குமரி காடுகளில் மரம் கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை
வியாழன், 26 ஏப்ரல், 2012
நாகர்கோவில்:
குமரி வனப்பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் கூறியுள்ளார்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
குமரி வனப்பகுதி குலசேகரம், பூதப்பாண்டி, அழகியபாண்டிபுரம், வேளிமலை ஆகிய வனசரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி மரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக விலை மதிப்பற்ற வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோதையார் நீர் மின்நிலையங்களுக்கு அருகிலுள்ள மணலிக்காடு பகுதியில் பல கி.மீட்டர் தூரத்திற்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் உள்ள தேக்கு மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி செல்கின்றன. இந்த கடத்தல் கும்பலை பிடிக்க வனத்துறையின் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் மாவட்ட நிர்வாகம் தனிகவனம் செலுத்தி மரம் வெட்டி கடத்தலில் பின்னணியில் இருப்போரையும், துணைபுரியும் அதிகாரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக