முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வரவேற்பு
வியாழன், 8 மே, 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்ப்புக்குரியது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முக்கிய தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு எடுத்த விடா முயற்சியே காரணம். தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று தந்து இருப்பது தமிழக முதல்வருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த தீர்ப்பை பெற்று தந்ததன் முலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதுகாகப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று தந்த முதல்வருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்த 142 அடியாக உயர்த்தலாம். பெரியாறு அணையை பராமரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு, பிப்ரவரி 27 ஆம் நாள், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று தந்த தீர்ப்பைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்றும், அணையை உடைப்பதற்கும் உரிமை உண்டு என்றும், கேரள அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கேரள பத்திரிகைகள் தவறான நோக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பின. இதே போல் கேரள திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் ‘டேம் 999’ என்ற திரைப்படத்தை வெளியிட்டனர். அதில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தினார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இதுவரை கேரள அரசு பரப்பிவந்த பொய்யுரைகள் அனைத்தும் இந்தத் தீர்ப்பின் மூலம் அம்பலப்பட்டுள்ளது.
தமிழக, கேரள மக்களிடையே நிலவிவரும் நல்லுறவைப் பாதுகாக்க காலம் தாழ்த்தாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக