Blogger இயக்குவது.
புதுவை ஸ்ரீதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுவை ஸ்ரீதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 09.08.2014 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 09.08.2014 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. கொடியேற்று விழாவில் தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன், தொழிற்சங்க தலைவர் சைதை கோ.சிவா, புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
















Read more...

புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவகத்தில் கையூட்டு வாங்குவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வியாழன், 17 ஜூலை, 2014

புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு உட்பட அனைத்து பணிகளும் இடைத்தரகர்கள் மூலம் கையூட்டு பெற்று வழங்குவதை கண்டித்தும், கையூட்டு வழங்கும் இடைத்தரகர்கள் மற்றும் கையூட்டு பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவகத்தினை முற்றுகையிடும் போராட்டம் இன்று 17.07.2014 (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முற்றுகைப் போராட்டத்தின் போது வட்டார போக்குவரத்து அலுவக ஆணையர் அவர்களிடம் நூறு ரூபாய் இணைத்த மனு அளிக்கபட்டது. அப்போது ஆணையர் அவர்கள் கையூட்டு பெற்று பணிகள் நடைபெறுவதை தடுக்க இணையதள வழி கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைபடுத்த நடைவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.











Read more...

புதுச்சேரியில் கல்வித்துறையில் ரொட்டிப் பால் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு

வியாழன், 10 ஜூலை, 2014

புதுச்சேரியில் பன்னிரெண்டு ஆண்டுகளாக கல்வித்துறையில் ரொட்டிப் பால் வழங்குவதற்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு கடந்த பத்து மாதங்களாக ஊதியம் வழங்காமல் உள்ளதை கண்டித்தும், ரொட்டிப் பால் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தொடர் உண்ணாவிரத போராட்டம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக புதுவை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்.


Read more...

புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞசர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

திங்கள், 31 மார்ச், 2014

புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் சோலை நகர் பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞசர்கள் இருந்து விலகி அப்புனு (ஏ) சுதர்சனன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்களின் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அப்போது பாலாஜி (ஏ) மணிகண்டன் திலிபன் ச.பாபு மற்றும் முக்கிய கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.








 

Read more...

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கத்தை ஆதரித்து ஜெ.ஜெயலலிதா அவர்கள் பிரசாரம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வெள்ளி, 28 மார்ச், 2014

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் 27.03.2014 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பிரசாரம் செய்தார்.

பிரசார கூட்டத்தில், கூட்டணி கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா. விசுவநாதன், புதுச்சேரி மாநிலக் அதிமுக செயலாளரும், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன், புதுச்சேரி மாநிலக் கழக துணைச் செயலாளரும், மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான . புருஷோத்தமன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

























Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP