Blogger இயக்குவது.
பழ.நெடுமாறன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழ.நெடுமாறன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு சார்பில் ஐயா பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 23 நவம்பர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி, இந்திய அரசு அலுவலகங்களைத் தாக்கிய திராவிடர் விடுதலைக் கழக சென்னை - சேலம் தோழர்கள் 7 பேர் மீதும், அதன் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் மீதும் தமிழக அரசால் ஏவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், முள்ளிவாய்க்கால் முற்றம் எழுப்பிய ஐயா பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரியும், சென்னையில் இன்று (23.11.2013) காலை, 'அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு' சார்பில், பல்வேறு கட்சி - இயக்கங்கள் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 11 மணிளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் திரு. தெகலான் பாகவி, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் குடியரசு முன்னணி செயலாளா வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை செயலக உறுப்பினர் தோழர் சதீஷ், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பரிமளா உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.






Read more...

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிறுவனருமான திரு.பழ.நெடுமாறன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வெள்ளி, 15 நவம்பர், 2013

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிறுவனருமான அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

ஈழத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலையை தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும், உலகம் முழுவதும் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சில் நிறுத்தி ஆறாத வடுவாகவும் அணைக்க முடியாத பெரும் நெருப்பாகவும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு தமிழ் நாட்டின் தஞ்சையில் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் அரசு நிலத்தில் அதன் காம்பவுன்டு சுவரும், சுற்று சுவரும் பூங்காவும் அமைக்கப்பட்டது என்று கூறி கைது செய்யப்பட்டிருக்கும் அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களின் வயதையும் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும். மேலும் அந்த வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்தும் அவர்கள் மீது உள்ள வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.

தமிழ் ஈழ மண்ணில் சிங்கள பேரினவாத அரசு ராஜபக்சே அங்கு உள்ள ஈழதமிழர்களுடைய, மாவீரர்களுடைய சிலைகள், நினைவுசின்னங்கள், தமிழ் தலைவர்களுடைய சிலைகள் அனைத்தையும் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். இந்த சூழலில் அந்த மண்ணில் நினைவுசின்னம் இல்லாத போது நம்முடைய தாய்தேசமான தமிழ் நாட்டில் இனஅழிப்பு போரின்போது ஏற்பட்ட பாதிப்புகளை வருங்கால தலைமுறை தெரிந்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட முற்றத்தை பாதுகாக்க முன் வரவேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மேலும் ஈழதமிழர்களுடைய நலனுக்காக மூன்று சட்ட மன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர்களுடைய நடவடிக்கை பாராட்டுதல்குரியதாகும். அதே வகையில் இந்த முள்ளி வாய்க்கால் முற்றத்தினை கூட நம்முடைய தமிழக அரசும், மாண்புமிகு முதலமைச்சரும் முன் வந்து அமைத்திருந்தால் தமிழ் நாட்டில் வாழ்கின்ற தமிழர்களிடத்திலும், உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழர்களிடத்திலும் நெஞ்சில் நீங்காத ஒரு பெயரையும் புகழையும் மாண்புமிகு புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் வரிசையில் தற்போதைய முதல்வர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் தமிழக அரசு அதை செய்ய முன் வராத போது அதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதும் கைது செய்திருப்பதும் உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. 

ஆதலால் தமிழக அரசு திருச்சி சிறையில் வாடுகின்ற அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டு சேலம் சிறையில் வாடும் திரு.கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர் அனைவரையும் விடுதலைசெய்து அவர்கள் மீது உள்ள வழக்கையும் ரத்து செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அது மேலும் சிறப்படைகின்ற வகையில் தமிழக அரசு செய்து தர முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.





Read more...

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் திருமணம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் நேரில் வாழ்த்து

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் தமிழக சட்டமன்ற முன்னாள் அவைத் தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் இன்று (08/09/2013) காலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.  திருமண விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் நேரில் சென்று  மணமக்களை வாழ்த்தினார். 

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP