Blogger இயக்குவது.
சேலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ராஜபக்சே கூட்டாளி சுப்பிரமணியசாமியை பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேட்டி

சனி, 20 செப்டம்பர், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் சேலத்தில் இன்று 20.09.2014 செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது, ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக்குகுழுவை இங்குள்ள ஈழத்தமிழர்களிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், இலங்கை மீதான பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் வருகிற 24–ந் தேதி பேரணி நடக்கிறது.

ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் தொடங்கி தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் பேரணி முடிவடைகிறது. இதில் 150–க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர், தமிழ் ஆதரவாளர்கள், மனித நேய பண்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச சட்டப்படி கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும். 3 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழர் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. கத்தி படத்தை திரையிட கூடாது என்று போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம்.

மேலும் தமிழக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் ராஜபக்சேவுடன் கைகுலுக்கி நட்பு பாராட்டும் சுப்பிரமணியசாமி தமிழ்நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளும் சுப்பிரமணிய சாமியை பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில தலைமை நிலைய செயலாளர் கனல் உ.கண்ணன், ஜெயமோகன், சத்தியமூர்த்தி, தாரை செந்தில்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் கராத்தே வெங்கடேஷ்ட, சரவணமூர்த்தி, தவமணி, விஜயகுமார், இளைஞர் அணி சபரீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more...

மேட்டூர் அணையில் திறந்து விடும் உபரி நீரை வசிஷ்ட நதியில் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்க தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 28 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், ஆத்தூர் டி.ஜி.ஆர்.திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, தலைமை செயலாளர் உ.கண்ணன், மாநில தமிழர் படைஜோதிலிங்கம் ஆகியோர், கட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து பேசினர். ஆத்தூர் நகர செயலாளர் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் வாழப்பாடி பச்சமுத்து, பெத்தநாயக்கன்பாளையம் வெங்கடேசன், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. மேட்டூர் அணையில் திறந்து விடும் உபரி நீர், வீணாக கடலில் கலப்பதால், உபரி நீரை, வசிஷ்ட நதியில் செல்லும் வகையில் வாய்க்கால் அமைத்தால், சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்ட விளை நிலங்கள் பாசனம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண முடியும்.

2. கரியக்கோவில் அணையில், கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விடுவதால், கைக்கான் வலவு நீரோடையை, கரியக்கோவில் அணைக்கு செல்லும் வகையில், புதிய நீரோடை அமைத்தால், அதிகளவில் தண்ணீர் தேக்க முடியும்

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் (தெற்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

சனி, 26 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் (தெற்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 25.07.2014 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி அளவில் கெங்கணாபுரம் ஸ்ரீ மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.





Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திங்கள், 14 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கராத்தே வெங்கடேஷ், மாநகர தலைவர் பாலு தலைமையில் சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 13.07.2014 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் மோகன், கொண்டலாம்பட்டி, தயாநிதி, மதன், முரளி, அஸ்தம்பட்டி பகுதி முருகேசன், துரைசிங்கம், கார்த்தி, அருண், இளங்கோ, சூர்யா, சரண், அம்மாபேட்டை நாகராஜ், P.S.K ராஜா, S.மணிகண்டன், K.சண்முகம், R.P.ரவி, சூரமங்கலம் பகுதி லோகு, S.மோகன், புண்ணியமூர்த்தி, பாரி படையாச்சி, ஆண்டிபட்டி சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சேலம் மாநகர இளைஞரணி தலைவர் சபரிஷ் நன்றி கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் 25.07.2014 அன்று சேலத்தில் நடைபெறுவதால் கூட்டத்திற்கு வருகை தர உள்ள கட்சியின் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தி.திருமால்வளவன், தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன், மாநில தமிழர் படை தலைவர் ஜோதிலிங்கம் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கபட்டது.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஓமலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜா கட்சியின் கட்டுபாட்டை மீறியதால் பதவியிலிருந்து நீக்கம்

சனி, 26 ஏப்ரல், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஓமலூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இது நாள் வரை செயல்பட்டு வந்த அன்புராஜா, கட்சியின் செயல்பாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்தால், அவரை, ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்படுகிறார். இனிமேல், கட்சி நிர்வாகிகள், அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.

Read more...

பென்னாகரம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா மாநாடு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம்

திங்கள், 3 பிப்ரவரி, 2014

சேலத்தில் 23.02.2014 அன்று நடைபெற உள்ளது. இதற்காக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நேற்று (02.02.2014) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தவமணி, மாவட்ட செயலாளர் முனி ரத்தினம், குமரவேல் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு மாநாடு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

Read more...

மேட்டூரில் 10 இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 12.01.2014 அன்று நடைபெற்றது

திங்கள், 13 ஜனவரி, 2014

சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 12.01.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.

சதுரங்காடியில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ் ஆகியோர் மாலை அணிவித்து கொடியேற்று விழாவை தொடங்கி வைத்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜமுனா, மாவட்ட செயலாளர் வீராசாமி, பொருளாளர் ராஜ்குமார், மேட்டூர் நகரப் பொறுப்பாளர் வைத்தியர் மணி, மகளிர் அணி நிர்வாகி கலைச்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
துக்கனாம்பட்டி, சேலம் கேம்ப், சின்னப்பார்க், பேருந்து நிலையம், பொன்நகர் உள்பட 10 இடங்களில் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.


Read more...

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஓமலூர் செந்தில் அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஓமலூர் செந்தில் அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்.
 



Read more...

சேலம் மாநகர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் 29.12.2013 அன்று நடைபெற்றது

திங்கள், 30 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் 29.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது..
 


















 

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் 29.12.2013 அன்று நடைபெறும்

புதன், 25 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் 29.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறும். இதில் சேலம் மாநகர பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தொடர்புக்கு: 9789222204, 9944072990

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

திங்கள், 23 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 22.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி அளவில் மேச்சேரி விஜயா மஹாலில் நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் ஓ.கே.வீராசாமி தலைமை வகித்தார். மேச்சேரி ஒன்றியச் செயலர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்புச் செயலாளர் மே.ப.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் செந்தில்குமார், மாநிலப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, சேலம் மாவட்டப் பொருளாளர் ஜமுனா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திக், சபரீஷ், செயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலம் போஸ் திடலில் நடைபெறும் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் 5ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP