நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் மாநில தலைவர் வேல்முருகனுக்கு முழு அதிகாரம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ஞாயிறு, 15 டிசம்பர், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் போரூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 14.12.2013 (சனிக்கிழமை) மதியம் 2.00 மணி அளவில் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் காவேரி, அமைப்பு செயலாளர் இணை பொதுச் செயலாளர் சண்முகம், மாநில துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளை கணக்கெடுத்து உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.
2. தமிழக அரசு கால்நடை மருத்துவர்களை கொண்டு அனைத்து கிராமப் பகுதிகளிலும் கோமாரி நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் உடனடியாக நடத்திட வேண்டும்.
3. 2.2.2014 அன்று கட்சி துவங்கி 3-ஆம் ஆண்டு துவக்கத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதால் இந்த நிகழ்ச்சியை சேலத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்துதல்.
4. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் மாநில தலைவர் வேல்முருகனுக்கு முழு அதிகாரம் வழங்குவது
உள்ளிட்ட 9 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக