என்.எல்.சி.யில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தரவேண்டும் :தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை
சனி, 28 ஏப்ரல், 2012
கடலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடலூரில் கடலூர் மாவட்ட செயலாளர் இரா.பஞ்சமூர்த்தி தலைமையில் வெள்ளிகிழமை நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் :
1. நெய்வேலி என்.எல்.சியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தரவேண்டும்
2. புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.இப்பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி செலவை 5 ஆண்டுகளுக்கு அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்,
3. சிப்காட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அங்குள்ள நிறுவனங்கள் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,
4. இலங்கை படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.திருமால்வளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகர செயலர் ஆனந்த் வரவேற்றார், மாநில மகளிரணி செயலர் அமராவதி, சட்டப் பாதுகாப்பு செயலர் திருமூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.