Blogger இயக்குவது.

என்.எல்.சி.யில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தரவேண்டும் :தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

சனி, 28 ஏப்ரல், 2012

கடலூர்:


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடலூரில் கடலூர் மாவட்ட செயலாளர் இரா.பஞ்சமூர்த்தி தலைமையில் வெள்ளிகிழமை நடந்தது.


கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் :


1. 
நெய்வேலி என்.எல்.சியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தரவேண்டும் 



2. புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.இப்பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி செலவை 5 ஆண்டுகளுக்கு அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்,

3. சிப்காட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அங்குள்ள நிறுவனங்கள் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,

4. இலங்கை படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.திருமால்வளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகர செயலர் ஆனந்த் வரவேற்றார், மாநில மகளிரணி செயலர் அமராவதி, சட்டப் பாதுகாப்பு செயலர் திருமூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




Read more...

குமரி காடுகளில் மரம் கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வியாழன், 26 ஏப்ரல், 2012

நாகர்கோவில்:

குமரி வனப்பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் கூறியுள்ளார்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:


குமரி வனப்பகுதி குலசேகரம், பூதப்பாண்டி, அழகியபாண்டிபுரம், வேளிமலை ஆகிய வனசரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி மரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக விலை மதிப்பற்ற வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோதையார் நீர் மின்நிலையங்களுக்கு அருகிலுள்ள மணலிக்காடு பகுதியில் பல கி.மீட்டர் தூரத்திற்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் உள்ள தேக்கு மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி செல்கின்றன. இந்த கடத்தல் கும்பலை பிடிக்க வனத்துறையின் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் மாவட்ட நிர்வாகம் தனிகவனம் செலுத்தி மரம் வெட்டி கடத்தலில் பின்னணியில் இருப்போரையும், துணைபுரியும் அதிகாரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி பொதுக் கூட்டம் - புகைப்படங்கள்

புதன், 25 ஏப்ரல், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி பொதுக் கூட்டம் -
புகைப்படங்கள்


இலங்கை மீது பன்னாட்டு நீதி மன்றத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும், தனித் தமிழீழம் அமைய பொது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 22-04-2012 அன்று கிருஷ்ணகிரியில்   நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்








Read more...

தனித் தமிழீழம் அமைய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன்

திங்கள், 23 ஏப்ரல், 2012


கிருஷ்ணகிரி:


தென்பெண்ணையாறு தண்ணீரை தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு தடுத்து வருகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.

கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அளித்த பேட்டி


தற்போது எடுக்கப்பட உள்ள சமூக, பொருளாதார, சாதிவாரிக் கணக்கெடுப்புக்குப் பின் சாதிக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 



 எம்.பி.க்கள் குழு பயணத்தால் பலனில்லை:


          இலங்கைக்கு சென்ற இந்திய எம்.பி.க்கள் குழுவால் பலன் ஏதும் இல்லை.எனவே, ஐ.நா. மேற்பார்வையோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து மக்கள் விரும்புகின்ற ஒரு சுதந்திர அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடத்தி தமிழ் ஈழம் அமைய, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தி.வேல்முருகன். பேட்டியின் போது, மாநில பொதுச்செயலர் வை.காவேரி, மாநிலத் தலைவர் தீரன், மாநில இணைப் பொதுச்செயலர் எஸ்.எஸ்.சண்முகம், மாநில அமைப்புச் செயலர் மே.ப.காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேய் அமைப்புகள்

திங்கள், 16 ஏப்ரல், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேய் 


அமைப்புகள்




தமிழர் வாழ்வுரிமை தொழிலாளர் பாசறை

தமிழர் வாழ்வுரிமை உழவர் பாசறை

தமிழர் வாழ்வுரிமை இளைஞர் பாசறை

தமிழர் வாழ்வுரிமை மகளிர் பாசறை

தமிழர் வாழ்வுரிமை மாணவர் பாசறை

தமிழர் வாழ்வுரிமை வழக்கறிஞர் பாசறை

தமிழர் வாழ்வுரிமை பொருளாதார வளர்ச்சிப் பாசறை

தமிழர் வாழ்வுரிமை கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை

தமிழர் வாழ்வுரிமை மருத்துவர் பாசறை

தமிழர் வாழ்வுரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பாசறை

தமிழர் வாழ்வுரிமை விளையாட்டுக்கலை பாசறை

தமிழர் வாழ்வுரிமை தகவல் அறியும் உரிமைப் பாசறை

தமிழர் வாழ்வுரிமை அமைப்புசாரா தொழிலாளர் பாசறை

தமிழர் வாழ்வுரிமை தகவல் தொழில்நுட்பப் பாசறை

தமிழர் வாழ்வுரிமை தொண்டர் பாசறை

தமிழர் வாழ்வுரிமை நுகர்வோர் பாதுகாப்புப் பாசறை

தமிழர் வாழ்வுரிமை மாற்றுத் திறனாளிகள் பாசறை

தமிழர் வாழ்வுரிமை அயலுறவுத் தோழமைப் பாசறை


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருநாவலூர் ஒன்றிய மாணவர் பாசறை அமைப்பாளராக எஸ்.பாலாஜி நியமனம்

புதன், 11 ஏப்ரல், 2012

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை அமைப்பாளராக எஸ்.பாலாஜி நியமனம் 




Read more...

என்.வரதராஜன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.வரதராஜன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். 





Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நீர் உரிமை மீட்பு மற்றும் மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

தர்மபுரி: 

           தென் பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக்  கட்சி மாநில பொதுச்செயலாளர் காவேரி  கூறினார். 

             தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தென்பெண்ணை, காவிரி மற்றும் முல்லை பெரியாறு நீர் உரிமை மீட்பு மற்றும் மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனிரத்தினம் வரவேற்றார். பன்னீர்செல்வம், பிரகாஷ், பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் வஜ்ஜிரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில பொதுச்செயலாளர் காவேரி, அமைப்புச் செயலாளர் காமராஜ், மாநில துணை பொதுச்செயலாளர்கள் தவமணி, விஜயகுமார், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் காந்திகுமார், துணைத்தலைவர் சரவணன், மாநில இளைஞர் பாசறை துணைச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சி மாநில பொதுச்செயலாளர் காவேரி பேசியது:

            கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு மூலம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல லட்சம் ஹெக்டர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. பல இடங்களில் குடிநீர் திட்டங்களும் தென்பெண்ணை ஆற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு ஒரத்தூர் ஏரியில் ரூ.13 கோடி செலவில் பெரிய தடுப்பணை கட்டி அதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளுக்கு நீர் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.  இதனால் தமிழகத்தில் பல வட மாவட்டங்களில் பாசன வசதியின்றி விளை நிலங்கள் பாலைவனமாகிவிடும். 

          கேரள அரசு முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டும் திட்டம் மூலம் தென்மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இதேபோல் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் மூலம் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. தமிழக அரசு பிற மாநில அரசுடன் பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.  என  அவர் பேசினார். நகர செயலாளர் பூபால் நன்றி கூறுகிறார்.


Read more...

ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம்: பா.ம.க.விற்கு வேல்முருகன் சவால்

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிதம்பரம்:

         சிதம்பரத்தை அடுத்த ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

       2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என ராமதாஸ் கூறுகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால் நான் தொடங்கிய கட்சியைக் கலைத்து விடுகிறேன் என தி.வேல்முருகன் சவால் விடுத்தார். மதியுரை குழு உறுப்பினர் பாலகுருசாமி தலைமை வகித்தார்.

 தமிழக வாழ்வுரிமைக்    கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆற்றிய சிறப்புரை:

          இடஒதுக்கீடு போராட்டத்தில் பா.ம.க-விற்காக ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த 21 பேர் குடும்பங்கள் இதுவரை கஷ்டப்பட்டு வருகின்றன. வன்னியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் வன்னியர்கள் நன்கொடையாக அளித்த தொகையில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு தற்போது ராமதாஸ் மனைவி சரஸ்வதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. வன்னியர் சமுதாயத்திற்காக போராடி உயிர் நீத்தவர்கள் பெயரை இக்கட்டடத்திற்கு நினைவாக வையுங்கள் எனக் கேட்டேன். இவையெல்லாம் கேட்டதால்தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.

         கட்சியை விட்டு என்னை நீக்கிய போது தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் என்னிடம், எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள். பெரிய பொறுப்பு தருகிறோம் எனத் தெரிவித்தனர். நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல. தமிழக மக்கள் அனைத்து சாதியினருக்கும் பாகுபாடு பாராமல் பாடுபடத்தான் இந்தக் கட்சியைத் தொடங்கினேன் என்றார். மாநிலத் தலைவர் பேராசிரியர் தீரன், மாநில பொதுச்செயலாளர் காவேரி, இணைப் பொதுச்செயலாளர் போரூர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலாளர் ந.ப.காமராசு, துணைப் பொதுச்செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் சீனுவாசன் நன்றி கூறினார்.






Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்திக்க உள்ளார்

புதன், 4 ஏப்ரல், 2012

பண்ருட்டி:

         தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறினார்.

பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அளித்த பேட்டி


         தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையால் தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையைப் போக்க நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மத்திய அரசிடம் கேட்டு பெற்று சீரான மின்சாரம் கிடைக்க தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டும். கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்துக்கு தரவேண்டும் என தமிழக முதல்வர் பிரதமரிடம் கேட்டுள்ளார். கூடங்குளம் மின்சார உற்பத்தி குறைவானது, மேலும் மின்சாரம் கிடைக்க 6 மாதங்களாகும். எனவே மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களின் துயரைப் போக்க நெய்வேலியிலிருந்து மின்சாரத்தை பெற்றுத் தரவேண்டும்.

           மின்சாரம் இல்லாத நிலையில் மின் கட்டண உயர்வு என்பது தேவையற்றது. பல கிராமங்களில் குடிநீர்கூட கிடைக்கவில்லை. புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு திட்டங்கள், பொருள் உதவிகள் பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. அனைத்து அறிவிப்புகளும் பெயரளவில் உள்ளன. விவசாயிகள் பெற்ற கடன்களையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், கடனையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். பத்திரப் பதிவு கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ரத்த உறவு பிரிவினைக்காவது சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தி.வேல்முருகன்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP