உடுமலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
வியாழன், 28 மார்ச், 2013
உடுமலை:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் கல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது; விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடிமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் ஆர்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநகர அமைப்பாளர் முகமது கனி முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் மே.ப.காமராஜ் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்டத் தலைவர் யு.என்.ராமசாமி தலைமையில் ஏராளமான பாமக நிர்வாகிகள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

லேபிள்கள்:
ஆலோசனைக் கூட்டம்,
உடுமலை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
மே.ப.காமராஜ்