Blogger இயக்குவது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற தலைமைச் செயலகத்தைப் முற்றுகையிடும் போராட்டம்

செவ்வாய், 30 அக்டோபர், 2012




சென்னை:

              கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி போராடி வரும் அணு உலை எதிர்ப்பாளர்கள் 29/10/2012 சென்னை தலைமைச் செயலகத்தைப் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது . இந்த போராட்டத்துக்கு  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ம.தி.மு.க, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி,,நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உள்பட மீனவர்கள் சங்கங்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

            முற்றுகை போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்களை வழியிலேயே தடுத்து கைது செய்ய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து இருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து போராட்டத்துக்கு வந்தவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டார்கள். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.


            போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக் கணக்கானவர்கள் காலை முதலே திரண்டிருந்தனர். முற்றுகை போராட்டத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்,  விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ம.க. சார்பில் வியனரசு, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி பேராசிரியர் தீரன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் ஒரே மேடையில் கண்டன உரை நிகழ்த்துகிறார்க்ள.

ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசியது:-

           கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி கடந்த 450 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள். அறவழியில் போராடும் மக்களை அடக்கு முறையில் ஒடுக்க பார்க்கிறார்கள். அறவழி போராட்டத்தை யாராலும் ஒடுக்க முடியாது. அணு உலையை மூடும் வரை போராட்டம் தொடரும்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

           கூடங்குளம் போராட்ட குழுவினரை மத்திய மாநில அரசுகள் நசுக்கி வருகிறது. பொய் வழக்கு, அடக்கு முறை போராட்டத்தை நசுக்க முடியாது என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இழுத்து மூடு இழுத்து மூடு அணுமின் நிலையத்தை இழுத்து மூடு 144 தடை உத்தரவை வாபஸ் வாங்கு. இவ்வாறு அவர் பேசினார்.

             கூடங்குளத்தில் இருந்து போலீசாரை வெளியேற்று என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ, பழ.நெடுமாறன், வேல்முருகன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்பட அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

            இதேபோல் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன்,  தமிழக வாழ்ரிமை கட்சி நிர்வாகிகள் காமராஜ், காவேரி, சண்முகம், யூனுஸ்கான், வாசுதேவன், ஜெயலட்சுமி,  விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பாலாஜி, இரா.செல்வம்,சி.பி.எம். மக்கள் விடுதலை இயக்க நிர்வாகிகள் சிதம்பரநாதன், பாண்டியன், பாலசுந்தரம், குமார் உள்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Read more...

சாதி மதம் கடந்து தமிழர் நலன் காக்கவும், உலக தமிழர் நலன் காக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது - பண்ருட்டி தி.வேல்முருகன்

சனி, 27 அக்டோபர், 2012

வேலூர்:

 தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர்  பண்ருட்டி தி.வேல்முருகன் வேலூரில் நேற்று  (26/10/2012) அளித்த பேட்டி:

    சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு தமிழர் நலன் காக்கவும். உலக தமிழர் நலன் காக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. ஈழதமிழர் பிரச்சினை, காவிரி, முல்லை பெரியாறு நதிநீர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

           முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே கூட்டு ஒப்பந்தபடி ஈழதமிழர் நலன் காக்க அதில் உள்ள 13வது ஷரத்தை ரத்துசெய்ய ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதை ரத்து செய்தால் இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளகூடாது ஈழதமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             தமிழகத்தில் தினமும் 12 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு அமலில் உள்ளது. இதை சமாளிக்க மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகும் 3000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு பெற்றுதர தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

            பேட்டியின் போது மாநில பொது செயலாளர் காவேரி அமைப்பு செயலாளர் காமராஜ் துணை பொது செயலாளர்கள் சிவகுமார், சுதாகர் உடன் இருந்தனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உளுந்தூர்பேட்டை நகர செயல்வீரர் கூட்டம்

திங்கள், 22 அக்டோபர், 2012

உளுந்தூர்பேட்டை:

   தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உளுந்தூர்பேட்டை நகர செயல்வீரர் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 
     நகர செயலாளர் ரா.பாலா தலைமை வகித்தார். நகர தலைவர் ரா.பிரேம், நகர துணைச் செயலாளர் பி.லட்சுமணன், நகர மாணவரணி செயலாளர் க.வினோத், மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க அமைப்பாளர் கு.வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் க.கோபி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்

1. அடிப்படை வசதியில்லாத உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையின் முன்பு நவம்பர் 3-ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துதல்,

2. உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணியை உடனடியாக முடிக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தையும், ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துதல்,

 3. தொடர் மின்வெட்டை தமிழக அரசு உடனே சரி செய்ய நெய்வேலி மின்சாரத்தை முழுவதுமாக தமிழக மக்கள் பயன்படுத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வரை வலியுறுத்துதல்

உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் என்.எல்.சி. முதல் அனல் மின்நிலையம் முற்றுகைப் போராட்டம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012






நெய்வேலி:



   தமிழகத்துக்கு காவிரியில் நீர்விட மறுக்கும் கர்நாடகத்துக்கு என்.எல்.சி.யில் இருந்து மின்சாரம் வினியோகிப்பதை நிறுத்தவும், தமிழகத்துக்கு முழுமையாக மின்சாரம் அளிக்கவும் வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம் முற்றுகையிடப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

         அதன்படி 20/10/2012 சனிக்கிழமை  காலை யில் நெய்வேலி புதுநகர் 19-வது வட்டத்தில் உள்ள செவ்வாய்சந்தை பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திரண்டனர். நெய்வேலி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண், பெண்கள் வேன், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்தனர்.

          மழை பெய்தபோதும் திட்டமிட்டபடி தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் என்.எல்.சி. முதலாவது அனல் மின்நிலையம் நோக்கி  பல்லாயிரக்கணக்கானோர்  பேரணியாக சென்றனர். ஊர் வலத்தின்போது கர்நாடக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. பேரணியில் கட்சியின் பொது செயலாளர் காவேரி, மாநில தலைவர் பேராசிரியர் தீரன், அமைப்பு செயலாளர் காமராஜ், இணை பொது செயலாளர் சண்முகம் உள்பட கட்சி பிரமுகர்கள், கடலூர் மாவட்ட நெய்வேலி நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

           நெய்வேலி என்.எல்.சி. முதல் மின்நிலையம் அருகே உள்ள “கியூ” பாலம் பகுதியில் ஊர்வலம் சென்ற போது தடுப்பு கட்டைகள் உதவியுடன் போலீசார் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

Read more...

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மேட்டூர் :

  கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலி என்எல்சி அலுவலகம் முன் 20/10/2012 அன்று  முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.

       சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கர்நாடக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் மேச்சேரியில் 18/10/2012 அன்று நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீராசாமி வரவேற்றார். கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன், மாநிலத்தலைவர் தீரன், பொதுச்செயலாளர் காவேரி, அமைப்புச் செயலாளர் காமராஜ், இணை பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேசுகையில்,

             ‘‘தற்போது காவிரி நீரில் தமிழகத்திற்கு உள்ள பங்கினை கர்நாடக அரசு தர மறுக்கிறது. மத்திய அரசு இதனை தட்டிக் கேட்கவில்லை. தமிழகத்திற்கு நீரை தர மறுக்கும் கர்நாடகத்திற்கு தமிழகத்தில் இருந்து ஒரு விநாடி கூட மின்சாரம் வழங்கக்கூடாது. மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து  20ம் தேதி ஒரு லட்சம் பேரை திரட்டி நெய்வேலி என்எல்சி முன் போராட்டம் நடத்த உள்ளோம்,’ என்றார்.

பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் அளித்த பேட்டி

          மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார். 9 ஆயிரம் கன அடி தண்ணீரை கொடுக்க முடியாது என்று கர்நாடக அமைச்சர்களுடன் சேர்ந்து, இவரும் பிரதமரிடம் கூறுகிறார். இது இந்திய ஒருமைப்பாட்டுக்கே பங்கம் விளைவிக்கும் செயல். இது போன்று நடந்து கொண்ட எஸ்.எம்.கிருஷ்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உள்ளபோது கர்நாடக அரசு பிடிவாதமாக இருப்பதால் கர்நாடக அரசை கலைத்து விட்டு இந்திய ராணுவத்தை வைத்து பிரதமர் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் கூறியபடி நாள் ஒன்றுக்கு 2 டிஎம்சி தண்ணீராவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

          தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காத கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும் என தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உற்பத்தியாகும் தனியார் மற்றும் மத்திய தொகுப்பு மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்றார்.

Read more...

தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

புதன், 17 அக்டோபர், 2012

விருத்தாசலம்:


      தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்டம் (மேற்கு) மற்றும் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் நடந்தது. ஒன்றிய தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் செல்வம் வரவேற்றார். மாநில மதியுரைக்குழு உறுப்பினர் பாலகுருசாமி, மேற்கு மாவட்டச் செயலர் சின்னதுரை, மாவட்டத் தலைவர் பாலமுருகன், சதீஷ்குமார், தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

      கூட்டத்தில், அக்டோபர் 20ம் தேதி நெய்வேலியில் நடக்கும் முற்றுகை போராட்டத்தில் அதிகமானோர் பங்கேற்பது, தமிழகத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரம் கொடுப்பதை கண்டித்து ஒரு லட்சம் தமிழர்கள் பங்கேற்கும் முற்றுகை போராட்டம் - பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

ஞாயிறு, 14 அக்டோபர், 2012










கடலூர்:


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்  கடலூரில் சனிக்கிழமை  13/10/2012 அன்று அளித்த பேட்டி :

       உச்சநீதி மன்றமும், காவிரி நதிநீர் ஆணையமும் உத்தரவிட்ட பிறகும், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும், கர்நாடகத்துக்கு நெய்வேலியில் உற்பத்தியாகி செல்லும் மின்சாரத்தை தடுக்கும் வகையில் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு லட்சம் தமிழர்களை அணி திரட்டி நெய்வேலி அனல்மின் நிலையத்தையும், கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்லும் டவர்களையும் முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது.

           இந்த போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் சாதி, மதம், கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழர்களின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். காவிரிநதிநீர் தொடர்பாக மத்திய அரசு கூட்டிய கூட்டத்திலும் எந்தவித முன்னேற்றமும் இல்லையென்ற செய்தியும் வந்துள்ளது.  எனவே மத்தியில் உள்ள காங்கிரஸ் இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களை நடத்தாமல் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் தினசரி 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டதை செயல்படுத்த கர்நாடகத்துக்கு ராணுவத்தை அனுப்பி மத்திய அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளை கொண்டு தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கர்நாடக அரசை சஸ்பெண்டு செய்து விட்டு உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்த கவர்னர் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 12 நாட்களாக தமிழக பதிவு எண் கொண்ட கார்கள், வாகனங்கள் ஒன்று கூட கர்நாடகத்துக்குள் செல்ல முடியவில்லை. ஆனால் இவ்வளவு கொடுமைகளை செய்து கொண்டு இருக்கிற கர்நாடகத்தை மத்தியஅரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.

            இதே நிலை தொடர்ந்தால், கர்நாடகா பதிவு எண் பேரூந்துகள், வாகனங்கள் தமிழகத்தின் எல்லைகளில் சிறைபிடிக்கும் போராட்டத்தை நடத்துவோம். தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட இருக்கிற மின்வெட்டை சரிசெய்கிற வகையில், தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, தமிழகத்தில் உற்பத்தியாகிற ஒட்டு மொத்த மின்சாரத்தையும் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

             பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, நகர செயலாளர்கள் ஆனந்த், ராஜமூர்த்தி, மாநில மாணவரணி துணை செயலாளர் அருள்பாபு, நிர்வாகிகள் அமலநாதன், அமராவதி, சுப்பு, பஞ்சாயுதம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Read more...

நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொடுப்பதை கண்டித்து அக்டோபர் 20-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம்

வியாழன், 11 அக்டோபர், 2012





நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொடுப்பதை கண்டித்து அக்டோபர் 20-ல் முற்றுகைப் போராட்டத்திற்கு    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அழைத்துள்ளார்.

இது குறித்து      தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர்  பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  

   காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுத்து அடம்பிடிக்கும் கர்நாடகத்துக்கு தக்க பாடம் புகட்டுவோம்! தமிழ்நாட்டு நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்துவோம்! நெய்வேலியில் அக்டோபர் 20-ந் தேதி எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம்! நெய்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு லட்சம் தமிழர் ஒன்று திரண்டு பேரணியாக சென்று நெய்வேலி முதலாவது அனல்மின் நிலையத்தை முற்றுகையிடுவோம்! தமிழ்நாட்டு மின்சாரம் தமிழ்நாட்டுக்கே பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிற விவசாயத் தோழர்கள், தொழிலாளர்கள், தொழில்துறையினர், மாணவர்கள் என அனைத்துப் பிரிவினரும் குடும்பம் குடும்பமாக நெய்வேலியில் அக்டோபர் 20-ல் ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டத்தை வெற்றி பெற வைப்போம்!

        சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழராய் ஓரணியில் ஒன்று திரண்டு நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்குக் கொடுப்பதை தடுத்து நிறுத்துவோம்! வாருங்கள் தமிழர்களே! ஒன்று திரள்வோம்!!



தி.வேல்முருகன்


நிறுவனர்


தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் வழங்கக் கூடாது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சனி, 6 அக்டோபர், 2012

கடலூர்:

    தமிழகத்தைப் பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தைத் தரக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
 
      தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூர் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை 04/10/2012 அன்று  நடந்தது.

   கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலர் தி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் ரா.பஞ்சமூர்த்தி, வ.சின்னதுரை, மு.முடிவண்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நகர செயலர் ஆனந்த் வரவேற்றார். மாநில நிர்வாக குழு தி.திருமாவளவன், ராஜேந்திரன், மதியுரைக்குழு உறுப்பினர்கள் ராச.தாண்டவராயன், மு.பாலகுருசாமி, மாநில மகளிரணி துணைச் செயலர் அமராவதி, மாணவரணி தலைவர்கள் ரவி, பிரகாஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


 1. நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும்.

2. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டிப்பது, 

 3. தொடர்ந்து 400 நாட்களாகப் போராடும் கூடங்குளம் மக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் காவல் துறையை ஏவி தாக்கியதைக் கண்டிப்பது,

4. சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடுக்கு வழிவகுத்த மத்திய அரசைக் கண்டிப்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

Read more...

காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம்

வியாழன், 4 அக்டோபர், 2012

   



காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று 04/10/2012 காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.


இது குறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொது செயலாளருமான பெ.மணியரசன் கூறியது,


 கர்நாடகாவில் தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய 4 அணைகளின் மொத்த கொள்ளளவான 116 டிஎம்சியில் 100 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஆனால் அங்கு தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு பொய் சொல்லி வருகிறது.


             காவிரி நதியில் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெறுவதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல், மக்கள் விடுதலை), சிவசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம், சின்னச்சாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கங்கள், தமிழக உழவர் முன்னணி, கொள்ளிடம் விவசாயிகள் சங்கம், தாளாண்மை உழவர் இயக்கம் உட்பட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளை கொண்ட காவிரி உரிமை மீட்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

       காவிரியில் இருந்து வரும் 30ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் இன்று முதல் துவங்குகிறது என்றார்.

திருவாரூர்:

காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று காலை திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய பல்வேறு சங்கங்களை சேர்ந்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர், தினமும் தமிழகத்துக்கு 2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்:

சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.40 மணிக்கு கூடிய காவிரி உரிமை மீட்பு குழுவினர், நாகூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் இன்று காலை குபேரன் தலைமையில் தமிழக இளைஞர் முன்னணியினர் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP