நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு தமிழினப் படுகொலையாளனாகிய இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்து மே 26-ந் தேதி சென்னையில் முற்றுகைப் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவிப்பு
வெள்ளி, 23 மே, 2014
தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள
அறிக்கை:
மே 26-ல் மாபெரும் கண்டன முற்றுகைப் போராட்டம்:
இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பேரணி தொடங்கி சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நரேந்திர மோடி அவர்கள் இந்திய பிரதமராக மே 26-ந் தேதி டெல்லியில் பதவியேற்கிறார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழினப் படுகொலையாளனாகிய சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அழைக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தி தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
தமிழீழத்தில் சர்வதேச நாடுகள் தடை செய்த கொத்து கொண்டுகள், ரசாயன ஆயுதங்கள் என அனைத்தையும் பயன்படுத்தி ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தவன் ராஜபக்சே. 2009ஆம் ஆண்டு யுத்தகளத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியுடன் நிராயுதபாணிகளாக சரணடைந்த அப்பாவி பொதுமக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள், போராளிகளையும் கொடூர சித்திரவதை செய்து, தீயிலிட்டு எரித்துக் கொன்ற மாபாதக படுகொலையாளன் ராஜபக்சே. இறுதி யுத்த களத்திலே பாலச்சந்திரன் உள்ளிட்ட பிஞ்சு குழந்தைகளையும், இசைபிரியா உள்ளிட்ட பெண் போராளிகளையும் அப்பாவி சிறுமிகளையும் உயிரோடு கைது செய்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி எண்ணிப்பார்க்கக் கூடிய முடியாத கொடூர சித்திரவதைக்குள்ளாக்கி கொலை செய்த கொடியவன் ராஜபக்சே. இத்தனை கொடூரங்களுக்கும் ஆதாரங்கள் ஒவ்வொருநாளும் வெளிவந்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தை மட்டுமே மனித குலத்தையே குலைநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளான் சிங்களப் பேரினவாதி ராஜபக்சே. கடந்த காலங்களில் இந்திய பேரரசை ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த இனப்படுகொலைக்கு துணை போனதுடன் படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து நட்புக் கரம் நீட்டியது. இதனை ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துக் கண்டித்தது. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் அரசு ராஜபக்சேவை வரவேற்கக் கூடாது என்பதற்காக போர்க்கோலம் பூண்டது தமிழகம். படுகொலையாளன் ராஜபக்சேவை இந்தியா வரவேற்கக் கூடாது என்பதற்காக 19 தமிழர்கள் தமிழகத்திலே தீக்குளித்து மாண்டுபோயிருக்கிறார்கள்.
தமிழக மக்களின் பிரதிநிதிகள் சபையான சட்டசபையில் மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு, போர்க்குற்றவாளி இனப்படுகொலையாளன் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்; இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானங்களுக்கு மேல் தீர்மானங்களை ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகள் ஆதரவுடன் நிறைவேற்றியது.ஆனால் அனைத்தையும் துச்சமென மதித்து கொக்கரித்த காங்கிரஸ் இன்று மக்களவைத் தேர்தலில் குப்பையிலே வீசப்பட்டுக் கிடக்கிறது.
நேற்று இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் பேரரசு செய்த அதே தவறையே இன்று இந்தியாவை ஆளப் போகிறது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் பின்னப்பற்றத் தொடங்கியிருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுகிற வேலைதான்! அன்று காங்கிரஸ் தலைமையிலான அரசு, நட்பு நாடு என்ற போர்வையிலும் வெளியுறவுக் கொள்கை என்ற பெயரிலும் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அரவணைத்தது. இன்று பாரதிய ஜனதா தலைமையிலான அரசு, அதே வெளியுறவுக் கொள்கை என்ற பெயரிலும் அண்டை நாடு என்ற பெயரிலும் இனப்படுக்கொலையாளன் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அதேபோல் அரவணைக்கிறது. அன்று ராஜபக்சேவுக்கு எதிராக காங்கிரஸுக்கு எதிராக குரல் கொடுத்த தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் இன்றோ காங்கிரஸ் கட்சிக்காரர்களை மிஞ்சும் வகையில் நியாய வியாக்கியானங்களை வாரி வீசிக் கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதாவின் தமிழகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே இன்று ஒட்டுமொத்த இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறது. ஆனாலும் பாரதிய ஜனதாவோ அப்படித்தான் செய்வோம் என்று இறுமாப்புடன் தமிழகத்தின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது.
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், மக்களவைத் தேர்தலில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கும் கட்சியின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் பாரதிய ஜனதாவின் இந்த அட்டூழியத்துக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிற தமிழ்நாடு என்ற மாநிலத்தை ஆட்சி செய்கிற அரசு போர்க்குரல் கொடுக்கிறது; தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், அனைத்து இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் என ஒட்டுமொத்த தமிழகமே இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறார்கள். டெல்லி பதவியேற்பு விழாவிலே ராஜபக்சேவை அழைப்பதைக் கண்டித்து சேலத்திலே ஒரு இளைஞர் தீக்குளிக்க முயற்சித்த விபரீதமும் இன்று நடந்தேறியுள்ளது. இத்தனைக்கும் பிறகும் நாங்கள் ராஜபக்சேவை அழைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் இருக்கிறது இந்தியாவில் அமைய இருக்கும் பாரதிய ஜனதா அரசு. பாரதிய ஜனதாவின் இந்த இறுமாப்புக்கு, இந்த தமிழினத் துரோகத்துக்கு தொடக்கத்திலேயே தக்க பாடம் புகட்டுகிற வரலாற்றுக் கடமை தமிழக மக்களுக்கு வந்துள்ளது. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை வரவேற்றே தீருவோம் என்று கங்கணம் கட்டும் பாரதிய ஜனதாவின் கங்காணித்தனத்தை கருவறுக்க தமிழக மக்களே சென்னையில் ஓரணியாய் அணி திரள்வோம்! நரேந்திர மோடி டெல்லியில் பிரதமராக பதவியேற்கும் மே 26ஆம் நாளில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு டெல்லியிலே செங்கம்பளத்த பாஜக விரிக்கும் நாளில் தமிழ்நாட்டு தலைநகரில் நமது கண்டனக் குரலை வெளிப்படுத்த, இனத்துரோகத்துக்கு பாடம் புகட்ட கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், கொள்கைகள் உள்ளிட்ட அனைத்து மாச்சரியங்களையும் தூர எறிந்துவிட்டு தமிழர்களாய்.. மானுடத்தை நேசிப்பவர்களாய் கண்டனக் குரல் எழுப்ப திரண்டு வாரீர்! திரண்டு வாரீர்! என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எம் தமிழின உறவுகளை அழைக்கிறேன்.
தி.வேல்முருகன்
நிறுவனத் தலைவர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

லேபிள்கள்:
நரேந்திர மோடி,
முற்றுகைப் போராட்டம்,
ராஜபக்சே
நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 26.05.2014 அன்று சென்னையில் போராட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் செய்தியாளர்களுக்கு 22.05.2014 அன்று சென்னையில் அளித்த பேட்டி:
இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளார். ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து தமிழர் அமைப்புகள் தொடர்ந்து போராடுகிறோம். ராஜபக்சே டெல்லி வருவதை கண்டித்து சென்னையில் 26.05.2014 அன்று தமிழர் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்துகிறோம். ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை நரேந்திர மோடி அழைத்தது கண்டிக்கத்தக்கது. அவர் ஒரு போர் குற்றவாளி. இதற்காக எதிர்காலத்தில் பாரதிய ஜனதா நிச்சயம் வருந்தும். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வழியில் மோடியும் செல்வதை எதிர்க்கிறோம்.தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன் ராதாகிருஷ்ணனும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. அவரது கருத்து, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளது. தேர்தலுக்கு முன் கூறிய நிலைப்பாட்டில் இருந்து பாஜக மாறி உள்ளது கண்டிக்கத்தக்கது.

இலங்கைத் தமிழர்,
நரேந்திர மோடி,
பேட்டிகள்,
ராஜபக்சே
தமிழ் இனப் படுகொலையின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு
திங்கள், 19 மே, 2014
தமிழ் இனப் படுகொலையின் 5 ம் ஆண்டு
நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் மே–17
இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல்
நிகழ்வு நேற்று 18.05.2014 மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வினை மே 17 இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கோவை ராமகிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொது செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர் கொற்றவ மூர்த்தி, ஓவியர் வீரசந்தம் , பொழிலன் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் உணர்வுடன் கலந்துகொண்டனர்.
‘‘தமிழீனத்தின் விடுதலையை வென்றெடுப்போம், ‘‘தமிழீழம் மலரும் வரை ஓயமாட்டோம்’’ என்ற முழக்கத்துடன் இந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை உலகம் அறிவிக்க வேண்டும். தமிழினத்தை சிறுபான்மையினர் என்று கூறிவரும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், தமிழினம் தேசிய இனம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் குமராட்சியில் தமிழ் இனப் படுகொலையின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு
சிதம்பரம் அருகேயுள்ள குமராட்சி கடை வீதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், இலங்கை முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
அப்போது உயிர்நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஜி.தமிழ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.ராஜாராமன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகக் குழுத் தலைவர் அரோ தமிழ்தம்பி, லால்பேட்டை நகரச் செயலாளர் துரை.பரமசிவம், ஒன்றிய அமைப்புச் செயலாளர் கே.சேகர், நிர்வாகிகள் எஸ்.சுரேஷ், ஆர்.சுகுமார், ஏ.மணி, ஏ.அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சன் செய்திகள் தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சியில் தி.வேல்முருகன் விவாதம் (02.05.2014) காணொளி
செவ்வாய், 13 மே, 2014
சன் செய்திகள் தொலைக்காட்சியில் விவாத
மேடை நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி
தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி - 02.05.2014
லேபிள்கள்:
காணொளி,
தி.வேல்முருகன்,
நேர்காணல்,
விவாத மேடை நிகழ்ச்சி
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு வேல்முருகன் அழைப்பு
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம்
ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து
கொண்டு இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வரவேற்பு
வியாழன், 8 மே, 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்ப்புக்குரியது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முக்கிய தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு எடுத்த விடா முயற்சியே காரணம். தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று தந்து இருப்பது தமிழக முதல்வருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த தீர்ப்பை பெற்று தந்ததன் முலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதுகாகப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று தந்த முதல்வருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்த 142 அடியாக உயர்த்தலாம். பெரியாறு அணையை பராமரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு, பிப்ரவரி 27 ஆம் நாள், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று தந்த தீர்ப்பைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்றும், அணையை உடைப்பதற்கும் உரிமை உண்டு என்றும், கேரள அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கேரள பத்திரிகைகள் தவறான நோக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பின. இதே போல் கேரள திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் ‘டேம் 999’ என்ற திரைப்படத்தை வெளியிட்டனர். அதில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தினார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இதுவரை கேரள அரசு பரப்பிவந்த பொய்யுரைகள் அனைத்தும் இந்தத் தீர்ப்பின் மூலம் அம்பலப்பட்டுள்ளது.
தமிழக, கேரள மக்களிடையே நிலவிவரும் நல்லுறவைப் பாதுகாக்க காலம் தாழ்த்தாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அறிக்கைகள்,
டேம் 999,
முல்லைப் பெரியாறு அணை
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
வெள்ளி, 2 மே, 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு
நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் உள்ள மே தின நினைவு
சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இணைப் பொதுச்செயலாளரும் முன்னாள்
சட்டமன்ற உறுப்பினருமான போரூர் எம்.எஸ் சண்முகம், மாநில துணைப் பொதுச்
செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், தொழிற்சங்க தலைவர் சைதை கே.வி.
சிவராமன், மாநில அமைப்பு செயலாளர் கொற்றவ மூர்த்தி, மாவட்ட செயலாளர் பூக்கடை
முத்து ராஜ், மாவட்ட மகளிரணி வெள்ளையம்மாள், விருகை பகுதி செயலாளர் கோயம்
பேடு வீரராகவன், பகுதி தலைவர் ஜி.சரவணன், ஆனந்த் ஆகியோர் மே தின பூங்காவில்
மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.
பின்னர் மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர், சின்மயா நகர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.

கொற்றவ மூர்த்தி,
தொழிலாளர் தினம்,
மே 1,
வீரவணக்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)