கடலூர்:
முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் புதிதாகத் தொடங்கி இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் கொடியேற்று விழா, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் பொங்கல் பண்டிகை தை முதல் நாள் (15-01-2012) அன்று, "தமிழக வாழ்வுரிமைக் கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் கொடியேற்று விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
செம்மண்டலம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், சூரப்பநாயக்கன்சாவடி உள்ளிட்ட 13 இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. விழாக்களுக்கு, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். நகரச் செயலர் த.ஆனந்த் கொடி ஏற்றினார். மாவட்ட நிர்வாகிகள் கமலநாதன், ராதாகிருஷ்ணன், பொறியாளர் கண்ணன், பாலு, அருள்பாபு, நகராட்சி உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Read more...