Blogger இயக்குவது.
காமன்வெல்த் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமன்வெல்த் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் - நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 11 நவம்பர், 2013

 இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம்  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.











Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு





இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில்  நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) நடத்தும் ரயில் மறியல் போராட்டம் மாநில பொது செயலாளர் காவேரி அவர்களின் தலைமையில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு




இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) நடத்தும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்ககூடாது என வலியுறுத்தி நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

வெள்ளி, 8 நவம்பர், 2013



இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்ககூடாது, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சிங்கள இராணுவத்தின் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியாவை படுகொலை செய்த ராசபக்சே அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துக் கொள்ள அழைக்கிறோம்.

இடம்: இரயில் நிலையம், சீர்காழி - நாகை மாவட்டம்
நாள்: 12/11/2013 ( செவ்வாய்க்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி அளவில்


Read more...

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில் மாபெரும் ஒப்பாரி போராட்டம்

வியாழன், 7 நவம்பர், 2013

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்த காணொளியை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதை தொடர்ந்து தமிழகமே கொதித்தெழுந்துள்ள நிலையில், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பாக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஒப்பாரி போராட்டம் நடைபெற உள்ளது . இதில் அனைத்து மகளிர் அணி பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

நாள்: 12/11/2013
நேரம்: காலை 10.00 மணி அளவில்
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை



Read more...

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என வலியுறுத்தி இந்திய-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ப்பு

சனி, 26 அக்டோபர், 2013

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே, காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் மே 17 இயக்கம் சார்பில் (25-10-2013) ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

முற்றுகைப்  போராட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்க அணி சைதை சிவா, தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் அய்யா பெ.மணியரசன், மனித நேய மக்கள் கட்சியின் தோழர் அனிஸ், SDPI கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் அம்சா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, இன அழிப்புக்கு எதிரான இசுலாமியர் இயக்கம், மக்கள் விடுதலை இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், உயிர்த் துளிகள் இயக்கம், தமிழ்த் தேச குடியரசு இயக்கம் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

Read more...

சிங்கள ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை கோரிக்கை

திங்கள், 21 அக்டோபர், 2013

கடலூர்:

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை (20.10.2013) நடைபெற்றது. 
மாவட்ட மாணவரணி தலைவர் ப.மாரியப்பன் தலைமை வகித்தார். மாணவரணிச் செயலாளர் சி.ராம்ஜி வரவேற்றார். மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் க.குமரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவபுரி அ.சிவா, நகரச் செயலாளர் கோவி.தில்லைநாயகம், நகர துணைத் தலைவர் எஸ்.சுகுமார், நகர இளைஞரணி செயலாளர் தில்லை மற்றும் நிர்வாகிகள் ரா.ஹரிஹரன், த.விஜய், மு.புருஷோத்தமன், பா.மூர்த்தி, சுகுமார், சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். மாவட்ட துணைத் தலைவர் மு.புருஷோத்தமன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரோ அல்லது பிரதிநிதிகளோ பங்கேற்கக் கூடாது,

2. சிங்கள ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள 60 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.




Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (15.10.2013) குறித்து வார இதழ்களில் வந்துள்ள செய்திகள்

சனி, 19 அக்டோபர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2013 அன்று  மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டம் குறித்து வார இதழ்களில் வந்துள்ள செய்திகள்

ஜூனியர் விகடன்

குமுதம் ரிப்போர்ட்டர் 



நக்கீரன்



Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன், 16 அக்டோபர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (15.10.2013) மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வை.காவேரி, எம்.எஸ்.சண்முகம், ப.காமராஜ் மாநில தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சத்திரியன் து.வெ.வேணுகோபால், செந்தில்குமார், துணைத் தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் ஆர்.பி.தமிழ் நேசன், சத்திரியன் து.வெ.வேணு கோபால், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜேசுவா, தென் சென்னை மாவட்ட செயலாளர் தேவராஜ், வட சென்னை ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் அப்துல், பகுதி செயலாளர் வீரராகவன் மாவட்ட மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட தமிழ் நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தலைவர் தி.வேல்முருகன் பேசியது:–

சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் நிலையாக உள்ளது. எனவே மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த மாநாட்டி பங்கேற்க கூடாது. தமிழ் ஈழ மண்ணில் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மற்றும் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத் தமிழர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்.

இலங்கை ராணுவத்தால், தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி மத்திய அரசு இலங்கைக்கு எந்தவித ராணுவ உதவிகள் மற்றும் போர்க் கப்பல்களை வழங்க கூடாது.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை வாழ்வுரிமை வழங்க வேண்டும். மத்திய அரசு இதில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வேல்முருகன் பேசினார்.

இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் பண்ருட்டி வேல்முருகன். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை பொறுத்தவரை இவ்வளவு பெரிய கூட்டத்தை அண்மையில் யாருமே கூட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஞ்சி மக்கள் மன்றம் கலைக் குழு சார்பில் தமிழீழ விடுதலை குறித்த எழுச்சிப் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. பறை இசை முழங்க, இளைஞர் பட்டாளம் வீறு கொண்டு எழுந்ததை அங்கு காண முடிந்தது. சாரை சாரையாக மக்கள் கடலூர், பண்ருட்டி பகுதியில் இருந்து ஊர்திகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். கூட்டம் நடைபெறுகையில் மேலும் பல கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த வண்ணமே இருந்தனர். எங்கு திரும்பினும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. இளைஞர்கள் பல்லாயிரம் பேர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். பண்ருட்டி வேல்முருகன் இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுத்த காரணத்தால், மற்ற கட்சிகளும் தங்கள் பலத்தை காட்டி இது போன்ற மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தால் ஆட்சியாளர்கள் அடிபணிவார்கள் என்பதில் ஐயமில்லை.

கோரிக்கைகள் வருமாறு:


*சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தியும்

* செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டியும்,தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும்

*இலங்கை ராணுவத்தால் தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்திட கோரியும். இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்

*இந்திய அரசு இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது எனவும், போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது எனவும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்ககூடாது என வலியுறுத்தியும்

* இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்துவது 


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP