Blogger இயக்குவது.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை ஆங்கில வழி கல்வியாக மாற்றும் தமிழக அரசைக் கண்டித்து பள்ளிக் கல்வி இயக்ககம் முற்றுகை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு

செவ்வாய், 28 மே, 2013

அரசுப்  பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை ஆங்கில வழி கல்வியாக தமிழக அரசு மாற்றி விட்ட நிலையில் அதை எதிர்த்து தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் இன்று 28/05/2013 காலை பத்து மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. 

இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசியப் பொதுவுடைமை கட்சி தலைவர் திரு மணியரசன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்தியா, தமிழக வாழ்வுரிமை கட்சி சைதை சிவா, தோழர் தியாகு, இயக்குனர் கௌதமன், விடுதலை ராஜேந்திரன் , தமிழர் எழுச்சி இயக்கம் வேலுமணி, பாவலலேறு பெருஞ்சித்திரனார் மகன் பூங்குன்றன்,உலக தமிழ் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தமிழ் இயக்கங்கள் பங்குபெற்று தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழ் மொழி காக்க தமிழ் உணர்வாளர்கள் வீதியில் இறங்கி போராடினர் . தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை கொண்டுவர வேண்டும், தமிழ் வழியில் படித்தோருக்கே அரசு வேலை தர வேண்டும், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இப்போராட்டத்தில் பங்குபெற்ற சுமார் 300 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் .
























Read more...

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கோரிக்கை

ஞாயிறு, 26 மே, 2013

அரசு நிர்ணயித்த  கல்விக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கோரிக்கை (25/05/2013) விடுத்துள்ளது.








Read more...

காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை கைவிட நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 20 மே, 2013

கொள்ளிடம்:

   நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், மாவட்ட செயற்குழு கூட்டம் 19/05/2013 அன்று  நடைபெற்றது.

   மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சிவா வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட தலைவர் சுதாகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  ஒன்றிய மகளிரணி செயலாளர் சத்யா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் வினோத், இளைஞரணி பாசறை தலைவர் சின்னதுரை, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் எழில், சீர்காழி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபு, குத்தாலம் ஒன்றிய செயலாளர் குணசேகர், ஸ்டாலின், ஒன்றிய துணை செயலாளர் வள்ளி, சிறுபான்மை பிரிவு தலைவர் பாஷா, பிரேம்குமார், மூர்த்தி, நடராஜன், கமலேஷ், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. சீர்காழியில் வரும் ஜூன் மாதம் 29ம்தேதி, நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு, ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் அதிகமானோர் கலந்துகொண்டு, கூட்டத்தை சிறப்பாக நடத்துவது.

2. காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

3. விளைநிலங்கள் மனைப்பட்டாவாக மாறிவருவதை தடைசெய்ய முதல்வரை கேட்டுக் கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more...

குமராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி

ஞாயிறு, 19 மே, 2013





சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி 18/05/2013 (சனிக்கிழமை) அன்று அனுசரிக்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றியச் செயலர் கே.ஆர்.ஜி தமிழ் தலைமையில் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி முள்ளிவாய்க்கால் போரில் மரணமடைந்த தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலையரசன், ராஜாராமன், அருள், தமிழ்தம்பி, செந்தில், சேகர், சுகுமார், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி வடக்கு ஒன்றிய பொதுக் குழுக் கூட்டம்

செவ்வாய், 7 மே, 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி வடக்கு ஒன்றிய பொதுக் குழுக் கூட்டம் அங்குசெட்டிப்பாளையத்தில் சனிக்கிழமை (04/05/2013) நடந்தது. 

மாவட்டச் செயலர் இரா.பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சு.க.ஜெயகாந்தன், ஒன்றியக் குழு உறுப்பினர் ப.ராமானுஜம், ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரா.தேவராசு, இளம்புயல் பாசறைச் செயலர் டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியச் செயலர் இரா.சுரேந்தர் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் இரா.சக்திவேல், மாநில தமிழர்படை கி.ஜோதிலிங்கம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஒன்றியத் தலைவர் சி.குப்புசாமி நன்றி கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தி.திருமால்வளவன் பேசியது:

நம் சமூகத்தாருக்கு நல்லக் கல்வியை அளித்து பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் கட்சித் தலைவர்களிடம் இல்லை என்றார் அவர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 

2. நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்கு முழுமையாக தரவேண்டும்,

3. இனக்கலவரம் வராமல் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுவது,

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.


Read more...

குமராட்சி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரண உதவி

சனி, 4 மே, 2013

கடலூர்:

 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் குமராட்சி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

     குமராட்சி அடுத்த மேல்செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சபாநாயகன். இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் உளுந்து மூட்டைகள் சேதமானது.பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாக குழுத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாக குழு சீனுவாசன், ஒன்றிய செயலர்கள் தமிழ்வாணன், பரசுராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP