Blogger இயக்குவது.

விருத்தாசலம் அடுத்த சின்னபரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

விருத்தாசலம் அடுத்த சின்னபரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது.

ஒன்றிய தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுப்ரமணியன், ரமேஷ், ராஜா முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், மாநில மதியுரை குழு தலைவர் பாலகுருசாமி, மாவட்டச் செயலர் சின்னதுரை உட்பட பலர்
பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்: 


 1. கரும்பு டன்னுக்கு 3,500 ரூபாய், நெல் மூட்டைக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்.

2. பரவளூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும். தொரவளூர் பஸ் நிறுத்தம், மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும்.

3. விருத்தாசலத்திலிருந்து கச்சிபெருமாநத்தத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.

4. தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும்.

5. ஆதரவற்ற முதியோர்கள் உதவித் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்

என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP