காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணி சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய், 29 அக்டோபர், 2013
கடலூர் :
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணி
சார்பில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (28.10.2013)
ஆர்ப்பாட்டம் நடந்தது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை
நீக்கவேண்டும். இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த்
மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை
வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மாணவர் அணி துணை செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். மாணவர் அணி தலைவர் ரவி பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மாநில துணை தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, நகர செயலாளர் ஆனந்து, மாநில மகளிர் அணி செயலாளர் அமராவதி, நிர்வாகிகள் கமலநாதன், தமிழர்படை பிரசன்னா, செந்தில் முத்துக்குமார், ஆற்றலரசு, ராம்கி உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக