Blogger இயக்குவது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஒப்பாரி போராட்டம்

செவ்வாய், 12 நவம்பர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்கிழமை (12.11.2013) வள்ளுவர் கோட்டம் அருகே  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஒப்பாரி போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் சத்ரியன், து.வெ.வேணுகோபால், ஏழுமலை, தொழிற்சங்க தலைவர் கே.வி.சிவராமன் முன்னிலை வகித்தனர். ஒப்பாரி போராட்டத்தை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார்

சிங்கள ராணுவத்தால் சீரழிக்கப்பட்ட இசைப் பிரியாவின் உருவ பொம்மையை மகளிரணி தலைவி வெள்ளையம்மாள் தலைமையில் 1000 பெண்கள் கொண்டு வந்து ஒப்பாரி வைத்து அழுதனர். சிங்கள ராணுவத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் வசைபாடினர்.

ஒப்பாரி போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தொடங்கி வைத்து பேசியது:


தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ரெயில் மறியல் நடத்தி 12 ஆயிரம்பேர் கைதாகி உள்ளனர். சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகையிட எங்களை அனுமதிக்கமாட்டார்கள். நீங்கள் கைக்குழந்தையுடன், வயதான முதியவர்களுடன் போராட்டத்துக்கு வந்துள்ளதால் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வள்ளுவர் கோட்டம் அருகே ஒப்பாரி போராட்டத்துக்கு அழைத்து வந்துள்ளோம். இசைப்பிரியாவின் படுகொலை, பாலச்சந்திரனின் இரக்கமற்ற சாவு கல்நெஞ்சையும் கறைய வைக்கும். இதற்கு ராஜபக்சேவை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தியும், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தியும் இந்த ஒப்பாரி போராட்டம் நடக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜோசுவா, தேவராஜ், ஆறுமுகம், சந்துரு, வீரன், வீர ராகவன், மோகன் வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP