Blogger இயக்குவது.
தமிழ்நேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வியாழன், 23 ஏப்ரல், 2015

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாபு தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஹரிதாஸ், தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாக்கண்ணு முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அண்ணாதுரை வரவேற்றார். மாநில துணை பொது செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான தஞ்சை தமிழ்நேசன் சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் திருவையாறு கஜேந்திரன், தஞ்சை சேகர், அம்மாப்பேட்டை தமேந்திரன், மாவட்ட நிர்வாகி சுரேஷ் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி நிர்வாகி வெங்கடேசன் நன்றி கூறினார். 
20 அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் மாபெரும் தமிழர் நீதி பேரணி வரும் 28ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை பனகல் மாளிகையிலிருந்து தொடங்கி கிண்டி ஆளுநர் மாளிகை வரை நடக்கிறது. கொலைக்கார ஆந்திர அரசையும், கொலைக்கு உடந்தையான மத்திய அரசையும் கண்டித்து நடக்கும் பேரணியில் தஞ்சை மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 14.03.2015 அன்று நடைபெற உள்ளது

செவ்வாய், 10 மார்ச், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 14.03.2015 அன்று காலை10.00 மணிக்கு கும்பகோணம் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.   


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வத்தலகுண்டில் 11.02.2015 அன்று நடைபெற்றது

வியாழன், 12 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வத்தலகுண்டில் 11.02.2015 அன்று நடைபெற்றது. 





Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

புதன், 7 ஜனவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 06.01.2015 அன்று நடைபெற்றது.





Read more...

மழையால் பாதிக்கப்பட்ட நிவாராம் வழங்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

வியாழன், 30 அக்டோபர், 2014

மழையால் பாதிக்கப்பட்ட நிவாராம் வழங்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 
 

Read more...

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து களப்பணியாற்ற சட்டமன்ற தொகுதி வாரியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி செயலாளர்கள் நியமனம்

புதன், 19 மார்ச், 2014

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து களப்பணியாற்ற சட்டமன்ற தொகுதிவாரியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தமிழ்நேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:


தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து பிரசாரம் செய்யவும், களப்பணிகள் ஆற்றவும் சட்டமன்ற தொகுதி வாரியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த தொகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. பேராவூரணி சட்டமன்ற தொகுதி:

மாவட்ட தலைவர் மல்லிப்பட்டினம் பசீர்,
சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் அஸ்லாம் அகமது,

2. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி:

மாவட்ட செயலாளர் அப்பாக்கண்ணு,
பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் காசி நாதன்,
ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் விஜயக்குமார்,
திருவோணம் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி,
மாவட்ட அமைப்பாளர் தனபாலகிருஷ்ணன்,
மாவட்டதுணை தலைவர் குமார்

3. தஞ்சை சட்டமன்ற தொகுதி:


மாநகர செயலாளர் முகம்மது எகியா,
தஞ்சை ஒன்றிய செயலாளர் தீனா,
மாநில மாணவரணி துணை செயலாளர் முகம்மதுசபீர்அலி

4. திருவையாறு சட்டமன்ற தொகுதி:

ஒன்றிய செயலாளர் சுயம்பு. கஜேந்திரன்,
மத்திய மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாபு ஆகியோரும்,

5. மன்னார்குடி சட்டமன்ற தொகுதி:


மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம்,
மன்னை ஒன்றிய செயலாளர் பாஸ்கர்,
மன்னை நகர செயலாளர் கண்ணதாசன்

ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 04.01.2014 அன்று தஞ்சையில் நடைபெறும்

சனி, 28 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜனவரி 4ம் தேதி தஞ்சையில் நடைபெற உள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் துரை.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அண்ணா.வினோத், பொருளாளர் ரவீந்திரநாயுடு, துணை செயலாளர் சேது அண்ணாமலை, மாநில இளைஞரணி துணை செயலாளர் முகமது ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாக்கண்ணு வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் பாபு, மத்திய மாவட்ட அமைப்பாளர் மோகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஜோதிவேல், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சதீஷ்குமார், திருவையாறு ஒன்றிய செயலாளர் சுயம்பு. கஜேந்திரன், நகர இளைஞரணி தலைவர் செந்தில், துணை செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய மாணவரணி செயலாளர் விக்னேஸ்வரன், மாவட்ட இளைஞரணி பொருளா
லர் கோகுல்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் முகமதுஎகியா நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை வரும் 4ம் தேதி தஞ்சையில் நடத்துவது,

2. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகைத்தரும் கட்சியின் நிறுவன தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது,

3. தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. பிப்ரவரி 2–ந் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு தஞ்சை மாவட்ட சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்பது

உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை மத்திய மண்டல புதிய நிர்வாகிகள் நியமனம்

வியாழன், 24 அக்டோபர், 2013

தஞ்சை:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மத்திய மண்டல புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அனுமதியுடன் பொதுச்செயலாளர் காவேரி, அமைப்பு செயலாளர் காமராசு ஆகியோர் பரிந்துரையுடன் மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார்.

புதிய நிர்வாகிகள் விபரம்:

மாவட்ட செயலாளராக கார்த்திகேயன், மாவட்ட தலைவராக அண்ணா வினோத், பொருளாளராக ரவீந்திர நாயுடு, அமைப்பாளராக மோகன், வழக்கறிஞர் பிரிவு செயலாளராக ஜோதிவேல், இளைஞரணி செயலாளராக பாபு, இளைஞரணி தலைவராக ஸ்டீபன் ஆரோக்கியதாஸ், தஞ்சை நகர செயலாளராக முகமது எகியா, நகர தலைவராக லோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதன், 9 அக்டோபர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில துணைப்பொதுச்செயலாளர் தமிழ்நேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துமாரியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 
1. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் அக்டோபர் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

2. இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது.

3. செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டும்.

4. இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்துவது

உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more...

தஞ்சையில் இருந்து சென்னைக்கு, சென்னையில் இருந்தும் தஞ்சைக்கு விரைவு ரெயில் இயக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ட

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013



தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம்  தஞ்சையில் 26/08/2013 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் காவேரி தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆர்.பி.தமிழ்நேசன் தொடக்க உரை ஆற்றினார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்   முத்துமாரியப்பன் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில இணைப்பொது செயலாளர் சண்முகம், அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணை பொது செயலாளர்கள் கனல்கண்ணன், சரவணன், மாநில பொது செயலாளர் சாமிநாதன், துணைப்பொதுச்செயலாளர் சரவணதேவா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முகமதுஆரிப் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  செல்வம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வந்தும் இன்று வரை விவசாயிகள் பயிரிட முடியவில்லை. எனவே பயிர்க்கடன், உரக்கடன், விதைநெல் போன்ற இடுபொருட்களை உடனே வழங்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

2. தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் உள்ள கழவறைகள் சுகாதாரக்கேடுகளுடன் உள்ளன. எனவே சரிவர பராமரிக்காத கழிவறைகளின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மறு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் நகராட்சியே நடத்த வேண்டும்.

3. தஞ்சையில் இருந்து சென்னைக்கு, சென்னையில் இருந்தும் தஞ்சைக்கு விரைவு ரெயில் உடனே அறிவிக்க வேண்டும். தஞ்சையில் இருந்த முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும்.

4. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் காய்கறி வணிக சந்தை அமைக்க வேண்டும்.

5.  தஞ்சை மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், ஒன்றியம் வாரியாக கிளை கூட்டங்கள் நடத்தி கொடியேற்று விழா நடத்துவது

 என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

காவிரி நதிநீர் உரிமையை பெற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற மறியல் போராட்டம்

சனி, 22 டிசம்பர், 2012

 


            
           காவிரி நதிநீர் உரிமையை பெற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற மறியல் நேற்று 21/12/2012 நடைபெற்றது.

       தமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்,

        கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்களை வலியுருத்தியும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக் கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில், நேற்று 21/12/2012 தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. அதன்படி தஞ்சை, சிதம்பரம்,  திருவாரூர், திருச்சி ஆகிய  இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுப்பட்ட  பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை

தஞ்சை மாவட்டத் தலைநகரான தஞ்சாவூரில், காலை 10 மணியளவில், சாந்தப் பிள்ளை கேட் அருகிலுள்ள காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை 1000க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் முற்றுகையிட்டனர். காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் மறியலுக்குத் தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வலிவலம் மு.சேரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன்,  தமிழக மக்கள் சனநாயகம் கட்சித் தலைவர் புதுக்கோட்டை கே.என்.செரிப்,  விடுதலைத் தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், புதிய தமிழகம் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுகுமார், மனித நேய மக்கள் கட்சி எஸ்.எஸ்.நூறுதீன், பாரதிய சனதா கட்சி எஸ்.பி.சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் திரளாக கலந்துக் கொண்டனர்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP