Blogger இயக்குவது.

சென்டாக் நிதியில் மோசடி வழக்கை சி.பி.யை விசாரிக்க புதுச்சேரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

சென்டாக் நிதியில் மோசடி வழக்கை சி.பி.யை விசாரிக்க புதுச்சேரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில  அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில  அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கை 
Read more...

இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்க இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை போரூரில் அமைந்துள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில்  30-4-2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
 
அதில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்.

1. தமிழக மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் விளையாட்டு வீரர்களுக்கு உறுதுணையாகவும் பாமர மக்களுக்கு  தமிழக, இந்திய, உலகச் செய்திகளை எளிதில் தெரிந்து கொள்ள கிராமங்கள் தோறும் தினத்தந்தி பத்திரிகையை சென்றடையச் செய்த கொடைவள்ளல் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இச்செயற்குழு மூலம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. கடந்த மாதம் 23-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வெளியேறிய விஷவாயுவால் 40 கி.மீ. வரை வசிகின்ற பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அதிகபட்சமாக கேன்சர் 335 பேருக்கும் தொழுநோய் 10 பேருக்கும் நுரையீரல் பாதிப்பு 5047 பேருக்கும் காசநோய் 529 பேருக்கும் கருச்சிதைவுகள் 128 பேருக்கும் கண்பார்வை கோளாறு 7189 பேருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே பொதுமக்கள் மேலும் பாதிப்படையாமல் இருக்க இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தி. வேல்முருகன் தலைமையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை முன்பு ஜூன் மாத இறுதியில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டம் நடத்துவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

3. நாகை மாவட்டம் சீர்காழியில் மே 18-ந் தேதியன்று ஈழப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்னுயிர் நீத்த இலங்கை தமிழர்கள் 1.5 லட்சம் பேருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்துவது அந்த பொதுக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பது என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதரமான காவிரி நதிநீர் ஆற்றில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டும் வகையில் மிக நீண்ட சட்ட போராட்டங்களின் முடிவில் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான முழுமையான முயற்சிகளை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இச்செயற்குழு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் அனைத்திவித முயற்சிகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதையும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

5. தமிழகத்தின் 5 வட மாவட்டங்களின் வாழ்வாதாரமான தென்பெண்ணை ஆற்று நீரை அப்படியே கபளீகரம் செய்யும் வகையில் கர்நாடக அரசு ராட்சத குழாய்கள் மூலம் உறிஞ்சி எடுத்து வறண்டு கிடக்கும் நூற்றுக்கணக்கான ஏரிகளை நிரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இதைக் கண்டித்தும் கர்நாடகாவின் இந்த வஞ்சகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கர்நாடகா எல்லையை முற்றுகையிடும் மிகப் பிரம்மாண்ட போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்தப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசும் கர்நாடகாவின் தென்பெண்ணை ஆற்று நீரை சூறையாடும் போக்கை தடுத்து நிறுத்துவோம் என்ற அறிவித்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இச்செயற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

6. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாகத்தான் இருக்கிறது என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் வல்லுநர் குழு உறுதிபடத் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் முரண்டு பிடிக்கும் கேரள மாநில அரசு நடப்பு நிதி நிலை அறிக்கையில் புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கேரள அரசின் விதண்டாவாதப் போக்குக்கு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

7. தமிழக மேற்கு மாவட்ட விவசாயிகளின் எதிர்காலத்தையே குழிதோண்டிப் புதைத்து விவசாயத்தையே நிர்மூலமாக்கும் வகையில் கெயில் நிறுவனமானது விளைநிலங்களின் வழியே எரிவாயு குழாய்களை அடாவடியாக பதிக்கும் பணியை மேற்கொண்டது. பொங்கி எழுந்த விவசாயிகளின் குமுறல்களை ஒருங்கிணைத்து சேலம் மாநகரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கெய்ல் தலைமையகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தி பல்லாயிரக்கணக்கான தோழர் கைதாகினர். தமிழக விவசாயிகளின் தமிழ வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக விளைநிலங்களின் வழியாக கெயில் எரிவாயு குழாய்களை பதிக்கக் கூடாது என்று ஆணையிட்டு விவசாயிகளின் வாழ்வாதரங்களை மீட்டுக் கொடுத்தார். அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் தமிழர் நலனுக்கான தமிழக வாழ்வுரிமை மீட்புக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இச்செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

8. கேரளாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் வீணாகும் நீரை தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிட தமிழகம் பல்லாண்டுகாலமாக கோரிவருகிறது. ஆனால் கேரளம் தொடர்ந்தும் மறுத்தே வருகிறது. தமிழகத்து உள் ஆறுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற தமிழக அரசு, கேரள அரசுடன் இது தொடர்பாக உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி தமிழக நலனைக் காக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

9. தமிழக மீனவர்கள் பாரம்பரியாக வங்கக் கடலில் பாக்நீரிணையில் கச்சத்தீவு கடற்பரப்பில் காலந்தோறும் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இந்திய மத்திய அரசால் இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே எதேச்சதிகாரமாக கச்சத்தீவை சிங்கள அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் கடந்த 30 ஆண்டுகாலமாக 800க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் காடையர்கள் படுகொலை செய்திருக்கின்றனர். இதுநாள் வரை சிங்கள அரசை ஒருவார்த்தை கூட கண்டிக்காத மத்திய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான்! கச்சத்தீவை மீட்பதற்காக தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் மீனவர்களின் பேரியக்கங்களும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் அனைத்திவித போராட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தம்மை தொடர்ந்தும் ஈடுபடுத்திக் கொள்ளும் என இந்த செயற்குழு உறுதியேற்கிறது.

10. தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் என்ற இரண்டு அணு உலைகளும் தமிழர்களின் உயிரை மெல்ல மெல்ல சாகடித்துக் கொண்டிருக்கின்றன. என்றேனும் ஒருநாள் இந்த அணு உலைகளால் ஒட்டுமொத்த தமிழினமே காவு கொள்ளக்கூடிய பேராபத்து நம்மை சூழ்ந்து நிற்கிறது. கூடங்குளத்தில் இந்த பேராபத்தை உணர்ந்து கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக போராடி வரும் போர்க்குணமிக்க அந்த போராட்டத்தோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எப்போதும் இணைந்தே நிற்கிறது. இனி வரும் காலங்களில் தொடர்ந்தும் நிற்கும். இதேபோல் கல்பாக்கம் அணு உலைக்கு எதிரான அனைத்துவிதமாக போராட்டங்களையு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுப்பதுடன் அனைத்து ஜனநாயக சக்திகளுடன் ஒருங்கிணைந்தும் போராடும் என இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

11. அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றக் கூடிய இடஒதுக்கீட்டை பின்பற்ற தேசிய கல்வியியல் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் மட்டும் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட,. மிகப்பிற்படுத்தப்பட்டோரின் வேலை வாய்ப்புரிமை பறிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு கனிவோடு பரிசீலித்து சமூக நீதியின் தாயகம் தமிழகம்தான் என்பதை நிலைநாட்டும் வகையில் இடஒதுக்கீட்டை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

12. முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் வழக்கில் பேரறிவாளன்,சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்கள் தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இம்மூவரும் தாக்கல் செய்த கருணை மனுவை 11 ஆண்டுகால தாமதத்துக்குப் பின்னர் இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. மூன்று தமிழரது உயிரைக் காப்பாற்றும் வகையில் தமிழக அமைச்சரையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அதை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இதேபோல் வீரப்பனின் வழக்கில் 4 தமிழர்கள் தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக கர்நாடக மாநில அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி அந்த 4 தமிழர்களது உயிரையும் காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இச் செயற்ழு வேண்டுகோள் விடுக்கிறது.

13. இலங்கைத் தீவில் தமிழர்கள் தங்களது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் தங்களது தனித்துவமான கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணிபாதுகாத்து தங்களுக்கான அரசை தாங்களே பல்லாயிரம் ஆண்டுகளாக நிர்மாணித்து வந்தனர். ஆனால் கடந்த 60 ஆண்டுகாலமாக சிங்களப் பேரினவாதத்திடம் சிக்குண்டு தமிழீழத் தேசிய இனமே அழிவின் விளிம்பில் நிற்கிறது. தமிழீழ சிக்கலுக்கு தமிழீழத் தனியரசே தீர்வு என்று ஆயுதமேந்தி போராடிய விடுதலைப் போரின் இறுதி காலத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை ஈவிரக்கமின்றி சிங்களப் பேரினவாத அரசு படுகொலை செய்தது. சிங்களப் பேரினவாத அரசின் இந்த இனப்படுகொலையை சர்வதேச சமூகம் தற்போது கரிசனையோடு கவனிக்க முன்வந்திருப்பது ஆறுதல் தருகிறது.இருப்பினும் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே- தமிழீழத்தில் சிங்களப் படைகள் மேற்கொண்டது சர்வதேச போர்விதிகளை மீறிய மனிதாபிமானமற்ற போர்க்குற்றங்களே! என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது,

14.தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்ற விசாரணைகள் முடிவடையும் வரை சிங்கள அரசு மீது பொருளாதார தடையை விதிக்கக் கோரும் தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்க இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

15. தமிழீழ சிக்கலுக்கான ஒரே தீர்வு தமிழீழத் தனியரசுதான்.. இதற்காக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் ஐக்கிய நாடுகள் அவையம் முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது உறுதித் தன்மையை வெளிப்படுத்தி இச்செயற்குழு மூலம் தெரிவித்துக் கொள்கிறது.

16.சர்வதேச மனித உரிமை மீறல்களை காலில் போட்டு நசுக்கிய போர்க்குற்றவாளியான சிங்கள அரசுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் தொடர்ந்து தமிழகம் வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபையிலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் இந்தக் குரலை ஏற்று இலங்கையில் நடைபெறக் கூடிய காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.
 

Read more...

பள்ளிக்கரணை பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை பாதுகாக்க மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் - தி.வேல்முருகன் கண்டன உரை

வியாழன், 25 ஏப்ரல், 2013பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை பாதுகாப்போம்! மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

இடம் : பள்ளிக்கரணை மாமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் (முன்னாள் பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரில்)

நாள் : 27.04.2013 சனிக்கிழமை     மாலை 6 மணி.

தலைமை: திரு. சிவ.காளிதாசன், பாவாணர் தமிழ்வழிப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம்

கண்டன உரை:

திரு. பழ. நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கம்
திரு. தி. வேல்முருகன் தமிழ வாழ்வுரிமைக் கட்சி
 திரு. சி.மகேந்திரன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
திரு. த.வெள்ளையன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
திரு. பாலவாக்கம் க.சோமு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
திரு. வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
திரு. O.U. ரஹமத்துல்லா மனிதநேய மக்கள் கட்சி
திரு. சிதம்பரநாதன் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ,ம.வி) தமிழ்நாடு.
திரு. தமிழ்நேயன் தமிழ்த் தேச மக்கள் கட்சி
திரு. திருமுருகன் காந்தி மே 17 இயக்கம்
திரு. தங்க.தமிழ்வேலன் தமிழ்நாடு மக்கள் கட்சி
திரு. அய்யநாதன் நாம் தமிழர் கட்சி
திரு. தாமரை திரைப்படப் பாடலாசிரியர்
திரு. க.அருணபாரதி தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
திரு. தமிழழகன் தமிழ்த் தேச குடியரசு இயக்கம்
திரு. D. இராமன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திரு. சங்கரசுப்பு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்
திரு. பா.புகழேந்தி தமிழக மக்கள் உரிமைக் கழகம்
திரு. செந்தில் சேவ் தமிழ்ஸ்
திரு.திருமூர்த்தி திராவிடர் விடுதலைக் கழகம்
திரு. குமாரதேவன் தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திரு.டாக்டர் ஆ.இர.இராமசாமி இராவணன் நிறுவனம்
திரு. வேலுமணி தமிழர் எழுச்சி இயக்கம்
திரு. ஜெயப்பிரகாசு நாராயணன் தமிழர் குடியரசு முன்னணி
திரு. ராஜா திருநாவுக்கரசு தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு
திரு. இரா.பன்னீர்தாஸ் 199வது வட்ட மாமன்ற உறுப்பினர்
பேராசிரியர் திருமாவளவன்
திரு. அங்கயற்கண்ணி உயர்நீதிமன்ற வழக்குரைஞர்
திரு. அரணமுறுவல் உலகத் தமிழ்க் கழகம்
திரு. பி.டி.சண்முகம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)
திரு. ஜெ.கங்காதரன் தமிழகத் தமிழாசிரியர் கழகம்.
திரு. மு.நடராசன் புரட்சியாளர் எழுச்சி இயக்கம்
திரு. குணத்தொகையன் தென்மொழி அவையம்
திரு. மா.சேகர் அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
திரு. சுடரொளி ஆசிரியர்
திரு. வீ.இறையழகன் மறைமலையடிகள் மன்றம்
திரு. வெற்றிச்செழியன் தமிழ்வழிக் கல்விக் கழகம்
திரு. பொ.மாயவன் மண்மொழி இதழ்-ஆசிரியர் குழு
திரு. கா.விஜயன் பாவாணர் பள்ளி பெற்றோர் கழகத் தலைவர்
திரு. பா.அமுதன் முன்னாள் மாணவர்-பாவணர் தமிழ்வழிப் பள்ளி
திரு. அ.மாரியப்பன்- செ.அனுராதா பாவாணர் பள்ளி பெற்றோர் கழக முன்னாள் பொறுப்பாளர்கள்

நன்றியுரை: திரு. குணா, பாவாணர் தமிழ்வழிப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம்
தொடர்புக்கு : குணா - 9486641586, சிவ.காளிதாசன் - 8682854822,
ஜெயப்பிரகாசு நாராயணன் - 9840878819, குழல் - 9710204514
தோழர்களே!
தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத் தூண்களை உருவாக்கும் இப்போராட்டத்திற்கு தாங்கள் நிதியுதவி அளித்துத் துணை நிற்கும்படித் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிதி உதவி அளிக்க வங்கி கணக்கு எண்:
State Bank of India
SB Account No.: 31266037798
டி.சுப்ரமணியன்
வேளச்சேரி பை பாஸ் ரோடு கிளை


Read more...

கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட் முறைகேடுகளை கண்டித்தும், அதனை மூட வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் டோல்கேட் முறைகேடுகளை கண்டித்தும், அதனை மூட வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்  திங்கள்கிழமை (22/04/2013)  நடைபெற்றது.

 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஒன்றிய செயலாளர்கள் குசேலன், தணசேகரன், மருதை, கார்த்திக், நகர செயலாளர்கள் குமரேசன், கதிர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு டோல்கேட் இடைவெளி 48 கிமீ தூரத்தில் இருக்க வேண்டும். ஆனால்,  மாடூர் டோல்கேட், உளுந்தூர்பேட்டையில் இருந்து 35 கிமீ தூரத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியின்றி வாகனங்களிடம் வசூல் செய்யும் இந்த டோல்கேட்டை மூட வேண்டும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், பகுதி மக்கள் பயன்படுத்த தனியாக மாநில சாலையை தமிழக அரசு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை அலுவலகத்திற்கு அழைத்து சேலம் நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் சிவாஜி தலைமையில் பொறியாளர்கள் பிரபாகரன், சீனுவாசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதி மக்களின் வாகனங்களுக்கு வரி வசூலிக்கக்கூடாது. விளைபயிர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது.

சாலை திருப்பத்தில் ஒளிரும் விளக்குகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைளை சில தினங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பேச்சுவார்த்தையின்போது கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் வே.ஜவகர், நெடுஞ்சாலைத்துறை வட்டாட்சியர் துளசிபாய், டோல்கேட் முதுநிலை மேலாளர் பாஸ்கர் ரெட்டி உடன் இருந்தனர்.


Read more...

தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதியில் இருபுறமும் குவிந்துள்ள சாலையோர மணலை அப்புறப்படுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

க.பரமத்தி:

தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதியில் இருபுறமும் குவிந்துள்ள சாலையோர மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

தமிழக வாழ்வுரிமைக்  கட்சி சார்பில் கரூர் மாவட்டம் க.பரமத்தியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். க.பரமத்தி ஒன்றிய செயலாளர் இளமாறன் வரவேற்றார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமதுஅலி, மாவட்ட மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

முன்னதாக மாவட்ட மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்து பல்வேறு இடங்களில் மாநில பொதுசெயலாளர் காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராசு, மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினர்.

கூட்டத்தில் க.பரமத்தி கடைவீதியில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சாலையோர மணல் பரப்பை அப் புற படுத்த வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விழாவில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மூர்த்தி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, தலைவர் மகேஸ்வரி, துணை தலைவர் சிவாத்தாள், நிர்வாகிகள் சரவணன், முருகேஷ், பழனிவேல் உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பர்கூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கிருஷ்ணகிரி:

 கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பர்கூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குணச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பாரத் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலர் கோவிந்தராஜ், காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ச.சி.விஜயகுமார் பங்கேற்று தீர்மான விளக்கவுரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:

விவசாயிகள் நலன் கருதி படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை ரூ. 7 கோடி மதிப்பில் துவங்கி தற்போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மேலும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து நீர் கொண்டு வந்து 2 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதியை தரும் இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். 

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் மே மாதம் 6-ஆம் தேதி மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, மே மாதம் இறுதிக்குள் பர்கூர், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிளை அமைத்து கட்சியின் நிறுவனர் வேல்முருகனை அழைத்து கொடியேற்றுவது. 

மேலும், ஓசூர் நகரத்திற்குள்பட்ட காந்தி நகர், வ.உ.சி நகர் ஆகிய பகுதிக்குள்பட்ட பாறை புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் சுமார் 2 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி வருகின்ற 22-ஆம் தேதி  ஓசூரில் நடைபெறவுள்ள அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கிழக்கு மாவட்டத்திலிருந்து பெரும் திரளாக பங்கேற்பது. 

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது 

என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதில், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் பண்ணந்தூர் விஜய்பாபு, இளைஞரணி ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய துணைத் தலைவர் ஓம்பிரகாஷ், விவசாய அணி ஒன்றிய தலைவர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இளம்புயல் பாசறை ஒன்றிய செயலர் மதிவாணன் நன்றி கூறினார்.

Read more...

சேலத்தில் பாலச்சந்திரனுக்கு சிலை எழுப்ப அனுமதி அளிக்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு சேலத்தில் சிலை எழுப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டுள்ளது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வை.காவேரி, ஒருங்கிணைப்புச் செயலர் எம்.பி.காமராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் திங்கள்கிழமை 15/04/2013  அளித்துள்ள மனு விவரம்:

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையில் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும் இன உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் நினைவைப் போற்றும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சிலை வைக்க உள்ளோம். எனவே சேலம் ஐந்து ரோடு பகுதியில் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read more...

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளம்புயல் எழுச்சி பாசறை மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

சனி, 13 ஏப்ரல், 2013

கோடைக்காலத்தை முன்னிட்டு விவசாயிகளின் குறுவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கு குறைந்த பட்சம் 12 மணி நேரம் தொடர் மும்முனை மின்சாரமாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளம்புயல் எழுச்சி பாசறை மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில் தெரு தில்லைகோவிந்தராஜா மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். பாசறை மாவட்டச் செயலாளர் ஆர்.கே.குமரன் வரவேற்றார். நிர்வாகிகள் சிவபுரி ஆ.சிவா, ப.சுரேஷ், ந.சிவபாலன், பந்தல் வெங்கடேசன், ரா.தீபக்ராஜ், பி.சுதாகர், ஆர்.தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புக்குழுத் தலைவர் தி.திருமாமால்வ
ன் சிறப்புரையாற்றினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் உ.கண்ணன், மாநில மதியுரைக் குழு மு.பாலகுருசாமி, மாநில நிர்வாகக்குழு ச.க.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் மு.ஆளவந்தார், ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆர்.ஜி.தமிழ். ச.கோபு, ஆண்டவர் செல்வம், ம.கஜேந்திரன், வாசு.சரவணன். பரசுராமன், ஏ.கரிகாலன், கோ.முருகன், என்.எஸ்.டி தில்லை, கு.ப.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகரச் செயலாளர் கோவி.தில்லைநாயகம் நன்றி கூறினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  

 1. ஸ்ரீமுஷ்ணம் பகுதியை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, 

2.கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதி அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி வறட்சி நிவாரணம் வழங்கக் கோருவது, 

3. குறுவை சாகுபடிக்கு விதைநெல் மற்றும் வேளாண் இடுபொருள்கள் முன்கூட்டியே தங்கு தடையின்றி வழங்க வேளாண்துறையை கோருவது, 

4.மே.18 சீர்காழியில் நடைபெறும் இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் உயிர்நீத்த தியாகிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது, 

5.கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்தும், சுவர் விளம்பரத்தை அழிக்கும் சமூக விரோத கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோருவது 


உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இலங்கை அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்

புதன், 10 ஏப்ரல், 2013

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இலங்கை அரசைக் கண்டித்து 10/04/2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 54 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை ராணுவத்தை கண்டிப்பது, தனி ஈழம் அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜபக்சவை கடுமையாக கண்டிப்பது, தமிழ் இனத்தின் தொப்புல் கொடி உறவுகள் அழிவதை கண்டுகொள்ளாத இந்திய அரசைக் கண்டிப்பது, கட்சத் தீவை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரங்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்ட இந்திய மத்திய அரசு 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்காததற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ச உருவ பொம்மையை எரித்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தால் சென்னை நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இறையூர் சர்க்கரை ஆலை முற்றுகைப் போராட்டம்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

 இறையூரில் சர்க்கரை ஆலையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முற்றுகையிடும்   போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி   தி.வேல்முருகன் பங்கேற்றார்.

முற்றுகை போராட்டம்

பெண்ணாடம் அருகே இறையூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு கரும்பு வெட்டியதற்கான தொகையினை கடந்த 3 மாதமாக வழங்காமல் இருந்து வருகிறது. இதற்கான தொகையினை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க கோரி, தமிழக வாழ்வுரிமைக்  கட்சி சார்பில் நேற்று ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தலைமை தாங்கினார் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் சின்னதுரை, தலைவர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் ரெங்க சுரேந்தர், தங்கவேல், சங்கர், கோட்டை செல்வம், தியாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய துணை செயலாளர் செந்தில் வரவேற்றார்.

ஊர்வலம்


முன்னதாக கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பெண்ணாடத்தில் இருந்து வாகனத்தில் ஊர்வலமாக இறையூர் சர்க்கரை ஆலையை நோக்கி வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிறுவனர் வேல்முருகன் பேசியது:

சிறைபிடிப்பு போராட்டம்


இறையூர் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பு செய்து வருவது வேதனைக்கு உரிய ஒன்றாகும். இவ்வாறு ஆலை நிர்வாகம் ஈடுபடுவதன் காரணமாக விவசாயிகள் மறு விவசாயம் செய்வதற்கென்று பணம் இன்றி, வட்டிக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே ஆலை நிர்வாகமானது, அடுத்த ஒரு மாதத்திற்குள் விவசாயிகளுக்கு கரும்பு பணத்தையும், வெட்டுக்கூலியையும் வழங்க வேண்டும். இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சியும், கரும்பு விவசாயிகளும் சேர்ந்து ஆலையை சிறை பிடிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

உடனடி தீர்வு வேண்டும்

மேலும் கரும்பிற்கு விலை குறைவாக கொடுப்பதால் 22 ஏக்கர் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே ஆலை நிர்வாகம் டன் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இதன் மூலமாக 100 கிராம விவசாயிகள் பயன் அடைவார்கள். இங்குள்ள விவசாயிகளுக்கு தெரியாமல் அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆலை நிர்வாகம் கரும்பு வாங்கி வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினர் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

முன்பணம் வழங்க வேண்டும்

விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னுரிமை அளிப்பதுடன், அவர்களுக்காக சிறை செல்லவும் தயாராக உள்ளோம். இவ்வாறு பேசினார்.

பேச்சுவார்த்தை

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமையில் 10–க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ஆலையின் அலுவலகத்திற்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் போது, தாசில்தார் இருதயமேரி, துணை தசில்தார் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளர் ஆனந்த், ஆலை மேலாளர் செந்தில்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அனைவரும் கலைந்து சென்றனர். 


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஓசூரில் இருந்து கர்நாடகா எல்லை நோக்கி முற்றுகைப் போராட்டம் - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 25.3.2013 அன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்று நீரையே உறிஞ்சி 130 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிடும் கர்நாடகாவின் அடாவடியைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  ஓசூரில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தை நடத்தப்பட்டது. ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடகா எல்லை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் தலைமையிலான ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்த்தப்பட்டு கைது செய்யப்பட்டனர் அது குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி.
 
 

Read more...

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகக்குழுக் கூட்டம்

புதன், 3 ஏப்ரல், 2013

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி  நிர்வாகக்குழுக் கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில்தெரு தில்லை கோவிந்தராஜா மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோவி.தில்லைநாயகம் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆர்.ஜி.தமிழ், கஜேந்திரன் (குமராட்சி), என்.எஸ்.டி.தில்லை கரிகாலன் (புவனகிரி), ச.கோபு, வாசு.சரவணன் (பரங்கிப்பேட்டை), ஆண்டவர் செல்வம், பரசுராமன் (கீரப்பாளையம்), சங்கர் (காட்டுமன்னார்கோயில்), முருகன் (திருமுட்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ச.க.ராஜேந்திரன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் சு.சேரலாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இளம்புயல் பாசறை ஆர்.கே.குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட் தீர்மானங்கள்:

1. குமராட்சி ஒன்றிய பகுதியில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சி சுவர் விளம்பரத்தை அழித்து கலவரத்தை தூண்டும் சமூக விரோத கும்பல் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

2. புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்து சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது,

3. பாமகவினர் கொடுக்கும் பொய் புகார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, தமிழக வாழ்வுரிமைக்  கட்சியினர் கொடுக்கும் புகார் மீது மெத்தனமாக நடந்து கொள்ளவதை வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
Read more...

சேத்தியாத்தோப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சேத்தியாத்தோப்பு:

   சேத்தியாத்தோப்பு அடுத்த அகர ஆலம்பாடியில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சி கொடியேற்று விழா நடந்தது. 

      ஒன்றிய செயலர் தில்லை தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன், கிளை நிர்வாகிகள் நீலகண்டன், வீராசாமி, சபரி முன்னிலை வகித்தனர். நடராஜன் வரவேற்றார். தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன், பேராசிரியர் மேகநாதன், கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலர் முடிவண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் வேல்முருகன், பரசுராமன், குணசேகரன், அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்


பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP