தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நீர் உரிமை மீட்பு மற்றும் மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ஞாயிறு, 8 ஏப்ரல், 2012
தர்மபுரி:
தென் பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில பொதுச்செயலாளர் காவேரி கூறினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தென்பெண்ணை, காவிரி மற்றும் முல்லை பெரியாறு நீர் உரிமை மீட்பு மற்றும் மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனிரத்தினம் வரவேற்றார். பன்னீர்செல்வம், பிரகாஷ், பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் வஜ்ஜிரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் காவேரி, அமைப்புச் செயலாளர் காமராஜ், மாநில துணை பொதுச்செயலாளர்கள் தவமணி, விஜயகுமார், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் காந்திகுமார், துணைத்தலைவர் சரவணன், மாநில இளைஞர் பாசறை துணைச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில பொதுச்செயலாளர் காவேரி பேசியது:
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு மூலம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல லட்சம் ஹெக்டர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. பல இடங்களில் குடிநீர் திட்டங்களும் தென்பெண்ணை ஆற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு ஒரத்தூர் ஏரியில் ரூ.13 கோடி செலவில் பெரிய தடுப்பணை கட்டி அதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளுக்கு நீர் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல வட மாவட்டங்களில் பாசன வசதியின்றி விளை நிலங்கள் பாலைவனமாகிவிடும்.
கேரள அரசு முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டும் திட்டம் மூலம் தென்மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இதேபோல் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் மூலம் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. தமிழக அரசு பிற மாநில அரசுடன் பேசி சுமூக தீர்வு காண வேண்டும். என அவர் பேசினார். நகர செயலாளர் பூபால் நன்றி கூறுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக