Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான தமிழக வாழ்வுரிமை சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா கடலூரில் நடைபெற்றது

புதன், 4 ஜூன், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான தமிழக வாழ்வுரிமை சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா கடலூரில் 03.06.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு சங்க மண்டல பொதுச்செயலர் தணிகாசலம் தலைமை வகித்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று சங்கக் கொடியேற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்தார்.

விழாவில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பேசியது:

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களை அரசுத்துறை ஊழியர்களாக மாற்ற வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகமானது அரசு சார்ந்த, மக்கள் சார்ந்த நிறுவனமாக மக்களுக்காக பணியாற்றுவதால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும்.

விழாவில் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சைதை சிவராமன், பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கண்ணன், மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலாளர் ஆனந்த், மாநில மாணவரணிச் செயலாளர் அருள்பாபு, மாவட்ட மகளிரணிச் செயலாளர் அமராவதி, இளைஞரணிச் செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP