Blogger இயக்குவது.
ரணில் விக்கிரமசிங்கே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரணில் விக்கிரமசிங்கே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆணவப் பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்

செவ்வாய், 17 மார்ச், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இன்று 17.03.2015 வெளியிட்டுள அறிக்கை: 

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம்- ரணிலின் ஆணவப் பேச்சுக்கு மத்திய அரசே முடிவு கட்டு!!
தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது வழக்கு தொடருக!!
தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் கொக்கரித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அண்மைக்காலமாக தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இத்தகைய கொலைவெறிக் கருத்தை வெளிப்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்னர் இதேபோல் ரணில் விக்கிரமசிங்கே கருத்து தெரிவித்த போது, இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரிடம் விளக்கம் கேட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் இதே கருத்தை சுஷ்மா ஸ்வராஜ் பதிவு செய்தார். 

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் அதே கொலைவெறித்தனத்தோடு இந்திய ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். இப்போதும் மத்திய அரசு மவுனமாக இருக்கப் போகிறதா? இப்போதும் இந்திய நாட்டின் குடிமக்களாகிய தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்ற ரணிலின் அறிவிப்புக்கு சப்பைக் கட்டு காரணத்தை மத்திய அரசு சொல்லப் போகிறதா? ரணிலின் இந்த கருத்தைக் கண்டிக்கும் வகையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்; அத்துடன் தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது மத்திய அரசு வழக்குத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும். 

இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போவதில்லை; இலங்கையின் இத்தகைய இனவெறிப் போக்குக்கு சரியான பாடம் கற்பிக்க தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட "இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்ற தீர்மானத்தை மத்திய அரசு இனியாவது ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

வியாழன், 5 மார்ச், 2015

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 05.03.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம்" என கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கண்டனம்

பாக் நீரிணைப் பகுதியில் இலங்கை எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பிரதமர் சிங்களப் பேரினவாதி ரணில் விக்கிரமசிங்கே கொக்கரித்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
1974 ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தத்தில் பிரிவு 5 மற்றும் 6-ல் "கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் பாரம்பரிய உரிமைகளில் மீன்பிடிக்கலாம்; எந்தத் தடையும் இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம் மதிக்காத சிங்களப் பேரினவாத அரசுகள், எல்லை தாண்டினார்கள் என்ற ஒற்றை பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் உலகில் எங்குமே இல்லாத பெருங்கொடுமையாக 30 ஆண்டுகாலமாக தமிழக மீனவ உறவுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 700க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்திருக்கிறது. 

இன்று வரை தமிழக மீனவர்களை நடுக்கடலில் விரட்டியடிப்பது; தாக்குவது, சித்தரவதை செய்வது; படகுகளை பறிமுதல் செய்வது என சிங்கள ராணுவம் வெறியாட்டம் போடுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி 700க்கும் அதிகமான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள வெறியாட்டத்தை நியாயப்படுத்துகிற வகையில் "இவையெல்லாம் ஆயுதக் கடத்தலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்" என்று ரணில் விக்கிரமசிங்கே பேட்டியளித்திருப்பது கண்டனத்துக்குரியது. ரணில் விக்கிரமசிங்கேவின் இக்கருத்து தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. 

வாழ்வாதாரத்துக்காக நித்தம் நித்தம் செத்து பிழைத்து கடலில் தொழிலுக்குப் போகிற மீனவர்களை "ஆயுதக் கடத்தல்காரர்கள்; போதைப் பொருள் கடத்தல்காரர்கள்" என்று ரணிலைப் போன்ற சிங்கள பேரினவாதிகள் போகிற போக்கில் கொச்சைப்படுத்துவது கடுமையான கண்டனத்துக்குரியது.

பாக் நீரிணைப் பகுதியில் மீனவர்கள் எல்லை தாண்டி செல்லக் கூடாது என்று 1983ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு ஒரு தற்காலிகத் தடை விதித்தது. அந்தத் தடையை நீக்குவதன் மூலமாக 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன்பிடிக்க உரிமை உண்டு என்பதை மத்திய அரசு நிலைநாட்டுவது உடனடித் தேவையாகும்.

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதிகளில் மீன்பிடிப்பது என்பது எப்படி எல்லை தாண்டி வருவதாகும்? அப்படி வருபவர்களை சுட்டுத் தள்ள சட்டத்தில் இடம் இருக்கிறது என்று மிரட்டுகிற ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இந்திய மத்திய அரசு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். எல்லை தாண்டுவதாக கூறி காக்கை குருவிகளைப் போல 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படை மீது இந்திய மத்திய அரசு வழக்கு தொடர வேண்டும்.

இலங்கைக்கு செல்ல இருக்கிற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரணில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்திக்கும் போதும் தம்முடைய கண்டனத்தை பதிவு செய்வதுடன் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர், 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP