ண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு திரும்ப பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை
வெள்ளி, 1 மே, 2015
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம்! எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே திரும்பப் பெறு!!
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மிக மிகக் கடுமையாக உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவர அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்தித்த போதும் கூட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை...
சர்வதேச சந்தை நிலவரம், ரூபாய் மதிப்பு போன்ற காரணங்களைக் கூறிக் கொண்டு மக்களின் அடிப்படை தேவையான பெட்ரோல், டீசல் விலையை கண்மூடித்தனமாக அதிகரிப்பது என்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திடீரென பெட்ரோல், டீசல் விலையை 50 காசுகள், ரூ1 என குறைப்பது போல சில மாதங்கள் அறிவிப்பதும் பின்னர் ஒட்டுமொத்தமாக கடுமையாக உயர்த்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் யதார்தத்தில் பெட்ரோல், டீசல் விலை மிக மிகவும் கடுமையாக உயர்ந்தே இருக்கிறது என்பதே நிதர்சனம்.
இத்தகைய போக்கினால் அத்தியாவசிய பொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்ந்து ஏழை எளிய நடுத்த மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வைக் குறைப்போம்; கட்டுப்படுத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதி தந்த மத்திய அரசு தற்போது, எண்ணெய் நிறுவனங்கள் மீது பழியைப் போட்டுவிட்டு கையை விரிப்பது தங்களது கடமையில் இருந்து தப்பி ஓடுகிறது என குற்றம்சாட்டுகிறேன்.
பொதுமக்களை மிகக் கடுமையாக பாதிக்கிற இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; அத்துடன் இத்தகைய பொதுமக்களை பாதிக்கிற வகையில் விலை நிர்ணயம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை மத்திய அரசு திரும்பப் பெற்று தம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
அன்புடன்
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக