Blogger இயக்குவது.

காவிரி நதிநீர் உரிமையை பெற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற மறியல் போராட்டம்

சனி, 22 டிசம்பர், 2012

 


            
           காவிரி நதிநீர் உரிமையை பெற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற மறியல் நேற்று 21/12/2012 நடைபெற்றது.

       தமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்,

        கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்களை வலியுருத்தியும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக் கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில், நேற்று 21/12/2012 தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. அதன்படி தஞ்சை, சிதம்பரம்,  திருவாரூர், திருச்சி ஆகிய  இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுப்பட்ட  பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை

தஞ்சை மாவட்டத் தலைநகரான தஞ்சாவூரில், காலை 10 மணியளவில், சாந்தப் பிள்ளை கேட் அருகிலுள்ள காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை 1000க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் முற்றுகையிட்டனர். காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் மறியலுக்குத் தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வலிவலம் மு.சேரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன்,  தமிழக மக்கள் சனநாயகம் கட்சித் தலைவர் புதுக்கோட்டை கே.என்.செரிப்,  விடுதலைத் தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், புதிய தமிழகம் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுகுமார், மனித நேய மக்கள் கட்சி எஸ்.எஸ்.நூறுதீன், பாரதிய சனதா கட்சி எஸ்.பி.சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் திரளாக கலந்துக் கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP