Blogger இயக்குவது.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

திங்கள், 31 மார்ச், 2014

தருமபுரி  நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 30.03.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு துறை  அலுவலகம் முன்பு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

கூட்டத்திற்கு மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன்,   தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர்  மே.ப.காமராஜ், இணைப் பொது செயலாளர் சண்முகம், துணை பொதுச் செயலாளர் சி.தவமணி, மாவட்டச் செயலாளர் முனிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:
உலகத்தில் தொன்மையான நாகரீகம் கொண்டது தமிழனின் நாகரீகம். ஆனால், இன்றைக்கு தமிழன் உலக அரங்கில் தலை குனிந்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறான். தங்களது உரிமைகளுக்காக இலங்கையில் போராடிய தமிழ் உறவுகளை கொத்துக்கொத்தாக தடை செய்யப்பட்ட குண்டுகளை பொழிந்து அழித்தவர் இலங்கை அதிபர் ராஜபட்ச. அவருக்கு ராணுவ உதவி செய்தது காங்கிரஸ் மத்திய அரசு. அதற்கு உறுதுணையாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

இந்தநிலையை மாற்றி தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும். ராஜபட்சவுக்கு சர்வதேச நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரவேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி தமிழன் தலைநிமிர்ந்து வாழ வழி செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருக்கின்றன.

60 ஆண்டுகால போராட்டத்துக்கு தேர்தல் அறிக்கையில் தீர்வு சொல்கிறார் ஜெயலலிதா. எனவே, அவர் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும். தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் வீழ்த்தப்பட வேண்டும். இதற்காக அனைத்துத் தரப்பினரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எதுவும் செய்யவில்லை:

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்களது சமூகத்தின் பெயரைச் சொல்லி அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் வெற்றி பெற்று பதவிக்கு வரும்போது அந்த சமூகத்துக்கு துரோகத்தை மட்டுமே செய்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்தவர்கள் இன்று தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர் என்றார் அவர்.
















Read more...

புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞசர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் சோலை நகர் பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞசர்கள் இருந்து விலகி அப்புனு (ஏ) சுதர்சனன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்களின் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அப்போது பாலாஜி (ஏ) மணிகண்டன் திலிபன் ச.பாபு மற்றும் முக்கிய கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.








 

Read more...

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.அசோக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஊத்தங்கரையில் பிரசாரம்

ஞாயிறு, 30 மார்ச், 2014

கிருஷ்ணகிரி  நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.அசோக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 29.03.2014 (சனிக்கிழமை) அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

கூட்டத்துக்கு ஊத்தங்கரை அதிமுக ஒன்றிய செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம் வரவேற்றார். ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம், மாவட்ட அண்ணா தொழில்சங்கத் தலைவர் நாகராஜ், மாநில நில வள வங்கித் தலைவர் சாகுல் அமீது, தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

 
மத்தியில் 11 ஆண்டுகள் அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமுதாயத்துக்கு ஏதும் செய்யவில்லை. எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டணி வைப்பதில்லை என ராமதாஸ் கூறினார். ஆனால், தற்போது பாஜகவுடன்  கூட்டணி வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கை படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு  பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இதனால், அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்கிறேன் என்றார்.







Read more...

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

சனி, 29 மார்ச், 2014

தருமபுரி  நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து தருமபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி  மற்றும்  அ.தி.மு.க சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் 30.03.2014  (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது.

பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு துறை அலுவலகம் அருகே நடைபெறும் கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கு மாவட்டச் செயலாளர் கு.முனிரத்தினம் தலைமை வகிக்கிறார். அதிமுக நகரச் செயலாளர் பி.குருநாதன் வரவேற்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். அதிமுக மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ், துணை பொதுச் செயலாளர் சி.தவமணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Read more...

வி.பி.சிங், தேவ கௌடா போல மக்களவைத் தேர்தலுக்கு பின்பு ஜெயலலிதா பிரதமராவார் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேட்டி

கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் 28.03.2014 (வெள்ளிக்கிழமை) அன்று  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெரும். அப்போது, தேவ கௌடா, வி.பி.சிங், போன்றோர் பிரதமரானது போல  தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு உள்ளது. எனவே, வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமையைக் காப்பதுடன், நதிநீர் உரிமையைப் பெறுவோம் என ஜெயலலிதா தெரிவித்ததால், அவரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரிக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய கட்சி, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இப்போது தேசிய கட்சியான பாஜக, திராவிட கட்சிகளான தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். இது அவரது சந்தர்ப்பவாத சுயநலக் கூட்டணியாகும். 

தமிழகத்தில் உள்ள 20சத இளைஞர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளனர். வன்னிய சமுதாயத்தினர் யாரும் பாமகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் ஜி.கே.மணியும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும்  வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர்கள் உள்ளூர் வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். இதனால், உள்ளூரைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்களான கிருஷ்ணகிரி கே.அசோக்குமார், தருமபுரி மோகன் ஆகியோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார் அவர்.

பேட்டியின் பொது மாவட்டப் பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Read more...

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கத்தை ஆதரித்து ஜெ.ஜெயலலிதா அவர்கள் பிரசாரம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வெள்ளி, 28 மார்ச், 2014

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் 27.03.2014 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பிரசாரம் செய்தார்.

பிரசார கூட்டத்தில், கூட்டணி கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா. விசுவநாதன், புதுச்சேரி மாநிலக் அதிமுக செயலாளரும், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன், புதுச்சேரி மாநிலக் கழக துணைச் செயலாளரும், மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான . புருஷோத்தமன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

























Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP