முசிறி:
முசிறியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கட்சி கொடியேற்றுதல் மற்றும் பள்ளி மாணவ இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு, மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் சுரேஷ்ராஜா வரவேற்றார். புறநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில துணை பொதுசெயலாளர் முத்து, விவசாய அணி செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் காமராசு, துணை செயலாளர் ரவி ஆகியோர் ஆமூர், கோட்டூர், மணப்பாளையம், பெரமூர், முசிறி, அய்யம்பாளையம், சித்தாம்பூர், ஏவூர் உட்பட, 20க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்தும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கியும் பேசினார். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, சுப்பிரமணியன், கிளைத்தலைவர்கள் கதிர்வேல், பிரபாகரன், சக்திவேல், பழனி, கண்ணதாசன், ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.
Read more...