Blogger இயக்குவது.
முகமது அலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகமது அலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயற்குழு கூட்டம்

திங்கள், 21 ஏப்ரல், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயற்குழு கூட்டம், மாவட்ட அமைப்பு செயலாளர் முகமது அலி அவர்களின் தலைமையில் நடந்தது.

ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தல், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more...

அரவக்குறிச்சி அருகே நடைபெறவுள்ள சேவல் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரசுக்கு கோரிக்கை

செவ்வாய், 14 ஜனவரி, 2014

அரவக்குறிச்சி அருகே நடைபெறவுள்ள சேவல் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிறுபான்மைபிரிவு மாவட்ட அமைப்பாளர் முகமது அலி அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல்சரகத்தில் சேவல்சண்டை நடைபெற உள்ளது. சேவல் உரிமையாளர்கள் தங்கள் சேவல் மீது லட்சக்கணக்கில் பணம் கட்டி சூதாட்ட பந்தயம் நடைபெறுகிறது. பல மாவட்டங்களில், இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் அதிக அளவில் மது அருந்திவிட்டு வண்டி வாகனத்தில் வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த சேவல் சண்டை மருத்துவ சான்றிதழ், விலங்குகள் நலவாரியத்தில் அனுமதி சான்றிதழ் பெறாமல் நடைபெறுகிறது.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பஞ்சாயத்து பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

சனி, 2 நவம்பர், 2013

க.பரமத்தி:

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பஞ்சாயத்து பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் முகமது அலி, பி.டி.ஓ.,வுக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனு விபரம்:

க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், சின்னதாராபுரம் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. குறிப்பாக, 5வது வார்டு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தெருவிளக்குகள் எரியவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. தென்னிலை ரோடு பகுதிகளிலும் இதே நிலைதான். பஞ்சாயத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரசீர் கேட்டால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சின்னதாராபுரம் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP