நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொள்ளிடத்தில் சாலை மறியல் போராட்டம்
திங்கள், 10 டிசம்பர், 2012
நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடத்தில் உள்ள சீர்காழி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 09/12/2012 (ஞாயிற்றுக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்திற்கு கட்சியின் மாநில துணைச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் சிவா, ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஆறு எழிலரசன், ஒன்றிய தலைவர் கலையரசன், சீர்காழி நகரத் தலைவர் ரமேஷ், வைத்தீஸ்வரன்கோவில் நகர அமைப்பாளர் செந்தில், ராமலிங்கம், ராஜதுரை, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சரணவன், மாவட்ட துணை தலைவர் சத்யா, அமுதா,கண்மணி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர்.
போராட்டத்தின்போது, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு கர்நாடக அரசு 30 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி உரிய நீரை காவிரியில் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், குருவை, சம்பா சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது கர்நடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டரின் உருவ பொம்மையை கொள்ளிடம் கடைவீதியில் தீ வைத்து எரிக்கபட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70 பெண்கள் உள்பட 250 பேரை செம்பனார்கோவில் காவல் துறை ஆய்வாளர் மூர்த்தி கைது செய்தனர். இந்த சாலை மறியில் போராட்டத்தின் காரணமாக சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக