தமிழகத்தில் கோமாரி நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
ஞாயிறு, 15 டிசம்பர், 2013
தமிழகத்தில் கால்நடைகளிடையே வேகமாக பரவி வரும் கோமாரி நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோமாரி நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் (14-12-2013) சனிக்கிழமையன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் பேசியது:
தமிழகத்தில் கோமாரி நோய் தாக்கி இறந்த
மாடுகளுக்கு நிவாரணமாக அதிகபட்சம் 20,000.00 ரூபாயும், குறைந்தபட்சம்
10,000.00 ரூபாயும், கோமாரி நோய் தாக்கி இறந்த ஆடுகளுக்கு நிவாரணமாக
அதிகபட்சம் 10,000.00 ரூபாயும், குறைந்தபட்சம் 5,000.00 ரூபாயும் தமிழக
அரசு வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்
கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக