காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை கைவிட நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
திங்கள், 20 மே, 2013
கொள்ளிடம்:
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், மாவட்ட செயற்குழு கூட்டம் 19/05/2013 அன்று நடைபெற்றது.
மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சிவா வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட தலைவர் சுதாகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஒன்றிய மகளிரணி செயலாளர் சத்யா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் வினோத், இளைஞரணி பாசறை தலைவர் சின்னதுரை, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் எழில், சீர்காழி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபு, குத்தாலம் ஒன்றிய செயலாளர் குணசேகர், ஸ்டாலின், ஒன்றிய துணை செயலாளர் வள்ளி, சிறுபான்மை பிரிவு தலைவர் பாஷா, பிரேம்குமார், மூர்த்தி, நடராஜன், கமலேஷ், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. சீர்காழியில் வரும் ஜூன் மாதம் 29ம்தேதி, நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு, ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் அதிகமானோர் கலந்துகொண்டு, கூட்டத்தை சிறப்பாக நடத்துவது.
2. காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
3. விளைநிலங்கள் மனைப்பட்டாவாக மாறிவருவதை தடைசெய்ய முதல்வரை கேட்டுக் கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக