சீர்காழி அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடி கம்பம் சேதம்: புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
திங்கள், 30 ஜூலை, 2012
சீர்காழி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன் சீர்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் செய்தார். அவரது சுற்றுப் பயணத்திற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் அகோரம் தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடம் போலீசார் கைது செய்தனர். சுமார் 30 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
சீர்காழி தாண்டவன் குளம் அருகே உள்ள டெலிபோன் செட் தெருகொடி கம்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலாளர் தீரன் சுற்றுப் பயணத்தின் போது கொடி ஏற்றி சென்றார். இந்த கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் வெட்டி சாய்த்து விட்டனர். இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாயண சுந்தரம் புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்த சீர்காழி, கொள்ளிடம், புத்தூர் பகுதிகளில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடி கம்பத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக