Blogger இயக்குவது.
பாலகுருசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலகுருசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருந்தரங்கு வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெற்றது

திங்கள், 3 பிப்ரவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருந்தரங்கு நேற்று 02.02.2014 (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய திரு.ராஜதாண்டவன் (மாநில மதியுரைக் குழு உறுப்பினர்), திரு.கொற்றவமூர்த்தி (மாநில அமைப்பு செயலாளர்), திரு.வி.கே.குமரகுரு (மாநில விவசாய அணி அமைப்பாளர்), திரு.பாலகுருசாமி (மாநில மதியுரைக் குழு உறுப்பினர்), திரு.உ.கண்ணன் (தலைமை நிலைய செயலாளர்), திரு.ரவிப்பிரகாஷ் மாநில மாணவ
ரணி தலைவர்), திரு.கருப்பு சரவணன் (மாநில துணை பொது செயலாளர்) மற்றும் கடலூர், அரியலூர், நாகை, கோவை, புதுச்சேரி, சென்னையிலிருந்து வந்து கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள செயல்பாடுகள் பற்றியும், இணையதளத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். 


 

Read more...

விருத்தாசலம் அடுத்த சின்னபரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

விருத்தாசலம் அடுத்த சின்னபரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது.

ஒன்றிய தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுப்ரமணியன், ரமேஷ், ராஜா முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், மாநில மதியுரை குழு தலைவர் பாலகுருசாமி, மாவட்டச் செயலர் சின்னதுரை உட்பட பலர்
பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்: 


 1. கரும்பு டன்னுக்கு 3,500 ரூபாய், நெல் மூட்டைக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்.

2. பரவளூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும். தொரவளூர் பஸ் நிறுத்தம், மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும்.

3. விருத்தாசலத்திலிருந்து கச்சிபெருமாநத்தத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.

4. தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும்.

5. ஆதரவற்ற முதியோர்கள் உதவித் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்

என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP