Blogger இயக்குவது.
இரவி.பிரகாஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரவி.பிரகாஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணி சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 29 அக்டோபர், 2013

கடலூர் :

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணி சார்பில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (28.10.2013) ஆர்ப்பாட்டம் நடந்தது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும். இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மாணவர் அணி துணை செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். மாணவர் அணி தலைவர் ரவி பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மாநில துணை தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, நகர செயலாளர் ஆனந்து, மாநில மகளிர் அணி செயலாளர் அமராவதி, நிர்வாகிகள் கமலநாதன், தமிழர்படை பிரசன்னா, செந்தில் முத்துக்குமார், ஆற்றலரசு, ராம்கி உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.









Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் 17.8.2013 அன்று மாலை 6 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு ஜெகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில நிர்வாககுழு உறுப்பினர் தி.திருமால்வளவன், மாநில துணை பொதுச்செயலாளர் உ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநில மாணவர் சங்க தலைவர் இரவி.பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தில்லை, ஒன்றிய தலைவர் இராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகி இராசேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ப.ஆண்டவர்செல்வம், வாசு.சரவணன், எ.கரிகாலன், பேரூர் செயலாளர் கி.பரசுராமன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் இரா.விஜயகுமார், சிதம்பர நகர செயலாளர் தில்லை நாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP