Blogger இயக்குவது.
ஒப்பாரி போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒப்பாரி போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஒப்பாரி போராட்டம்

செவ்வாய், 12 நவம்பர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்கிழமை (12.11.2013) வள்ளுவர் கோட்டம் அருகே  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஒப்பாரி போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் சத்ரியன், து.வெ.வேணுகோபால், ஏழுமலை, தொழிற்சங்க தலைவர் கே.வி.சிவராமன் முன்னிலை வகித்தனர். ஒப்பாரி போராட்டத்தை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார்

சிங்கள ராணுவத்தால் சீரழிக்கப்பட்ட இசைப் பிரியாவின் உருவ பொம்மையை மகளிரணி தலைவி வெள்ளையம்மாள் தலைமையில் 1000 பெண்கள் கொண்டு வந்து ஒப்பாரி வைத்து அழுதனர். சிங்கள ராணுவத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் வசைபாடினர்.

ஒப்பாரி போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தொடங்கி வைத்து பேசியது:


தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ரெயில் மறியல் நடத்தி 12 ஆயிரம்பேர் கைதாகி உள்ளனர். சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகையிட எங்களை அனுமதிக்கமாட்டார்கள். நீங்கள் கைக்குழந்தையுடன், வயதான முதியவர்களுடன் போராட்டத்துக்கு வந்துள்ளதால் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வள்ளுவர் கோட்டம் அருகே ஒப்பாரி போராட்டத்துக்கு அழைத்து வந்துள்ளோம். இசைப்பிரியாவின் படுகொலை, பாலச்சந்திரனின் இரக்கமற்ற சாவு கல்நெஞ்சையும் கறைய வைக்கும். இதற்கு ராஜபக்சேவை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தியும், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தியும் இந்த ஒப்பாரி போராட்டம் நடக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜோசுவா, தேவராஜ், ஆறுமுகம், சந்துரு, வீரன், வீர ராகவன், மோகன் வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.









Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 12/11/2013 அன்று ரயில் மறியல் போராட்டம்

திங்கள், 11 நவம்பர், 2013



தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை (10/11/2013) வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத்தில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்கவும், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவும் ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.

தற்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வற்புறுத்தியும் அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளது.

இசைப்பிரியாவுக்கு இழைத்த போர் குற்றங்களை தொலைக்காட்சியில் பார்த்த தமிழக மக்களும், மாணவர்களும் தற்போது கொந்தளிப்பாக உள்ள சூழலில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

எனவே மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை (12/11/2013) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் பெண்கள் திரண்டு ஒப்பாரி போராட்டம் நடத்துவார்கள்.

அதே போல் தமிழ் அமைப்புகள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்துக்கும் ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறி உள்ளார்.

Read more...

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில் மாபெரும் ஒப்பாரி போராட்டம்

வியாழன், 7 நவம்பர், 2013

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்த காணொளியை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதை தொடர்ந்து தமிழகமே கொதித்தெழுந்துள்ள நிலையில், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பாக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஒப்பாரி போராட்டம் நடைபெற உள்ளது . இதில் அனைத்து மகளிர் அணி பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

நாள்: 12/11/2013
நேரம்: காலை 10.00 மணி அளவில்
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை



Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP