Blogger இயக்குவது.
கருப்பு சரவணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருப்பு சரவணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சீர்காழி அருகே திருநகரியில் ஓ.என்.ஜி.சி. சார்பில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை உடனடியாக கைவிட நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 14 ஜூலை, 2014

நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரில் 13.07.2014 அன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்புசரவணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராமகுமரகுரு, எழிலரசன், தீபன், பாரி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் புதுராசா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. சீர்காழி அருகே திருநகரியில், ஓ.என்.ஜி.சி. சார்பில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். விளைநிலங்கள் வீட்டு மனைப்பட்டாவாக மாறிவருவதை தடுக்கவும், இடைதரகர்களாக செயல்படுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசை கேட்டுக் கொள்வது.

2. பெரம்பூரில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சிதம்பரம் - சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபடுவது.

3. விவசாயிகள் வாங்கிய பழைய கடனை தள்ளுபடி செய்து, புதிய கடன் வழங்க அரசை கேட்டுக் கொள்வது.

4. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள குளம், குட்டைகள், பாசன வாய்க்கால்கள், ஏரிகள் ஆகியவைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க அரசைக் கேட்டுக் கொள்வது.

5. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் வாங்கிய மற்றும் திரும்ப செலுத்திய கடன் விவரங்கள், அடமானம் பெற்றுள்ள நகைகள் தரமானதாக உள்ளனவா? போன்ற விவரங்கள் கூட்டுறவு வங்கியின் கணக்கு வழக்கு விவரங்கள் ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், அந்தந்த வங்கியில் ஒட்டி விளம்பரம் செய்ய கேட்டுக்கொள்வது.

6. கல்லணையில் இருந்து காட்டூர் வரை போடப்பட்டுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் தரமான தார்சாலை அமைக்க பொதுப்பணித்துறையை கேட்டுக் கொள்வது.

7. நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றுவது.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Read more...

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.பாரதிமோகனுக்கு வாக்கு சேகரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பிரசாரம்

திங்கள், 17 மார்ச், 2014

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.பாரதிமோகன் அவர்களுக்கு நேற்று (16.03.2014)  வாக்கு சேகரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன், மாவட்டசெயலாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் திரு.ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சக்தி உள்ளிட்டோர் வேட்பாளருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.




Read more...

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொறையாறு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

புதன், 22 ஜனவரி, 2014

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், இத்திட்டத்திற்காக பெரிய நிறுவனங்களுக்கு துணைப் போகும் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொறையாறு பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 22.01.2014 அன்று நடைபெற்றது.

முற்றுகை போராட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் பி.வினோத், மாவட்டஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, மகளிர் அணி மாவட்ட செயலர் ஆர். சாந்தி உள்பட சுமார் 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Read more...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொள்ளிடம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வெள்ளி, 3 ஜனவரி, 2014

இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 227 பேரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், மீனவர்களை சிறைபிடித்த இலங்கை அரசை கண்டித்தும், துரித நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று 03.01.2014 (வெள்ளிக்கிழமை) நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொள்ளிடத்திலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் புலீஸ்வரியம்மன் கோவிலில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பேரணியாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு கே. சரவணன் தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் சிவா, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் எழிலரசன், மாவட்ட தலைவர் சுதாகர், மாவட்ட துணை செயலாளர்கள் வினோத், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் சின்னதுரை, சீர்காழி ஒன்றிய செயலாளர் செங்கோவன், சீர்காழி நகர செயலாளர் கணேசன், வைத்தீஸ்வரன்கோவில் நகர செயலாளர் சிவக்குமார், சீர்காழி நகர தலைவர் செந்தில், சீர்காழி மோட்டார் சங்க தலைவர் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை கொள்ளிடம் காவல்துறையினர் கைது செய்தனர்.



 

Read more...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சீர்காழியில் ரயில் மறியல் போராட்டம்

செவ்வாய், 12 நவம்பர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து இன்று செவ்வாய்கிழமை (12.11.2013) நாகை மாவட்டம் சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் மதிமுக, த.பெ.திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ரயில் மறியலில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர். 





Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்ககூடாது என வலியுறுத்தி நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

வெள்ளி, 8 நவம்பர், 2013



இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்ககூடாது, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சிங்கள இராணுவத்தின் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியாவை படுகொலை செய்த ராசபக்சே அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துக் கொள்ள அழைக்கிறோம்.

இடம்: இரயில் நிலையம், சீர்காழி - நாகை மாவட்டம்
நாள்: 12/11/2013 ( செவ்வாய்க்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி அளவில்


Read more...

தமிழின விரோத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் - 300 பேர் கைது

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைக் கண்டித்தும், 65 தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் வைத்துள்ள இலங்கை அரசைக் கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் தமிழின விரோத மத்திய அரசைக் கண்டித்தும், இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும்  நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் அவர்களின் தலைமையில் 17.08.2013 (சனிக்கிழமை)  மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன், சிவா உள்ளிட்ட  300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 







Read more...

தமிழின விரோத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைக் கண்டித்தும், 65 தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் வைத்துள்ள இலங்கை அரசைக் கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் தமிழின விரோத மத்திய அரசைக் கண்டித்தும், இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.

நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் அவர்களின் தலைமையில், மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 17.08.2013 (சனிக்கிழமை) காலை 10.00 மணி அளவில் நடைபெறஉள்ளது. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.




Read more...

சீர்காழியில் சூன் 29 ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் கூட்டம்

திங்கள், 10 ஜூன், 2013

சீர்காழியில் சூன் 29 ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது..






Read more...

காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை கைவிட நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 20 மே, 2013

கொள்ளிடம்:

   நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், மாவட்ட செயற்குழு கூட்டம் 19/05/2013 அன்று  நடைபெற்றது.

   மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சிவா வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட தலைவர் சுதாகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  ஒன்றிய மகளிரணி செயலாளர் சத்யா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் வினோத், இளைஞரணி பாசறை தலைவர் சின்னதுரை, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் எழில், சீர்காழி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபு, குத்தாலம் ஒன்றிய செயலாளர் குணசேகர், ஸ்டாலின், ஒன்றிய துணை செயலாளர் வள்ளி, சிறுபான்மை பிரிவு தலைவர் பாஷா, பிரேம்குமார், மூர்த்தி, நடராஜன், கமலேஷ், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. சீர்காழியில் வரும் ஜூன் மாதம் 29ம்தேதி, நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு, ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் அதிகமானோர் கலந்துகொண்டு, கூட்டத்தை சிறப்பாக நடத்துவது.

2. காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

3. விளைநிலங்கள் மனைப்பட்டாவாக மாறிவருவதை தடைசெய்ய முதல்வரை கேட்டுக் கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more...

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொள்ளிடத்தில் சாலை மறியல் போராட்டம்

திங்கள், 10 டிசம்பர், 2012





கொள்ளிடம்: 
 
      நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடத்தில் உள்ள சீர்காழி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 09/12/2012 (ஞாயிற்றுக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

      போராட்டத்திற்கு கட்சியின் மாநில துணைச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் சிவா, ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஆறு எழிலரசன், ஒன்றிய தலைவர் கலையரசன், சீர்காழி நகரத் தலைவர் ரமேஷ், வைத்தீஸ்வரன்கோவில் நகர அமைப்பாளர் செந்தில், ராமலிங்கம், ராஜதுரை, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சரணவன், மாவட்ட துணை தலைவர் சத்யா, அமுதா,கண்மணி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர்.

             போராட்டத்தின்போது, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு கர்நாடக அரசு 30 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி உரிய நீரை காவிரியில் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், குருவை, சம்பா சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

     அப்போது கர்நடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டரின் உருவ பொம்மையை கொள்ளிடம் கடைவீதியில் தீ வைத்து எரிக்கபட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70 பெண்கள் உள்பட 250 பேரை செம்பனார்கோவில் காவல் துறை ஆய்வாளர் மூர்த்தி கைது செய்தனர். இந்த   சாலை மறியில் போராட்டத்தின் காரணமாக சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP