Blogger இயக்குவது.

சேலத்தில் இராசபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 5 மார்ச், 2013

சிங்கள இனவெறியன் இராசபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில்  04.03.2013 அனைத்துக் கட்சிகளின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் பழைய பேருந்து நிலையம் முன்னுள்ள தலைமைத் அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்களை தமிழகக் காவல்துறை கைது செய்தது.
மிழக வாழ்வுரிமைக்  கட்சி முன்னணித் தலைவர் வை.காவேரி, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் செந்தில் குமார் (தமிழர் தேசிய இயக்கம்) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் அமைப்பாளர் தோழர் பிந்துசாரன் திரு. பூமொழி (தலைவர் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம்) தோழர் சக்தி (திராவிடர் விடுதலைக் கழகம்) தோழர் கோ.சீனிவாசன் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ.) - மக்கள் விடுதலை தோழர் ப.ஜீவானந்தம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP