தமிழீழ விடுதலைக்காக தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐ.நாவுக்கு எதிராக போராட வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் தீரன்
திங்கள், 17 டிசம்பர், 2012
இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ஜான் ஹோம்ஸ், விஜய் நம்பியார் ஆகியோரை குற்றவாளிகளாக விசாரிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 16/12/2012 ஞாயிற்றுக்கிழமை மாலை மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழினப் படுகொலையில் ஐ.நா உயர் அதிகாரிகள் இலங்கைக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன. சமீபத்தில் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட இலங்கை பற்றிய ஐ.நா உள் விவகார அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டன.
அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன் பேசியது
தமிழீழ விடுதலையின் அவசியம் குறித்தும், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐ.நாவுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம் என்றும், இந்தியா முழுதும் உள்ள தலைவர்களுக்கு ஈழத்தை பற்றிய செய்திகளை கொண்டு சேர்ப்பதும் முக்கியம் என்றும் கூறினார். ஐ.நா சபைக்கு சென்று திமுக மனு கொடுத்தது ஏமாற்று வேலை என்றும் கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், அனைத்து தமிழ் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு ஐ.நா அதிகாரிகளை விசாரிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இலங்கை இனப்படுகொலை பற்றிய புகைப்பட கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக