அரவக்குறிச்சி அருகே நடைபெறவுள்ள சேவல் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரசுக்கு கோரிக்கை
செவ்வாய், 14 ஜனவரி, 2014
அரவக்குறிச்சி அருகே நடைபெறவுள்ள சேவல் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிறுபான்மைபிரிவு மாவட்ட அமைப்பாளர் முகமது அலி அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல்சரகத்தில் சேவல்சண்டை நடைபெற உள்ளது. சேவல் உரிமையாளர்கள் தங்கள் சேவல் மீது லட்சக்கணக்கில் பணம் கட்டி சூதாட்ட பந்தயம் நடைபெறுகிறது. பல மாவட்டங்களில், இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் அதிக அளவில் மது அருந்திவிட்டு வண்டி வாகனத்தில் வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த சேவல் சண்டை மருத்துவ சான்றிதழ், விலங்குகள் நலவாரியத்தில் அனுமதி சான்றிதழ் பெறாமல் நடைபெறுகிறது.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக