Blogger இயக்குவது.
கோமாரி நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோமாரி நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் மாநில தலைவர் வேல்முருகனுக்கு முழு அதிகாரம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் போரூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 14.12.2013 (சனிக்கிழமை) மதியம் 2.00 மணி அளவில்  நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் காவேரி, அமைப்பு செயலாளர் இணை பொதுச் செயலாளர் சண்முகம், மாநில துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளை கணக்கெடுத்து உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

2. தமிழக அரசு கால்நடை மருத்துவர்களை கொண்டு அனைத்து கிராமப் பகுதிகளிலும் கோமாரி நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் உடனடியாக நடத்திட வேண்டும்.

3. 2.2.2014 அன்று கட்சி துவங்கி 3-ஆம் ஆண்டு துவக்கத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதால் இந்த நிகழ்ச்சியை சேலத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்துதல்.

4. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் மாநில தலைவர் வேல்முருகனுக்கு முழு அதிகாரம் வழங்குவது

உள்ளிட்ட 9 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

Read more...

தமிழகத்தில் கோமாரி நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கால்நடைகளிடையே வேகமாக பரவி வரும் கோமாரி நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோமாரி நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்  கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் (14-12-2013) சனிக்கிழமையன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் பேசியது:

தமிழகத்தில் கோமாரி நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு நிவாரணமாக அதிகபட்சம் 20,000.00 ரூபாயும், குறைந்தபட்சம் 10,000.00 ரூபாயும், கோமாரி நோய் தாக்கி இறந்த ஆடுகளுக்கு நிவாரணமாக அதிகபட்சம் 10,000.00 ரூபாயும், குறைந்தபட்சம் 5,000.00 ரூபாயும் தமிழக அரசு வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.





Read more...

கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 14.12.2013 அன்று ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்குரிய  நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்கக்கோரியும், கிராமங்கள்தோறும் கோமாரி நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

முன்னிலை:

திரு. வை.காவேரி, பொதுச்செயலாளர்,
திரு. மே.பா.காமராஜ், மாநில அமைப்பு செயலாளர்,
திரு. போரூர் சண்முகம், இணைப் பொதுச்செயலாளர்,
திரு. சத்திரியன் து.வேணுகோபால், துணைப் பொதுச்செயலாளர்,
திரு. சைதை.சிவராமன், மாநில தொழிற்சங்கத் தலைவர்

நாள்: 14.12.2013 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி அளவில்
இடம்: வள்ளுவர்கோட்டம், சென்னை

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Read more...

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கோமாரி நோயை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

செவ்வாய், 3 டிசம்பர், 2013

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கோமாரி நோயை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP