இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 12/11/2013 அன்று ரயில் மறியல் போராட்டம்
திங்கள், 11 நவம்பர், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை (10/11/2013) வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத்தில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்கவும், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவும் ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.
தற்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வற்புறுத்தியும் அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளது.
இசைப்பிரியாவுக்கு இழைத்த போர் குற்றங்களை தொலைக்காட்சியில் பார்த்த தமிழக மக்களும், மாணவர்களும் தற்போது கொந்தளிப்பாக உள்ள சூழலில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
எனவே மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை (12/11/2013) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் பெண்கள் திரண்டு ஒப்பாரி போராட்டம் நடத்துவார்கள்.
அதே போல் தமிழ் அமைப்புகள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்துக்கும் ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறி உள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக