Blogger இயக்குவது.
கண்டன ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டன ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமானங்கள்!! கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும் கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 11.05.2015 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

ஞாயிறு, 3 மே, 2015

45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமானங்கள்!! கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும் கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!! 
நாள்: 11.5.2015 
இடம்: சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டுமானத்தின் மேற்கூரைகள் அன்றாடம் இடிந்து விழுவதும் 'பொன்விழா'வை நோக்கி மேற்கூரை இடிந்து விழுந்துகிறது என்று ஊடகங்கள் ஏகடியம் செய்வதும் தொடர்கிற போதும் மத்திய அரசு இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.. இந்த விமான நிலையத்தின் மேற்கூரைகளும் கட்டுமானப் பணிகளும் இடிந்து விழுந்து பயணிகள் படுகாயமடைவது என்பது தொடர் செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசும் விமானப் போக்குவரத்துத் துறையும் இதுபற்றி கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமலே இருக்கிறது.
நேபாளத்தை புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தின் போதுகூட அந்நாட்டின் காத்மண்ட் விமான நிலையம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை; அந்த விமான நிலையத்தை பயன்படுத்தியே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
நேபாளத்து எல்லையில் இருக்கிற மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பாதிப்பு ஏற்பட்ட போதும் அதன் அருகே உள்ள பக்டோரா விமான நிலையம் பாதிப்புக்குள்ளானதாக செய்திகள் வெளியாகவில்லை.
ஆனால் நிலநடுக்கம் உட்பட எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமலேயே சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் இதுவரை 45 முறை இடிந்து விழுந்து இருக்கின்றன.. பயணிகளை படுகாயப்படுத்தி இருக்கிறது..
இத்தனை முறை பாதிப்பு ஏற்பட்டும் மத்திய அரசும் அதன் விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் கண்டும் காணாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் விமான நிலையமும் இப்படி மோசமாக கட்டப்பட்டதில்லை.
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களின் குஜராத் மாநிலத்தின் பூஜ் பிரதேசம் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி. நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடம். அங்கு கூட இப்படி ஒரு மோசமான நிகழ்வுகள் நடந்ததாக செய்திகள் இல்லை.
ஆனால் சென்னை விமான நிலையம் மட்டும்தான் இத்தகைய மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரை 45 முறை இடிந்து விழுந்தும் கூட அதனை சீரமைக்க ஒரு நடவடிக்கை கூட மேற்கொள்ளப்படவில்லை. இந்த விமான நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்ட நிறுவனம் மீது ஒரு சிறு நடவடிக்கையும் இல்லை...
'மேக் இன் இந்தியா' என்ற பெயரில் சர்வதேச நாடுகளின் முதலீடுகளையெல்லாம் இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று தம்பட்டம் அடிக்கிற மத்திய அரசு, தென்னிந்தியாவின் முதன்மையான சென்னை விமான நிலையம் நாள்தோறும் இடிந்து விழுந்து கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சனையில்தான் கேளா காதாக இருக்கும் மத்திய அரசு இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கூட அக்கறையற்று இருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆகையால் சென்னை விமான நிலையத்தை உடனே சீரமைக்க வேண்டும்; சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் 45 முறை இடிந்து விழுவதற்கு காரணமாக இருந்த நிறுவனம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதுடன் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை விமான நிலையம் முன்பாக வரும் மே 11-ந் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்


தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

நெய்வாசல் வெள்ளாற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரிக்கு எதிப்புத் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

திட்டக்குடி அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வியாழக்கிழமை (05.02.2015) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், நெய்வாசல் வெள்ளாற்றில் பொதுமக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்குத் தேவையான நிலத்தடி நீர் மட்டத்தை குறைக்கும் வகையில் மணல் அள்ளப்படும் மணல் குவாரியை கண்டித்து ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சின்னதுரை தலைமை வகித்தார். மங்களூர் ஒன்றியச் செயலர் ரெங்க.சுரேந்தர், நகரச் செயலர் மருத.சீனிவாசன், நகரத் தலைவர் உ.முருகன், நல்லூர் ஒன்றியச் (கிழக்கு) செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச்செயலர் கனல்.கண்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார். நிறைவில் மாநில மாணவர் அணித் தலைவர் ரவிபிரகாஷ் நன்றி கூறினார்.

Read more...

காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்றது

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று 09.08.2014 (சனிக்கிழமை) காலை சென்னை எழும்பூர் லாங்ஸ் கார்டன் ஆதித்தனார் சாலையில் கட்சியின் மாநில பொருளாளர் அக்ரம்கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை:

”பாலஸ் தீனத்தில் நடந்து வரும் தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள், நோயாளிகள் என அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருகிறது. இச்சம்பவத்தை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைத் தவிர பிற நாடுகள் கண்டித்து வருகின்றன. ஆனால் உலகின் மிகப்பெரிய நாடான இந்திய அரசு இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பதைக் கண்டித்தும், அதே சமயம் ஐநா சபையில் இவ்விஷயத்தைக் கொண்டுச்சென்று பாலஸ்தீனத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முயற்ச்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்” என்றார்.


Read more...

வேட்டி, சட்டை அணிந்துவந்த நீதிபதிக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சென்னியில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திங்கள், 14 ஜூலை, 2014



 
சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரந்தாமன், வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆகியோர் வேட்டி, சட்டையில் வந்த காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் நேற்று 13.07.2014 நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலாளர் எம்.எஸ்.சண்முகம், மாநில பொருளாளர் அக்ரம்கான், துணைத்தலைவர் அ.வாசுதேவன், முத்துராஜ், சரவணன், வீரராகவன், அப்துல்சதீக், கதிர்வேல், வெங்கடேசன் உள்பட 40 பேர் பங்கேற்றனர்.

இதில் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் கூறியது:

‘‘தமிழர் பாரம்பரிய உடையை அவமதிப்பதாக அமைந்த இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் சார்பில் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.


பின்னர் கிரிக்கெட் சங்கத்தினுள் நுழைய முயன்ற 50–க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்,

Read more...

மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளைகள் விலையை ரூபாய் 220 உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழன், 2 ஜனவரி, 2014

மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளைகள் விலையை ரூபாய் 220 உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் இன்று 02.01.2014 (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் வி.கே.முருகன், என்.அறிவழகன், சிவலோகம், பன்னீர் செல்வம், சிலம்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Read more...

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு சார்பில் ஐயா பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 23 நவம்பர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி, இந்திய அரசு அலுவலகங்களைத் தாக்கிய திராவிடர் விடுதலைக் கழக சென்னை - சேலம் தோழர்கள் 7 பேர் மீதும், அதன் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் மீதும் தமிழக அரசால் ஏவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், முள்ளிவாய்க்கால் முற்றம் எழுப்பிய ஐயா பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரியும், சென்னையில் இன்று (23.11.2013) காலை, 'அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு' சார்பில், பல்வேறு கட்சி - இயக்கங்கள் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 11 மணிளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் திரு. தெகலான் பாகவி, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் குடியரசு முன்னணி செயலாளா வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை செயலக உறுப்பினர் தோழர் சதீஷ், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பரிமளா உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.






Read more...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்து 16.11.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 15 நவம்பர், 2013

இந்திய-சிங்களக் கூட்டுப் படைகளால் தமிழீழ மண்ணில் இனப்படுகொலை செய்து கொள்ளப்பட்ட தமிழீழ மக்களை நினைவேந்தும் விதமாக, உலகத் தமிழர் பங்களிப்போடு தஞ்சை -விளாரில் உருவாக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவுப் பூங்காவையும், அதன் சுற்றுச்சுவரையும் சட்டவிரோதமாக இடித்துத் தள்ளி, அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களை சிறையில் அடைத்திருக்கும் தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்து தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

நாள்: 16.11.2013 (சனிக்கிழமை)
இடம்: வள்ளுவர் கோட்டம்,
நேரம்: காலை: காலை 10 மணி

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் விபரம்:


தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
மனித நேய மக்கள் கட்சி,
எஸ்.டி.பி.ஐ.,
தந்தை பெரியார் தி.க,
தமிழ்நாடு மக்கள் கட்சி,
மே பதினேழு இயக்கம்,
சேவ் தமிழ்ஸ் இயக்கம்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்,
தமிழ்த் தேசக் குடியரசுக் கட்சி,
தமிழ்த் தேச மக்கள் கட்சி,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை,
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்,
தமிழர் குடியரசு முன்னணி,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

Read more...

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் 28.10.2013 அன்று கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 26 அக்டோபர், 2013

 

 
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள்: 28.10.2013 திங்கட்கிழமை
நேரம்: காலை 10.00மணி அளவில்
இடம்: பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு அலுவகம் எதிரில்,
              மஞ்சக்குப்பம்,
              கடலூர்.
 

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (15.10.2013) குறித்து வார இதழ்களில் வந்துள்ள செய்திகள்

சனி, 19 அக்டோபர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2013 அன்று  மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டம் குறித்து வார இதழ்களில் வந்துள்ள செய்திகள்

ஜூனியர் விகடன்

குமுதம் ரிப்போர்ட்டர் 



நக்கீரன்



Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன், 16 அக்டோபர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (15.10.2013) மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வை.காவேரி, எம்.எஸ்.சண்முகம், ப.காமராஜ் மாநில தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சத்திரியன் து.வெ.வேணுகோபால், செந்தில்குமார், துணைத் தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் ஆர்.பி.தமிழ் நேசன், சத்திரியன் து.வெ.வேணு கோபால், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜேசுவா, தென் சென்னை மாவட்ட செயலாளர் தேவராஜ், வட சென்னை ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் அப்துல், பகுதி செயலாளர் வீரராகவன் மாவட்ட மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட தமிழ் நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தலைவர் தி.வேல்முருகன் பேசியது:–

சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் நிலையாக உள்ளது. எனவே மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த மாநாட்டி பங்கேற்க கூடாது. தமிழ் ஈழ மண்ணில் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மற்றும் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத் தமிழர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்.

இலங்கை ராணுவத்தால், தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி மத்திய அரசு இலங்கைக்கு எந்தவித ராணுவ உதவிகள் மற்றும் போர்க் கப்பல்களை வழங்க கூடாது.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை வாழ்வுரிமை வழங்க வேண்டும். மத்திய அரசு இதில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வேல்முருகன் பேசினார்.

இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் பண்ருட்டி வேல்முருகன். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை பொறுத்தவரை இவ்வளவு பெரிய கூட்டத்தை அண்மையில் யாருமே கூட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஞ்சி மக்கள் மன்றம் கலைக் குழு சார்பில் தமிழீழ விடுதலை குறித்த எழுச்சிப் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. பறை இசை முழங்க, இளைஞர் பட்டாளம் வீறு கொண்டு எழுந்ததை அங்கு காண முடிந்தது. சாரை சாரையாக மக்கள் கடலூர், பண்ருட்டி பகுதியில் இருந்து ஊர்திகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். கூட்டம் நடைபெறுகையில் மேலும் பல கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த வண்ணமே இருந்தனர். எங்கு திரும்பினும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. இளைஞர்கள் பல்லாயிரம் பேர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். பண்ருட்டி வேல்முருகன் இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுத்த காரணத்தால், மற்ற கட்சிகளும் தங்கள் பலத்தை காட்டி இது போன்ற மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தால் ஆட்சியாளர்கள் அடிபணிவார்கள் என்பதில் ஐயமில்லை.

கோரிக்கைகள் வருமாறு:


*சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தியும்

* செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டியும்,தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும்

*இலங்கை ராணுவத்தால் தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்திட கோரியும். இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்

*இந்திய அரசு இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது எனவும், போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது எனவும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்ககூடாது என வலியுறுத்தியும்

* இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்துவது 


Read more...

மத்திய அரசை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு

திங்கள், 14 அக்டோபர், 2013






தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

 இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டுமிராண்டிதனமாக நடந்து கொண்ட ராஜபக்சேவை கண்டித்தும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், இதில் உரிய கவனம் செலுத்தாத மத்திய அரசை கண்டித்தும் சேப்பாக்கத்தில் இன்று (15/10/2013) மாலை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, 14 நாட்களாக சென்னையில் உண்ணா விரதம் இருக்கும் தியாகி தியாகுவின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், செங்கல் பட்டு–பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்துவது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கூடாது, இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ் ஆர்வலர்கள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறி உள்ளார்.

இன்று 15/10/2013 நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் வேல்முருகன் தலைமை தாங்குகிறார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காவேரி, சண்முகம், காமராஜ், துணை பொதுச் செயலாளர் சத்ரியன், து.வெ.வேணுகோபால், தொழிற்சங்க தலைவர் கே.வி.சிவராமன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

Read more...

வெங்காயம் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன், 25 செப்டம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டம் முன்பு 24/09/2013 அன்று வெங்காயம் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் போரூர் சண்முகம், மாநில தொழிற்சங்க செயலாளர் கே.வி.சிவராமன், துணைத் தலைவர் வாசுதேவன், இரா.ஏழுமலை, அயன்புரம் தேவராஜ், விருகை வீரராகவன், வெங்கடேஷ், அப்துல் சதீக், ஜோஸ்வா, சரவணன், மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் மக்களாட்சி அரசு கடை என்று எழுதி வெங்காயத்தை குவித்து வைத்திருந்தனர். அப்போது 1 கிலோ வெங்காயத்தை 2 ரூபாய்க்கு விற்று நூதன போராட்டம் நடத்தினர். இதன் அருகே மத்திய அரசு கடை என்று எழுதி 1 கிலோ வெங்காயத்தை 65 ரூபாய்க்கு விற்றனர். இதில் மக்களாட்சி அரசு கடையில் போட்டி போட்டு 50–க்கும் மேற்பட்ட பெண்கள் 2 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒவ்வொரு பொருட்களின் விலை உயர்வை அட்டையில் பட்டியலிட்டு எழுதி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சத்ரியன் து.வெ.வேணுகோபால் பேசியது:


வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் தேர்தல் சமயத்தில் இது முக்கிய பிரச்சினையாக மக்கள் மத்தியில் எதிரொலிக்கும் என்றார்.



Read more...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பக்கோரியும், புதுச்சேரி மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தாக்கபடுவதைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். புதுவை மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி ராஜா திரை அரங்கம் சிக்னல் அருகில் சனிக்கிழமை (03/08/2013) அன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அமைப்பாளர் திலீபன் முன்னிலை வகித்தார். துணை அமைப்பாளர் பாபு கண்டன உரை ஆற்றினார். கட்சி நிர்வாகி பிரகதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Read more...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பக்கோரியும், புதுச்சேரி மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தாக்கபடுவதைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 03/08/2013 அன்று புதுவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பக்கோரியும், புதுச்சேரி மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தாக்கபடுவதைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவையில் 03/08/2013 அன்று காலை  10.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 


Read more...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி ஆகஸ்ட் 5-ம் தேதி அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 20 ஜூலை, 2013

 கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை 19/07/2013 அன்று  நடைபெற்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் த.செ.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

700 நாட்களாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் நியாயமான உணர்வுகளை புறந்தள்ளியும் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிராகரித்தும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு (unit) ஒன்றை இயக்கத் தொடங்கியிருப்பதாக வந்துள்ள அறிவிப்பு, கடும் கண்டனத்திற்குரியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 15 நிபந்தனைகளை நிறைவேற்றாமல், உச்சநீதிமன்றத்தை ஏமாற்றும் வகையிலான ஒரு அறிக்கையை நீதிபதிகளிடம் தருவதற்கு பதில், நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் அணுக்கரு பிளவுக்கான முதல் படிமத்துக்கான உத்தரவை (First Approach to Criticality) பிறப்பிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு இருப்பது பல நியாயமான சந்தேகங்களை கிளப்புகிறது.

கூடங்குளம் அணுஉலை வழக்கில் உச்ச நீதிமன்றம் மே மாதம் 6 ஆம் தேதி தந்த தீர்ப்பில், “அணுஉலையில் 15 நிபந்தனைகளைச் செயல்படுத்த வேண்டும்; அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், அதன்பிறகே அணு உலையை தொடங்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறியது. அதன்படி இந்திய அணுமின் கழகம், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தங்கள் அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நிபந்தனையின்படி, அறப்போராட்டக்காரர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை போட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் இல்லை. தவிர அணுவுலை அமையவிருக்கும் பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் சுற்றுவட்டார மக்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படை விதியை தமிழக அரசும், நெல்லை மாவட்ட பொறுப்பு அரசு ஊழியர்களும் இதுவரை கடைபிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணுஉலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணு உலையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு உதிரிப் பாகத்தின் தரத்தையும் பாதுகாப்பு அம்சங்களையும் மறு ஆய்வு செய்து உறுதிப்படுத்தி அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

கூடங்குளம் அணுஉலையில் பல இலட்சக் கணக்கான உதிரி பாகங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.; ஒவ்வொன்றையும் சோதனை செய்து தரத்தை உறுதிப்படுத்த பல மாதங்கள், ஏன் வருடக்கணக்கில் ஆகும். ஆனால், இரண்டு மாதத்துக்குள்ளாக அணுஉலையை இயக்கப் போகிறோம் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் ஒரு செயலே.

 நாட்டின் அனைத்துத் துறைகளையும் பற்றிப் படர்ந்திருக்கும் ஊழல் பூதம், அணுவுலையையும் விட்டு வைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் கூடங்குளம் அணுவுலைத் திட்டத்தின் ஊழல் முறைகேடுகளை சரிசெய்யாமல் அணுவுலையை இயக்கத் தொடங்கியுள்ளதாக சொல்கின்றார்கள்.

• ரஷியாவைச் சேர்ந்த அணுவுலை பாகங்கள் விற்கும் நிறுவனமான ஜியோ பொடோல்ஸ்க் (Zio Podolsk) - ன் இயக்குனர் செர்கை சுடேவ். இலாபத்தை அதிகரிப்பதற்காக தரமற்ற இரும்பை வாங்கி, அதனைக் கொண்டு அணுவுலை பாகங்களை தயாரித்து, மிகப் பெரிய ஊழல் செய்ததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜியோ பொடோல்ஸ்க்-ன் தாய் நிறுவனமான ரோசாட்டம் (Rosatom)-ன் தலைவர் டெனிஸ் கோச்ரேவும் இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார்.

•  போலியான தரமற்ற பாகங்களை அணுவுலைகளுக்கு விற்பனை செய்த மற்றொரு ரஷிய நிறுவனமான இன்ஃபோர்ம்டெக் (INFORMTEK)-ன் தலைவர் அலெக்சாண்டர் முரேச்சும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் அணுவுலை பாகங்கள் விற்பனை செய்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மற்ற நாடுகளில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசும், இந்திய அணுசக்திக் கழகமும் இதை அப்பட்டமாக மூடி மறைத்து மக்கள் உயிரோடு விளையாடுகின்றன. போராட்டக்காரர்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகே கூடங்குளம் அணுவுலைகான பாகங்களை ஊழல் நிறுவனங்களான ஜியோ பொடோல்ஸ்க், இன்ஃபோர்ம்டெக்கிடம் இருந்து வாங்கியதாக அணுசக்திக் கழகம் ஒப்புக் கொண்டுள்ளது!

மேலும், கூடங்குளம் அணுவுலைகள் 1 & 2 - ல் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற கருவிகள் மற்றும் உதிரிபாகங்களால் தவறான பொருத்தமற்ற சமிஞ்கைகள் வருவதாகவும், இவை அணுவுலை இயக்கத்தில் மிகப் பெரிய சிக்கல்களையும், பெரும் விபத்துகளையும் தோற்றுவிக்கும் என்று இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (Atomic Energy Regulatory Board -AERB) முன்னாள் தலைவர் டாக்டர்.ஏ.கோபாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தரமற்ற பாகங்களால் மிகப்பெரிய விபத்து காத்திருக்கிறது என்றும், கூடங்குளம் அணுவுலையின் பாதுகாப்பின்மை குறித்தும் இந்தியாவின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் 60 விஞ்ஞானிகள் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்களுக்கு அச்சம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். அணுவுலை பாகங்களை வினியோகம் செய்த ஊழல் நிறுவனங்களின் தரமற்ற பாகங்கள் கூடங்குளம் அணுவுலைகளில் பொருத்தப்பட்டுள்ளதை கடுமையாக ஆட்சேபிக்கும் அவர்கள் அனைவரும் அணுசக்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் அனைவரும் போராடும் மக்களின் நியாயமான கேள்விகளுக்கு ஆதரவானவர்கள்.

இவை தவிர, சுனாமியால் வரும் ஆபத்து, கூடங்குளம் பகுதிக்கு அருகிலேயே கடலுக்கடியில் எரிமலை இருப்பது, அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியில் அணுவுலைகளைக் கட்டக் கூடாது என்னும் விதியை மீறி சுண்ணாம்புப் பாறைகள் நிரம்பிய, அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் நெல்லை மாவட்டத்துக்குள் இருக்கும் கூடங்குளத்தில் அணுவுலை கட்டியிருப்பது, அணுக்கழிவுகளை என்னப் செய்யப் போகிறார்கள் என்று அரசுக்கே தெரியாமல் இருப்பது என்று நீண்டு கொண்டே போகும் மக்களின் கேள்விகள் எதற்குமே யாரும் பதில் தரவில்லை.

கூடங்குளம் அணு உலைகளைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு தோராயமாக 650 கோடி லிட்டர் தண்ணீரை கடலிலிருந்து எடுத்து அணு உலையில் குளிர்விப்பதற்கு பயன்படுத்திய பிறகு அந்த நீர், அதிக வெப்பத்துடனும் கதிர்வீச்சுத்தன்மையுடனும் மீண்டும் கடலில் கொட்டபடும். இது அந்தப் பகுதி மக்களையும் அவர்களது வாழ்வாதரத்தையும் கடுமையாக பாதிக்கும். இதனாலேயே சுற்றுசூழல் ஆலோசனைக் கமிட்டி கடலுக்கடியில் பைப் மூலமாக இரண்டு கி.மீ உள்ளே சென்று நீரை கலக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இவ்வளவு கொள்ளளவு தண்ணீரை அதிக வெப்பத்துடன், கதிர்வீச்சுடன் கடலில் கலப்பது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது வெட்டவெளிச்சம். கடற்கரையிலேயே அதை கொட்டுவது மேலதிக பாதிப்பையே ஏற்படுத்தும்.

இத்தனை பாதுகாப்பின்மை நிரம்பிய கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் கிராம மக்கள் மீதும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்கள் மீதும் 2,27,000 வழக்குகளைப் போட்டுள்ளது தமிழக அரசு. இந்திய வரலாற்றிலேயே ஒரே ஒரு காவல் நிலையத்தில் இவ்வளவு வழக்குகள் பதியப்படுவது இது தான் முதல் முறை. அதுமட்டுமின்றி போராடும் மக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியும் கூட இன்னும் ஒரு வழக்கு கூடத் திரும்பப் பெறப்படவில்லை.

எப்படி செர்னோபில்லில் பேரழிவு ஏற்பட்ட பிறகு இந்தியா இரசியாவுடன் அணு உலை ஒப்பந்தம் செய்து கொண்டதோ, அது போல இன்று புகுசிமாவில் பேரழிவில் அந்த அணு உலையில் ஏற்பட்ட இடர்பாடுகள் கூட இன்னும் சரிசெய்யப்படாத நிலையில் சப்பான் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் சப்பானுடன் பல அணு உலை ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளார். ஆனால் சப்பான் அரசோ தங்களிடம் உள்ள அணு உலைகளை 2030ற்குள் மூழுவதுமாக மூடிவிடுவாதாகவும், அணு மின்சாரத்திற்கு பதிலாக காற்றாலை போன்ற மரபு சாரா எரிசக்திக்கு மாறுவதாகவும் கூறியிருக்கின்றனர். அணு உலை எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிப்பதை அது காட்டுகின்றது, ஆனால் இங்கு பிரதமர் முதல் கடைக்கோடி அரசு ஊழியர் வரை போராடும் மக்களின் மேல் பொய்யான அவதூறுகளை வைப்பது மட்டுமே இங்கு பார்க்க முடிகின்றது. அப்படி அணு உலை பாதுகாப்பானது தான் என்றால் சப்பான் அரசு ஏன் தன் நாட்டில் அனு உலைகளை மூடிவிட்டு நமக்கு விற்கிறது?. சப்பானிடம் இல்லாத தொழில் நுட்பமா இந்தியாவிடம் உள்ளது ?

ஏகாதிபத்தியங்களின் நலன்களைக் காக்கவும், அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளுடன் போடப்பட்டுள்ள ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அணுவுலை வர்த்தகத்தில் கிடைக்கப்போகும் தரகு (Commission) பணத்தைச் சுருட்டுவதற்காக கூடங்குளம் மக்களின் 700 நாட்களைக் கடந்த மகத்தான மக்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துகின்றது இந்திய அரசு. கூடங்குளம் மக்களின் போராட்டத்தால் அணுவுலை மூடப்பட்டால், இந்தியாவில் எங்குமே இனி அணுவுலையை திறக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட இந்திய அரசு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் முட்டாளாக்கி கூடங்குளம் அணு உலையை இயக்கத் துடிக்கின்றது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒட்டுமொத்தமாகக் கொன்றழித்துவிடும் அணு உலை ஊழல் பற்றி கூட வாய் திறக்க மறுக்கும் இந்திய அரசின் அயோக்கியத்தனத்தையும், அதற்குத் துணை நிற்கும் விதமாக போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசையும் தமிழக மக்கள் எக்காலத்திலும் மன்னிக்கவே மாட்டார்கள். அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்கள் ஒய்ந்து விடப்போவதில்லை...!

 தமிழக மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் துச்சமென மதித்து, தமிழர்களின் போராட்டத்தை காலில் போட்டு மிதித்து, கூடங்குளம் அணுவுலையை இயக்கத் தொடங்கியிருக்கும் இந்திய அரசின் செயல் தமிழினத்திற்கு விடப்பட்ட நேரடியான சவால் !

1945 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் ஜப்பானின் ஹிரோஷிமா மீதும் அதனை தொடர்ந்து நாகசாகி மீது அணு குண்டு வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தது அமெரிக்கா. அணு குண்டினால் ஏற்பட்ட பேரழிவைக் கண்டதால் அந்த நாள் உலகெங்கும் உள்ள மனித நேயமிக்கவர்களால் அணு சக்தி எதிர்ப்பு நாளாக பாவிக்கப்பட்டு வருகின்றது. அத்தகைய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நாளை மனதில்கொண்டு, அணுவுலையை இயக்கத் தொடங்கியிருக்கும் இந்திய அரசையும், துணை போகும் தமிழக அரசையும் வன்மையாகக் கண்டித்து கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகத்து 5 திங்கட்கிழமையன்று சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம் நடத்த இருக்கின்றது.

இந்திய , தமிழக அரசுகளே!

• உச்சநீதி மன்ற ஆணையின்படி போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பபெறு!
• உரிய பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றாமல் அணு உலையை இயக்கத் தொடங்காதே!
• வெப்பமும் அணுக்கதிர்வீச்ச்ம் கலந்த நீரைக் கடலில் கலந்து கடல் வளங்களை அழிக்காதே!
• கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

நாம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இடிந்தகரையில் நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களோடு கரம் கோர்த்து அணு உலைக்கு எதிரானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கின்றது என்பதை உணர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம். இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் விதமாக, சென்னை, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்படும்..

***

வைகோ,பொதுச் செயலாளர், ம.தி.மு.க

தா.செ. மணி, ஒருங்கிணைப்பாளர், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

பண்ருட்டி தி. வேல்முருகன், நிறுவனர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி

ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர், மனித நேய மக்கள் கட்சி
 
கோவை கு.இராமகிருட்டிணன், பொதுச் செயலாளர், த.பெ.தி.க

மீ.த.பாண்டியன், பொதுச் செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ),மக்கள் விடுதலை

தெஹலான் பாகவி, தலைவர், SDPI

பொறியாளர்ஆர்.சுந்தர்ராஜன், பூவலகின் நண்பர்கள்

அருண்சோரி, செய்தித் தொடர்பாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி

செந்தில், சேவ் தமிழ்ஸ் இயக்கம்



Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP