Blogger இயக்குவது.

ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம்: பா.ம.க.விற்கு வேல்முருகன் சவால்

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிதம்பரம்:

         சிதம்பரத்தை அடுத்த ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

       2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என ராமதாஸ் கூறுகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால் நான் தொடங்கிய கட்சியைக் கலைத்து விடுகிறேன் என தி.வேல்முருகன் சவால் விடுத்தார். மதியுரை குழு உறுப்பினர் பாலகுருசாமி தலைமை வகித்தார்.

 தமிழக வாழ்வுரிமைக்    கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆற்றிய சிறப்புரை:

          இடஒதுக்கீடு போராட்டத்தில் பா.ம.க-விற்காக ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த 21 பேர் குடும்பங்கள் இதுவரை கஷ்டப்பட்டு வருகின்றன. வன்னியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் வன்னியர்கள் நன்கொடையாக அளித்த தொகையில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு தற்போது ராமதாஸ் மனைவி சரஸ்வதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. வன்னியர் சமுதாயத்திற்காக போராடி உயிர் நீத்தவர்கள் பெயரை இக்கட்டடத்திற்கு நினைவாக வையுங்கள் எனக் கேட்டேன். இவையெல்லாம் கேட்டதால்தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.

         கட்சியை விட்டு என்னை நீக்கிய போது தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் என்னிடம், எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள். பெரிய பொறுப்பு தருகிறோம் எனத் தெரிவித்தனர். நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல. தமிழக மக்கள் அனைத்து சாதியினருக்கும் பாகுபாடு பாராமல் பாடுபடத்தான் இந்தக் கட்சியைத் தொடங்கினேன் என்றார். மாநிலத் தலைவர் பேராசிரியர் தீரன், மாநில பொதுச்செயலாளர் காவேரி, இணைப் பொதுச்செயலாளர் போரூர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலாளர் ந.ப.காமராசு, துணைப் பொதுச்செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் சீனுவாசன் நன்றி கூறினார்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP