Blogger இயக்குவது.
ரயில் மறியல் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரயில் மறியல் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சீர்காழியில் ரயில் மறியல் போராட்டம்

செவ்வாய், 12 நவம்பர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து இன்று செவ்வாய்கிழமை (12.11.2013) நாகை மாவட்டம் சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் மதிமுக, த.பெ.திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ரயில் மறியலில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர். 





Read more...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் இன்று செவ்வாய்கிழமை (12.11.2013)  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமையில் ஊர்வலமாக ரயில்நிலையத்திற்கு சென்று திருச்சி - சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மூத்தநகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஜி.தமிழ் உள்ளிட்ட 254 பேரை போலீஸார் கைது செய்தனர். இ்ப்போராட்டத்தில் தமிழத் தேசப் பொதுவுடைமை கட்சி, மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழக உழவர் முன்னணி, மாணவர் முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றன. 






Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் - நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 11 நவம்பர், 2013

 இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம்  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.











Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு





இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில்  நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) நடத்தும் ரயில் மறியல் போராட்டம் மாநில பொது செயலாளர் காவேரி அவர்களின் தலைமையில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு




இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) நடத்தும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டம்

புதுக்கோட்டை:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) ரயில் மறியல் போராட்டம்:

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் சாந்தநாதபுரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருமுருகன் வரவேற்றார். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சரவணதேவா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் மலையப்பன், சாந்தகுமார், மாலா, மாரியப்பன், கோவிந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கந்தர்வக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


1. ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்க கூடாது.

2. இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது

3. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் ஆணைக்கிணங்க ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 12/11/2013 அன்று ரயில் மறியல் போராட்டம்



தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை (10/11/2013) வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத்தில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்கவும், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவும் ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.

தற்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வற்புறுத்தியும் அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளது.

இசைப்பிரியாவுக்கு இழைத்த போர் குற்றங்களை தொலைக்காட்சியில் பார்த்த தமிழக மக்களும், மாணவர்களும் தற்போது கொந்தளிப்பாக உள்ள சூழலில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

எனவே மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை (12/11/2013) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் பெண்கள் திரண்டு ஒப்பாரி போராட்டம் நடத்துவார்கள்.

அதே போல் தமிழ் அமைப்புகள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்துக்கும் ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறி உள்ளார்.

Read more...

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி 12/11/2013 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ப்பு

வெள்ளி, 8 நவம்பர், 2013

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 12/11/2013 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனித நேய மக்கள் கட்சி, மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட  21 கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் முன்னின்று நடத்துகிறது. முழு அடைப்புக்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்ககூடாது என வலியுறுத்தி நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு



இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்ககூடாது, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சிங்கள இராணுவத்தின் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியாவை படுகொலை செய்த ராசபக்சே அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துக் கொள்ள அழைக்கிறோம்.

இடம்: இரயில் நிலையம், சீர்காழி - நாகை மாவட்டம்
நாள்: 12/11/2013 ( செவ்வாய்க்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி அளவில்


Read more...

காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம்

வியாழன், 4 அக்டோபர், 2012

   



காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று 04/10/2012 காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.


இது குறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொது செயலாளருமான பெ.மணியரசன் கூறியது,


 கர்நாடகாவில் தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய 4 அணைகளின் மொத்த கொள்ளளவான 116 டிஎம்சியில் 100 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஆனால் அங்கு தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு பொய் சொல்லி வருகிறது.


             காவிரி நதியில் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெறுவதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல், மக்கள் விடுதலை), சிவசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம், சின்னச்சாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கங்கள், தமிழக உழவர் முன்னணி, கொள்ளிடம் விவசாயிகள் சங்கம், தாளாண்மை உழவர் இயக்கம் உட்பட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளை கொண்ட காவிரி உரிமை மீட்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

       காவிரியில் இருந்து வரும் 30ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் இன்று முதல் துவங்குகிறது என்றார்.

திருவாரூர்:

காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று காலை திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய பல்வேறு சங்கங்களை சேர்ந்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர், தினமும் தமிழகத்துக்கு 2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்:

சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.40 மணிக்கு கூடிய காவிரி உரிமை மீட்பு குழுவினர், நாகூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் இன்று காலை குபேரன் தலைமையில் தமிழக இளைஞர் முன்னணியினர் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம்

வெள்ளி, 21 செப்டம்பர், 2012















ராஜபக்சே இந்தியா வந்ததை கண்டித்து இன்று 21/09/2012 தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சுமார் 2000 பேர் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் , பண்ருட்டி , சிதம்பரம் போன்ற பகுதியை சேர்ந்த மாணவர்கள் , இளைஞர்கள் இரண்டாயிரம் பேர்களை கைது செய்ய முடியாமல் காவல் துறை திணறியது. போதிய வாகனங்கள் இல்லாததால் காவல்துறை கைது செய்ய மறுத்தது. இரண்டாயிரம் பேர்கள் சென்ட்ரல் தொடருந்து நிலையத்தில் நுழைந்து முழக்கமிடவே , ஒட்டுமொத்த நிலையமே அதிர்ந்தது . ராஜபக்சேவே வெளியேறு, இந்திய அரசே இலங்கைக்கு துணை போகதே என்று அனைவரும் முழக்கமிட்டனர். ராஜபக்சேவின் உருவ படங்களை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Read more...

ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேலத்தில் வை.காவேரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்

சேலம்:

    ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல் போராட்டம் 20/09/2012 அன்று  நடைபெற்றது

   சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்  வை.காவேரி தலைமையில் 250 பேர் சேலம் ரயில் நிலையம் நுழைவு வாயிலில் திரண்டனர். தமிழக வாழ்வுரிமைக்  கட்சி மாநில பொதுச் செயலாளர்  வை.காவேரி மற்றும்  தொண்டர்களை   ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் காவல்துறையினர்  தடுத்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 250 பேரை  காவல்துறையினர்   கைது செய்தனர்.

Read more...

ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஓசூரில் ரயில் மறியல் போராட்டம்

ஓசூர்:

    ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல் போராட்டம் 20/09/2012 அன்று  நடைபெற்றது.

      மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடக்கும் விழாவுக்கு வரும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  ரயில் மறியல்  மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் விஜயகுமார் தலைமையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தொண்டர்கள்  114 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 

Read more...

ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அரியலூரில் ரயில் மறியல் போராட்டம்

அரியலூர்:


    ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல் போராட்டம் 20/09/2012 அன்று  நடைபெற்றது.

    மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியின் நடக்கும் புத்தமத விழாவுக்கு வருகை தரும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் வீராக்கண் சாமிநாதன் தலைமையில், கட்சி நிர்வாகிகள், அரியலூர் ரயில்வே நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலுக்கு ரயில்வே நிலையத்திற்கு  வந்த, தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட தலைவர் கொளஞ்சி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் செந்துறை பழனிவேல், சபாபதி, ஆண்டிமடம் தியாகராஜன், ஜெயங்கொண்டம் ரமேஷ், மீன்சுருட்டி முரளி, கருக்கை கணேசன், காடுவெட்டி காமராஜ், கொடுக்கூர் திருவள்ளுவன், ஜெயக்குமார், அறிவு உள்ளிட்ட 110 பேரை அரியலூர் டி.எஸ்.பி., தொல்காப்பியன் தலைமையிலான காவல்துறையினர்  கைது செய்தனர்.

Read more...

ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தர்மபுரியில் ரயில் மறியல் போராட்டம்

புதன், 19 செப்டம்பர், 2012

தர்மபுரி:


    ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல் போராட்டம் 20/09/2012 அன்று  நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.

     இலங்கை அதிபர் ராஜபக்சே  இந்திய வருகையை கண்டித்து நடக்கும் போராட்டத்துக்கு, மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகிக்கிறார். செயலாளர் முனிரத்தினம் வரவேற்கிறார். மாநில அமைப்பு செயலாளர் காமராசு, போராட்டத்தை துவக்கி வைக்கிறார். மாநில துணை பொது செயலாளர் தவமணி, துணை தலைவர் ராமலிங்கம், மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, வக்கீல் அணி துணை செயலாளர் சரவணன், இளைஞர் அணி துணை செயலாளர் சிவக்குமார், பாலகிருஷ்ணன், ரவிரத்தினம், சந்திரசேகர் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசுகின்றனர். மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம், செல்வம், முனியன், சிவபிரகாசம், பாபு, வஜ்ஜிரவேல், முனுசாமி, குமார், சின்னசாமி, பிரகாஷ், கவியரசு, மோகன், திருமாவளவன், பெருமாள், மாது, சரவணன், மாதேஷ், வடிவேல், திருப்பதி, ரமேஷ், ரவீந்திரன், ஞானப்பழம், லூகாஸ், சக்தி, ஜெகதீஸ், ஆனந்தன், செல்வம், தீர்த்தமலை, ராமசாமி, முருகன், பழனி, சரவணன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Read more...

ராஜபக்சே இந்திய வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமயில் ரயில் மறியல் போராட்டம்

திங்கள், 17 செப்டம்பர், 2012

 புவனகிரி:

தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் 16.09.2012 அன்று நடைபெற்றது.


கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் கலந்துகொண்டு பேசுகையில்,


    இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இதை எதிர்த்து சிதம்பரத்தில் என் தலைமையில் வருகிற செப்டம்பர் 20-ந் தேதி சுமார் 1000 பேர் பங்கேற்கும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். பல்வேறு பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மாநில இளைஞர் பாசறை தலைவர் கோபிநாத், மாநில மதிப்பு குழு பாலகுருசாமி, மாவட்ட நிர்வாக குழு ராஜேந்திரன், மற்றும் வீரசோழன், சேரலாதன், அக்னி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புவனகிரி நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்



 

Read more...

மகிந்த இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் செப்டம்பர் 20-ல் ரயில் மறியல் போராட்டம்

சனி, 8 செப்டம்பர், 2012









சாதி மத கட்சி எல்லைகளைக் கடந்து
தமிழராய் ஒன்று கூடுவோம்! வாரீர்! வாரீர்!!



        தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மகிந்த இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து செப்டம்பர் 20-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பு


         புத்தம் பேசிக்கொண்டே அப்பாவி ஈழத் தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் நித்தம், நித்தம் யுத்தம் செய்து வரும் சிங்கள இனவெறி அரசின் அதிபர் மகிந்த இராஜபக்சேவின் இந்திய வருகையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

             2011 நவம்பரில் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்துப் பேசுகிற பா.
ஜ.க. இன்று பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேசம் ராஞ்சியில் நடக்கும் புத்தர் விழாவிற்குப் பவுத்த சிங்கள இனவெறி கொண்ட இராஜபக்சேவை அழைத்திருப்பது புத்தரின் அன்பு, அகிம்சை நெறிகளுக்கே களங்கத்தை ஏற்படுத்தும் செயல் கண்டிக்கத் தக்கதாகும். ஐ.நா.வில் உறுப்பு நாடாக உள்ள இலங்கை எந்தச் சர்வதேசச் சட்டத்தின் கீழ் அப்பாவி ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில், தடைவிதிக்கப்பட்ட குண்டுகளை வீசிக் கொன்றது. தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், வங்கதேசம், கொசாவோ, கிழக்கு திமோர், தெற்கு சூடான் போன்ற நாடுகளில் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த இந்தியா, ஏன் ஈழத்தமிழர் இனப்படுகொலையை இதுவரை கண்டிக்கவில்லை?

              780 பேர்கள் கொல்லப்பட்டதற்கு லிபியா நாட்டின் மீது போர்க்குற்ற விசாராணை நடத்துவதை ஆதரிக்கும் இந்தியா இலட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்ற இலங்கை மீது மட்டும் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கேட்க மறுப்பது ஏன்? நாடாளுமன்றத்தில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லக்கூடாதென்று அவைக் குறிப்பிலிருந்து நீக்குகின்ற காங்கிரசு அரசு, இன்றைய வரையில் இலங்கை மீது அய்.நா. மன்றம் போர்க்குற்ற விசாரணை நடத்தாமல் இருக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து தடுத்து வருவதைச் சர்வதேச நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன.


                 இந்தியத் தமிழர்கள் என்றாலே மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்வதையே தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இராஜீவ் கொலைக்கு முன்னரும் கூட மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு தமிழின விரோதப் போக்கில் நடந்து கொள்வதைப் பல காரணங்களால் நம்மால் உறுதிப்படுத்த முடியும்.

 
               விடுதலை பெற்ற பிறகு பர்மாவிலிருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு விரட்டி அடிக்கப்பட்ட போது பிரதமர் நேரு அரசு, தமிழர்களின் உடைமைகளை மீட்டுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமதி பண்டாரநாயகா ஆட்சியில் 10.50 இலட்சம் இலங்கை மலையகத் தமிழர்கள் ஒப்பந்தம் போட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட பிரதமர்லால் பகதூர் சாஸ்திரி அரசு துணை போனது. சீனாவைப் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று திபெத்தின் பவுத்த அகதிகளை வசதி வாய்ப்புகளோடு இந்தியாவில் வாழ வழிவகை செய்கிறது.

             திபெத்தில் சுதந்திர நாடு அமைக்க விரும்பும் தலாய் லாமாவை இங்கு அரச விருந்தாளியாக வைத்து மரியாதை செய்கிறது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு மட்டும் பிற அகதிகளுக்குத் தரும் வசதிகளைக் கூட செய்து தர மறுக்கிறது. மாறாக, இலங்கை அரசின் விருப்பப்படி, விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தி சிறப்பு முகாம்களில் அடைத்து ஈழத்தமிழர்களை வதை செய்கிறது. காங்கிரசின் தமிழின விரோதப் போக்கிற்கு மிகப் பெரிய அத்தாட்சியாக 2009 - மே, முள்ளிவாய்க்கால் போரில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, 7 1/2 கோடித் தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்று போரைத் தடுத்து தமிழர்களைக் காப்பாற்றத் தவறியது காங்கிரசு அரசு.

            ஒருபக்கம் இலங்கையைப் போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் இந்திய அரசு, மறுபக்கம் சொந்த நாட்டு மீனவர்கள் 560க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றும், இதுவரை அவர்களைத் தட்டிக் கேட்கவும் அஞ்சுகிறது. இத்தாலி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு, அதாவது கேரள மீனவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு பெற்றுத் தருகிறது. ஆனால் 560க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கையிடமிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணம் பெற்றுத் தரவில்லை. இதற்காக இலங்கை கடற்படையினர் மீது எவ்வித வழக்கும் இதுவரை போட்டது கிடையாது. ஆற்று நீர்ச் சிக்கலில் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் தமிடிநநாட்டின் சட்டப்படியான உரிமைப் பங்கினைக் கர்நாடக, கேரள, ஆந்திரஅரசுகள் தர மறுக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளை காலில் போட்டு மிதிக்கிற மாநில அரசுகளைத் தட்டிக் கேட்கத் தயங்குகிறது மத்திய அரசு.


             ஆனால், நெய்வேலியில் உற்பத்தி ஆகும் 2750 மெகா வாட் மின்சாரத்தில் 90 சதவீதத்தை தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களுக்குத் தாரை வார்க்கிறது. இந்திய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களை மட்டும் இப்படி ஓரவஞ்சனை செய்வது ஏன்? இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் இராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இணங்க மறுக்கும் இலங்கை மீது நெருக்கடி தர பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரசு உட்பட அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி 2 ஆண்டுகள் ஆகியும் கூட, மத்திய அரசு இதுவரை அதுகுறித்து வாயே திறக்கவில்லை. இதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு மத்திய அரசு தரும் மரியாதையா? பற்றியெரியும் தீயில் பட்டாசைப் போடுவதைப் போல, தமிழகமே கொந்தளித்து எழுந்து கோரிக்கை வைத்தும், போராடியும், மத்திய அரசு அலட்சியமாக, இலங்கை நட்பு நாடு, அதனால் 450க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இந்தியாவில் பயிற்சி தருவோம் என்று ஆணவத்தோடு தமிழர்களின் உணர்வுகளுக்கு சவால் விடுகிறது மத்திய அரசு.

          இந்தியாவைவிட, சீனா பாகிஸ்தானை எப்போதும் ஆதரித்துவரும் இலங்கை நட்பு நாடு என்றால், இந்தியாவிற்குள் வாழும் 7 1/2 கோடித் தமிழர்கள் மட்டும் எதிரிகளா? மத்திய அரசு மனசாட்சியோடு இதற்குப் பதில் சொல்லட்டும். எனவே, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடுவதை வாடிக்கையாகச் செய்துவரும் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கை எதிர்த்தும், நம் தமிழின உறவுகளைக் கொன்றொழித்த இலங்கை அதிபர் இராஜபக்சே ராஞ்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கேட்டு 20.9.2012 வியாழன் அன்று காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் இரயில் மறியல் அறப்போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.


Read more...

இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்

வியாழன், 6 செப்டம்பர், 2012

திருச்சி:

     இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நேற்று (05/09/2012) நடைபெற்றது.

     இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்தும், தமிழக அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத பிரதமரை கண்டித்தும், திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திருச்சிஜங்ஷன் காதிகிராஃப்ட் அருகே நேற்று காலை   கோஷம் எழுப்பியபடி ரயில்வே ஜங்ஷனுக்குள் நுழைய முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்களை   பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஏ.சி., காந்தி, இன்ஸ்பெக்டர் சிகாமணி தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

        பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி  மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில துணை செயலாளர் முத்து, ஒரு பெண் உள்ளிட்ட, நூற்றுக்கணக்கான தொண்டரகள் கைது செய்யப்பட்டு, பீமநகர் ஸ்பேர் பார்ட்ஸ் சங்கம் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.








Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடலூர் முதுநகரில் ரயில் மறியல் போராட்டம் - புகைப்படங்கள்

ஞாயிறு, 18 மார்ச், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் 17/03/2012 அன்று  கடலூர் முதுநகரில் நடைபெற்ற  ரயில் மறியல் போராட்டம் - புகைப்படங்கள்









Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடலூர் முதுநகரில் ரயில் மறியல் போராட்டம்

கடலூர்:

        கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கடலூர் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டம் செய்தனர்.

         
கடலூர் முதுநகரில் சனிக்கிழமை நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முன்னாள் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் தலைமயில் ரயில் மறியல் போராட்டம்  நடைபெற்றது.  போராட்டத்தில் தி. வேல்முருகன் உள்ளிட்ட 1000  -க்கும் மேற்பட்டோர்  பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 55 பேர் பெண்கள். ரயில்மறியல் போராட்டத்தை முன்னிட்டு கடலூர் முதுநகரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
       
       முதுநகர் ரயில் நிலையத்துக்கு பகல் 1-50 மணிக்கு வந்த ராமேசுவரம் செல்லும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் 15 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி மற்றும் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் பால்ராஜ், இணைச் செயலர் ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகவேந்தன், மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலர் செந்தில், நுகர்வேர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கடல் தனசேகரன், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன், மக்கள் பாதுகாப்புக் கழக மாவட்டத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP