கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பஞ்சாயத்து பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை
சனி, 2 நவம்பர், 2013
க.பரமத்தி:
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பஞ்சாயத்து பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் முகமது அலி, பி.டி.ஓ.,வுக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனு விபரம்:
க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், சின்னதாராபுரம் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. குறிப்பாக, 5வது வார்டு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தெருவிளக்குகள் எரியவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. தென்னிலை ரோடு பகுதிகளிலும் இதே நிலைதான். பஞ்சாயத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரசீர் கேட்டால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சின்னதாராபுரம் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக