,விலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி  கட்சியில் இணைந்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் அளித்த பேட்டி:

பா.ம.க., துவங்கும் போது எடுக்கப்பட்ட கொள்கை, லட்சியம் ஆகியவற்றிலிருந்து ராமதாஸ் விலகி பா.ம.க.,வை குழி தோண்டி புதைத்து விட்டனர். இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த தியாகிகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால், யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பா.ம.க., ஆரம்பிக்கும் போது தனது குடும்பத்திலிருந்து யாரும் எம்.பி.,யாகவோ, எம்.எல்.ஏ.,யாகவோ வரமாட்டார்கள் என்று கூறினார். ;ஆனால், அவரது மகனை அன்புமணியை மத்திய அமைச்சராக்கினர். அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பதவிகளை வழங்கினார். வன்னியர் அறக்கட்டளையை ஆரம்பிக்கும் போது வன்னியர் மக்களிடம் இருந்து நன்கொடை வாங்கினார். ஆனால் அதற்கு தலைவராக அவரது மனைவி சரஸ்வதியை நியமித்தார். குடும்ப உறுப்பினர்களை அறக்கட்டளை உறுப்பினர்களாக நியமித்தார். பா.ம.க.,வில் குடும்ப ஆதிக்கம் தான் உள்ளது. வன்னிய மக்கள் புறக்கணிக்க படுகின்றனர். பா.ம.க.,வில் நடந்த குளறுபடிகளை நிர்வாக குழு கூட்டத்தில் பேசினேன். உடனே என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டனர். பா.ம.க.,வுக்கு உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை துவக்கியுள்ளோம்., கட்சி துவங்கிய இரு மாதத்தில் ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். பா.ம.க.,விற்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. பா.ம.க.,வுக்கு இனி எதிர்காலம் இல்லை. பா.ம.க., ஆரம்பிக்கும் போது 9 சதவீதம் ஓட்டுவங்கி இருந்தது. தற்போது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது இவ்வாறு கூறினார்.

தமிழக வாழ்வுரிக் கட்சி தலைவர் காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணைத்தலைவர் மலர், தவமணி உட்பட பலர் உடனிருந்தனர்.

Read more...

கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோடிக் கம்பங்கள் வெட்டி சாய்ப்பு :பா.ம.க., வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல்

செவ்வாய், 13 மார்ச், 2012

கடலூர் :

       தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்   கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த பா.ம.க., வினர் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ் கடலூரில் சாலை மறியல்  நடாவ்பெற்றது.

       கடலூர், முதுநகர் அடுத்த வள்ளி காரைக்காடு கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடிக்கம்பம் நேற்று முன்தினம் வெட்டி சாய்க்கப்பட்டது. இதனை கண்டித்தும், இதற்கு காரணமான பா.ம.க., மாநில துணை பொதுச்செயலர் சண்முகம், மாவட்டச் செயலர் தாமரைக்கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியி ன் தொண்டர்கள்   25 பேர் கடலூர் பாரதி சாலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர்கள் புதுநகர் சரவணதேவேந்திரன், முதுநகர் (பொறுப்பு) குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.   பா.ம.க., வினர் மீது நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்ததை  3.50 மணிக்கு அனைவரும் மறியலை கைவிட்டனர். 



Read more...

சேலம் போஸ் மைதானத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்கூட்டம்

செவ்வாய், 6 மார்ச், 2012

சேலம்:
 
         சேலம் போஸ் மைதானத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் 04/03/2012 ஞாயிற்றுகிழமை மாலை   நடந்தது. 
 
        கூட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் எஸ்.கே. சக்திவேலன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் ஜெயமோகன் வரவேற்றார். முத்து, மா.கணேசன், பாலு, காட்டுரவி, எஸ்.ரவி, எஸ்.கே.ஆர்.அன்பரசன், ஏ.வடிவேல் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவருமான வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான வேல்முருகன் ஆற்றிய சிறப்புரை:
 
        தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காகவும், சாதி, சமய, மத எல்லைகளுக்கு அப்பால் தமிழர்கள் அனைவரையும ஒன்று திரட்டி அவர்களின் உரிமைக்காக பாடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி. தமிழ் ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக தனி ஈழம் மலர வேண்டும் என்ற பிரபாகரனின் கனவு நிறைவேற வேண்டும் என்பதும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நோக்கமாகும். மனித நேயம் வளர்த்தல், மனித நேயம் காத்தல், மனிதனை மனிதனாக மதித்தல், மன நலம் குன்றியவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உதவுதல், ஆதரவற்றோருக்கும், முதியோர்களுக்கும், ஏழை எளியோருக்கும், ஊனமுன்றோருக்கும் வாழ்வளித்தல், விவசாய நிலங்கள் மனை நிலங்களாக விற்கப்படுவதை தடுத்தல் உள்பட 26 கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. 
 
        தமிழக மக்களின் உரிமைகளை காக்க என்றென்றும் நாங்கள் துணை நிற்போம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான கட்சியாகத்தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
 
       தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பேராசிரியர் தீரன், பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காவேரி, மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் வீரப்பனின் மாமனார் ஜி.அய்யனாரும் பேசினார்.
 
        கூட்டத்தில் நிர்வாகிகள் மேட்டூர் ராமசுப்பன், கே.வி. சிவராமன், சத்யமூர்த்தி, சி.அழகேசன், ரவிஅலெக்ஸ், சண்முகசுந்தரம், விஜய் குமார், மலர் ராமலிங்கம், எஸ்.அய்யந்துரை, வி.நடராஜன், சிவக்குமார், ஆறுமுகம், நாகமணி, தலித் சக்திவேல், எம்.விஜயலிங்கம், சங்கர் கணேஷ், பாப்பாத்தி ராமமூர்த்தி, கண்ணன், முகமது யூசுப், பாலு, காஞ்சி குமார், பிரகாஷ், கோபிநாத், தவமணி, மனோகரன், தீனா, கணேசன், அன்பு, சரவணன், ராமச்சந்திரன், செந்தில்குமார், குமரேசன், சுப்பிரமணியம், பார்த்திபன், பாலன், சுரேஷ் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.பி.குமார் நன்றி கூறினார்.
 

Read more...

சேலத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்

திங்கள், 5 மார்ச், 2012








        தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் 4-03-2012 மாலை, சேலம் போஸ் திடலில் நடந்த ஈழத்தின் குரல் மேதகு அண்டன் பாலசிங்கம் பிறந்த நாள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்.



Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP