Blogger இயக்குவது.
தி.திருமால்வளவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.திருமால்வளவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி பெயரில் மருத்துவக்கல்லூரி அமைத்து தர புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சனி, 12 ஜூலை, 2014

புதுக்கோட்டை: 

 புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (11.07.2014) நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் பாபு வரவேற்றார். மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் (தெற்கு) பழனியப்பன், பெருநகர செயலாளர் அப்புக்குட்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், துணை செயலாளர் மாரியப்பன், மகளிரணி செயலாளர் மாலாஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணதேவா துவக்க உரையாற்றினார். இதில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தி.திருமால்வளவன், தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன், மாநில தமிழர் படை தலைவர் ஜோதிலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

 மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

 1. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி பெயரில் மருத்துவக்கல்லூரி அமைத்து தர வேண்டும்

 2. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் 

 3. புதுக்கோட்டை நகரத்திற்கு உட்பட்ட காமராஜபுரம், மச்சுவாடி, போஸ்நகர், ஜுவாநகர், நரி மேடு, தைலாநகர், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு மினி பேருந்து வசதி செய்துதர வேண்டும். 

 4. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் முடித்து குருக்கே தடுப்பணைகளை ஏற்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

 என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
















Read more...

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம், கெங்கைகொண்டான் பேரூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டம்

திங்கள், 10 பிப்ரவரி, 2014

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம், கெங்கைகொண்டான் பேரூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டம் எலுமிச்சை கிராமத்தில் நடந்தது.

ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக் குழுத் தலைவர் தி.திருமாவளவன், மாநில தமிழர் படை தளபதிகள் அறிவழகன், முருகன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், சிவலோகநாதன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சண்முகம் வரவேற்றார். கெங்கைகொண்டான் பேரூர் தலைவர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் பங்கேற்றனர். இறுதியாக ஊராட்சி செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:

1. சேலத்தில் 23.02.2014 அன்று நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா மாநாட்டிற்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் பங்கேற்பது..

2. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், கடலூர் தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது.

3. குண்டும் குழியுமாகியுள்ள விருத்தாசலம் - வடலூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

சேலத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாநாட்டில் கடலூர் மாவட்டத்தின் சார்பில் பெரும் திரளாக கலந்து கொள்ள முடிவு

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

 

கம்மாபுரம்:

வருகிற 23-ந்தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் கடலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழுக் கூட்டம்

கம்மாபுரம் ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் ஊ.மங்கலம் எலுமிச்சை கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், சிவலோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகக்குழு தலைவர் தி.திருமால்வளவன் கலந்து கொண்டு பேசினார். இதில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து கடலூர், சிதம்பரம் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்யவது, வருகிற 23-ந் தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தனி வாரியம்

சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதை தடுக்கும் வகையில் அரசே ஓட்டுநர்களுக்கு பயிற்சியளித்து சான்றிதழ் வழங்க வேண்டும். ஓட்டுநர்களின் வாழ்வுரிமையை மேம்படுத்த தனி வாரியம் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில தழிழர் படை தளபதிகள் அறிவழகன், முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், வாழைச்செல்வம், கெங்கைகொண்டான் பேரூர் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் வினோத்குமார் நன்றி கூறினார்.
 

Read more...

கடலூர் மாவட்ட வன்னியர் சங்கக் கட்டடத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கடலூர் மாவட்ட வன்னியர் சங்கக் கட்டடத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாக குழுத் தலைவர் தி.திருமால்வளவன் அவர்கள் கடலூர் எஸ்பி ராதிகா, கோட்டாட்சியர் ஷர்மிளா ஆகியோரிடம் சனிக்கிழமை (07.12.2013) அளித்த மனு விவரம்:

கடலூர் மஞ்சக்குப்பம் சாலையில் உள்ள கட்டடத்தை, ராஜராஜேஸ்வரி என்பவரிடமிருந்து பவர் எழுதி வாங்கி, போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி மையத்தை நடத்தி வந்தேன். அந்தக் கட்டத்தின் ஒரு பகுதியை அப்போது பாமக சட்ட மன்றத் உறுப்பினராக இருந்த எனது சகோதரர் வேல்முருகன், தனது அலுவலமாகப் பயன்படுத்தி வந்தார்.

வேல்முருகன் பாமகவில் இருந்து விலக்கப்பட்ட பிறகு, இந்தக் கட்டடத்துக்கு பாமகவினர் உரிமை கொண்டாடியதைத் தொடர்ந்து, பிரச்னை ஏற்பட்டது. அப்போது கட்டடத்தை சீல் வைக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எங்களிடம் கட்டடத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும், இந்த பிரச்னைக்கு உரிமையியல் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அதுவரை கட்டடத்தை நாங்கள் அனுபவித்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், இந்தக் கட்டத்தை எங்களிடம் ஒப்படைக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி கிழக்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி கிழக்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் காடாம்புலியூரில் நடந்தது.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் பழனி, உக்கரவேல், என்.எல்.சி.அன்பழகன், ராசு முன்னிலை வகித்தனர். தி.திருமால்வளவன், மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், மாநில துணைத் தலைவர் சக்திவேல், மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. "தானே" மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இரண்டு ஏக்கர் நிலம் வைத்தவர்களுக்கும் இலவச விவசாய மின் மோட்டார் வழங்க வேண்டும்.

2. வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையை விரைவில் துவங்க வேண்டும்.

3. விவசாயம், குடிநீருக்கு தினமும் 10 மணிநேரம் மின்சாரம் வழங்க வேண்டும்.

4. காடாம்புலியூர் ஊராட்சி வேலங்குப்பம், காட்டாண்டிக்குப்பம் இடையே பாலம் அமைத்து தார் சாலை அமைக்க வேண்டும்

என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் 17.8.2013 அன்று மாலை 6 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு ஜெகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில நிர்வாககுழு உறுப்பினர் தி.திருமால்வளவன், மாநில துணை பொதுச்செயலாளர் உ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநில மாணவர் சங்க தலைவர் இரவி.பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தில்லை, ஒன்றிய தலைவர் இராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகி இராசேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ப.ஆண்டவர்செல்வம், வாசு.சரவணன், எ.கரிகாலன், பேரூர் செயலாளர் கி.பரசுராமன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் இரா.விஜயகுமார், சிதம்பர நகர செயலாளர் தில்லை நாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

புதன், 31 ஜூலை, 2013

புவனகிரி:

புவனகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/07/2013 அன்று நடந்தது.

ஒன்றிய செயலாளர் கரிகாலன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா வரவேற்றார். மாவட்ட நிர்வாகக் குழு காசிநாதன், ஒன்றியத் தலைவர் செந்தில்குமார், நகர பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக் குழு தலைவர் தி. திருமால்வளவன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன் பங்கேற்று பேசினர். மாநில நிர்வாகக் குழு ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ஆளவந்தார், உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

2. வெள்ளாற்றின் வழியே கடல்நீர் உட்புகுவதை தடுக்கவும், மழை காலங்களில் வெள்ளாற்றில் மழை நீர் கடலில் கலக்காமல் சேமிக்கும் பொருட்டு சமநீர் அணை உரிய இடத்தில் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








Read more...

கடலூர் நகர பாதாள சாக்கடைத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நகர நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 8 ஜூலை, 2013

கடலூர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நகர நிர்வாகக்குழு கூட்டம் கடலூர் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07/07/2013) அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் ராஜேஷ்பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சத்யாமுருகன், துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், வக்கீல் லெனின், இளைஞரணி தண்டபாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஆனந்த் வரவேற்றார். கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு தலைவர் தி. திருமால்வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.  மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மகளிர்அணி அமராவதி, மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, இளம்புயல் பாசறை கமலநாதன், தமிழர்படை பிரசன்னகுமார், இளைஞரணி செந்தில், மாணவர்அணி அருள்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசை கண்டித்து வருகிற 9-ந்தேதி (செவ்வாய்கிழமை) நெய்வேலியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் நகரம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது.

2.  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்வது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாமல் உள்ள நிர்வாகத்தை கண்டிப்பது.

3. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவடையாததால் ரோடுகளில் குண்டும், குழியுமான சாலையினால் விபத்துகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது. ஆகையால் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்பட கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற்ப்பட்டன.

Read more...

ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக் குழு கூட்டம்

சனி, 29 ஜூன், 2013

ஸ்ரீமுஷ்ணம் :

ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக் குழு கூட்டம் 26/06/2013 அன்று நடந்தது.

ஒன்றிய செயலாளர்  முருகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சீனுவாசன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் மனோகர், பொருளாளர் விஜயரங்கன், ஒன்றிய இளைஞர் அணி பாசறை தலைவர் மலர்மன்னன், தேவநாதன், நகர இளைஞர் அணி தலைவர் கார்த்திகேயன், சந்தோஷ்குமார். நகர தலைவர் மதன்ராஜ், துணை தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு தி.திருமால்வளவன் பேசினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:


1. செப்டம்பர் 28ம்தேதி கடலூரில் நடைபெறும் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது, 

2. ஸ்ரீமுஷ்ணத்தை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு வழங்க வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். 

3.மும்முனை மின்சாரம் 20மணி நேரம் இலவசமாக வழங்க வேண்டும்,

4. ஸ்ரீமுஷ்ணம் பகுதி பாசன ஏரிகளை தூர் வார வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தெற்கு மாவட்ட செயலாளர் முடிவண்னன், மாநில நிர்வாக குழு ராஜேந்திரன், அமைப்பு குழு தமிழரசன், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விவசாய செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றியம் (மேற்கு) பொதுக் குழுக் கூட்டம்

திங்கள், 17 ஜூன், 2013

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் (மேற்கு) தொரப்பாடி பேரூராட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், புதுப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (16/06/2013) நடந்தது.

அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் ஆ.ராஜகோபால் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ம.செந்தாமரை, பொருளர் பி.நாராயணன், துணை செயலர் ந.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொரப்பாடி பேரூர் நகரச் செயலர் துரை.குமார் வரவேற்றார்.

மாநில நிர்வாகக் குழுத் தலைவர் தி.திருமால்வளவன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் இரா.பஞ்சமூர்த்தி, இளைஞரணிச் செயலர் கி.சிவசண்முகம், விவசாய அணித் தலைவர் ஜி.ராஜேஷ், தொண்டரணிச் செயலர் ஜோ.மருதநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொரப்பாடி நகரத் தலைவர் மா.செ ல்வரத்தினம் நன்றி கூறினார்.

Read more...

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

ஞாயிறு, 16 ஜூன், 2013

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தருமபுரியில் சனிக்கிழமை (15/06/2013) நடைபெற்ற  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தக் கூட்டத்துக்கு, மாநிலத் துணைப் பொதுச் செயலர் தவமணி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், மலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருமால்வளவன், மகளிரணிச் செயலர் ஜெயலட்சுமி, மாநில வழக்குரைஞர் அணி தலைவர் காந்திகுமார், துணைச் செயலர் சரவணன், மாவட்ட தலைவர் முன்சீப் செல்வம், மாவட்ட செயலர்கள் முனிரத்தினம், பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கட்சியின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினர்.
 
கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு சில இடங்களில் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்துக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகளால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மோசடைந்துள்ளன. எனவே, அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க வேண்டும்.

2. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்து வங்கிகளையும் கல்விக் கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. ஆனால், பல்வேறு வங்கிகள் கல்விக் கடனை வழங்காமல் மாணவர்களை அலைக்கழித்து வருகின்றன. இத்தகைய வங்கிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
3. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்த பிறகும் பல்வேறு தனியார் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு பயிற்சி என்ற பெயரால் கொள்ளை லாபம் ஈட்டி வருவதைக் கண்காணித்து தடை செய்ய வேண்டும். 

4. விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது பாராட்டுக்குரியது. தடங்கம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கொட்டப்படும் தருமபுரி நகராட்சி கழிவுகளால் சுற்றுப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுகளை வேறு இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
 
5.வெண்ணாம்பட்டி, குமாரசாமிப்பேட்டை, அதியமான்கோட்டை, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அறிவிப்பு வெளியாகியும் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை துரிதமாக முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.




 

Read more...

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கோரிக்கை

ஞாயிறு, 26 மே, 2013

அரசு நிர்ணயித்த  கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கோரிக்கை (25/05/2013) விடுத்துள்ளது.








Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி வடக்கு ஒன்றிய பொதுக் குழுக் கூட்டம்

செவ்வாய், 7 மே, 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி வடக்கு ஒன்றிய பொதுக் குழுக் கூட்டம் அங்குசெட்டிப்பாளையத்தில் சனிக்கிழமை (04/05/2013) நடந்தது. 

மாவட்டச் செயலர் இரா.பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சு.க.ஜெயகாந்தன், ஒன்றியக் குழு உறுப்பினர் ப.ராமானுஜம், ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரா.தேவராசு, இளம்புயல் பாசறைச் செயலர் டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியச் செயலர் இரா.சுரேந்தர் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் இரா.சக்திவேல், மாநில தமிழர்படை கி.ஜோதிலிங்கம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஒன்றியத் தலைவர் சி.குப்புசாமி நன்றி கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தி.திருமால்வளவன் பேசியது:

நம் சமூகத்தாருக்கு நல்லக் கல்வியை அளித்து பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் கட்சித் தலைவர்களிடம் இல்லை என்றார் அவர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 

1. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 

2. நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்கு முழுமையாக தரவேண்டும்,

3. இனக்கலவரம் வராமல் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுவது,

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.


Read more...

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளம்புயல் எழுச்சி பாசறை மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

சனி, 13 ஏப்ரல், 2013





கோடைக்காலத்தை முன்னிட்டு விவசாயிகளின் குறுவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கு குறைந்த பட்சம் 12 மணி நேரம் தொடர் மும்முனை மின்சாரமாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளம்புயல் எழுச்சி பாசறை மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில் தெரு தில்லைகோவிந்தராஜா மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். பாசறை மாவட்டச் செயலாளர் ஆர்.கே.குமரன் வரவேற்றார். நிர்வாகிகள் சிவபுரி ஆ.சிவா, ப.சுரேஷ், ந.சிவபாலன், பந்தல் வெங்கடேசன், ரா.தீபக்ராஜ், பி.சுதாகர், ஆர்.தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புக்குழுத் தலைவர் தி.திருமாமால்வ
ளவன் சிறப்புரையாற்றினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் உ.கண்ணன், மாநில மதியுரைக் குழு மு.பாலகுருசாமி, மாநில நிர்வாகக்குழு ச.க.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் மு.ஆளவந்தார், ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆர்.ஜி.தமிழ். ச.கோபு, ஆண்டவர் செல்வம், ம.கஜேந்திரன், வாசு.சரவணன். பரசுராமன், ஏ.கரிகாலன், கோ.முருகன், என்.எஸ்.டி தில்லை, கு.ப.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகரச் செயலாளர் கோவி.தில்லைநாயகம் நன்றி கூறினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  

 1. ஸ்ரீமுஷ்ணம் பகுதியை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, 

2.கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதி அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி வறட்சி நிவாரணம் வழங்கக் கோருவது, 

3. குறுவை சாகுபடிக்கு விதைநெல் மற்றும் வேளாண் இடுபொருள்கள் முன்கூட்டியே தங்கு தடையின்றி வழங்க வேளாண்துறையை கோருவது, 

4.மே.18 சீர்காழியில் நடைபெறும் இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் உயிர்நீத்த தியாகிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது, 

5.கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்தும், சுவர் விளம்பரத்தை அழிக்கும் சமூக விரோத கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோருவது 


உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

குறிஞ்சிப்பாடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

புதன், 16 ஜனவரி, 2013

குறிஞ்சிப்பாடி:

          குறிஞ்சிப்பாடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க  விழா  நடந்தது. நகர செயலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி பகுதியில் மீனாட்சிப்பேட்டை, ரயிலடி, வி.எம்.பி., நகர், பஸ் நிலையம், சாவடி, கடைவீதி, அண்ணா நகர் உட்பட பல இடங்களில் மாநில நிர்வாகக் குழுத் தலைவர் திருமால்வளவன் கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். இதில் வரதராஜன்பேட்டை தலைவர் தனுசு, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, ஒன்றிய செயலர் ஐயப்பன், தனசேகர், ராஜவெங்கடேசன், வைத்தியநாதன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.


Read more...

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

சிதம்பரம்:


கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை பொறுப்பாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

பாசறை மாவட்டச்செயலர் ராஜசேகரன்  தலைமை தாங்கினார். தலைவர் மாரியப்பன் வரவேற்றார். ராம்ஜி, அருள்மூர்த்தி,  பாலாஜி, புகழேந்தி, செல்வகுமார், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். மாநில  நிர்வாக குழுத் தலைவர் தி.திருமால்வளவன் பேசினார்.கூட்டத்தில், மாநில துணை  பொதுச் செயலர் கண்ணன், மாநில மதியுரைக்குழு உறுப்பினர் பாலகுருசாமி,  மாவட்டச் செயலர் முடிவண்ணன், பிரகாஷ், வீரசோழன், மாநில மாணவர் பாசறை துணை  செயலர் அருள்பாபு, மோகன், முத்துகுமார், தீலிப்குமார், நாராயணன்,  சின்னமருது உட்பட பலர் பங்கேற்றனர். வினோத் நன்றி கூறினார்.

 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


கடலூர் தெற்கு மாவட்ட  மாணவர் பாசறைக்கு அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

புதிய  பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP