Blogger இயக்குவது.

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிறுவனருமான திரு.பழ.நெடுமாறன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வெள்ளி, 15 நவம்பர், 2013

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிறுவனருமான அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

ஈழத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலையை தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும், உலகம் முழுவதும் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சில் நிறுத்தி ஆறாத வடுவாகவும் அணைக்க முடியாத பெரும் நெருப்பாகவும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு தமிழ் நாட்டின் தஞ்சையில் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் அரசு நிலத்தில் அதன் காம்பவுன்டு சுவரும், சுற்று சுவரும் பூங்காவும் அமைக்கப்பட்டது என்று கூறி கைது செய்யப்பட்டிருக்கும் அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களின் வயதையும் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும். மேலும் அந்த வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்தும் அவர்கள் மீது உள்ள வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.

தமிழ் ஈழ மண்ணில் சிங்கள பேரினவாத அரசு ராஜபக்சே அங்கு உள்ள ஈழதமிழர்களுடைய, மாவீரர்களுடைய சிலைகள், நினைவுசின்னங்கள், தமிழ் தலைவர்களுடைய சிலைகள் அனைத்தையும் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். இந்த சூழலில் அந்த மண்ணில் நினைவுசின்னம் இல்லாத போது நம்முடைய தாய்தேசமான தமிழ் நாட்டில் இனஅழிப்பு போரின்போது ஏற்பட்ட பாதிப்புகளை வருங்கால தலைமுறை தெரிந்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட முற்றத்தை பாதுகாக்க முன் வரவேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மேலும் ஈழதமிழர்களுடைய நலனுக்காக மூன்று சட்ட மன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர்களுடைய நடவடிக்கை பாராட்டுதல்குரியதாகும். அதே வகையில் இந்த முள்ளி வாய்க்கால் முற்றத்தினை கூட நம்முடைய தமிழக அரசும், மாண்புமிகு முதலமைச்சரும் முன் வந்து அமைத்திருந்தால் தமிழ் நாட்டில் வாழ்கின்ற தமிழர்களிடத்திலும், உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழர்களிடத்திலும் நெஞ்சில் நீங்காத ஒரு பெயரையும் புகழையும் மாண்புமிகு புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் வரிசையில் தற்போதைய முதல்வர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் தமிழக அரசு அதை செய்ய முன் வராத போது அதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதும் கைது செய்திருப்பதும் உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. 

ஆதலால் தமிழக அரசு திருச்சி சிறையில் வாடுகின்ற அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டு சேலம் சிறையில் வாடும் திரு.கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர் அனைவரையும் விடுதலைசெய்து அவர்கள் மீது உள்ள வழக்கையும் ரத்து செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அது மேலும் சிறப்படைகின்ற வகையில் தமிழக அரசு செய்து தர முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP