Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி - புகைப்படங்கள்

ஞாயிறு, 20 மே, 2012

சிதம்பரம் :

குமராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடந்த இலங்கை முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு குமராட்சி ஒன்றிய அமைப்பாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். 

 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேசியது 


"இலங்கையில் ராஜபக்சே பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவதற்கு புதிதாக தமிழர் படை உருவாக்கப்படுகிறது. இவர்கள் ஜாதி உணர்வை தூண்டாமல் தமிழர்களின் நலனுக்காகவே பாடுபடுவார்கள்.  இந்தப் படை ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் நீதி அரசர்களின் ஆலோசனைப்படி அமைக்கப்படும்’’ என்றார்.
















Read more...

தமிழக வாழ்வுரிமை கட்சி கடலூர் மாவட்ட மாநாடு ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளி, 18 மே, 2012

கடலூர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு மே 18-ந்தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அந்த மைதானத்தில் அரசு பொருள்காட்சி மே 31-ம் தேதி வரை நடைபெற உள்ளதால் மாநாடு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. எனவே ஜூன் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநாடு நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்தார்.






Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் மாவீரர்களின் நினைவேந்தல் கூட்டம்

வியாழன், 17 மே, 2012


தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தமிழ் ஈழம் அமைய பொது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நாளை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சியில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடத்தப்படும் மாபெரும்  முள்ளிவாய்க்கால் மாவீரர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் இன உணர்வுள்ளோர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அழைக்கிறோம்.



Read more...

கன்னியாகுமரியில் சுனாமி எச்சரிக்கை மையத்தை திறக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

புதன், 16 மே, 2012


நாகர்கோவில்: 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை

கடந்த 11.04.2012 அன்று சுனாமி எச்சரிக்கை மீனவர்களுக்கும், கடலோர கிராம மக்களுக்கும் சென்னையில் இருந்து தான் விடப்பட்டது. கன்னியாகுமரியிலும் சுனாமி அலைகள் தாக்க கூடும் என்ற அச்சம் இருந்ததால் உஷார்படுத்தப்பட்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுனாமி எச்சரிக்கை மையம் செயல்படாததால் எல்லா தகவல்களையும் சென்னையில் கேட்டு தெரிந்து கொள்ள கூடிய நிலை இருந்தது. எனவே மக்களின் பாதுகாப்பு கருதி கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுனாமி எச்சரிக்கை மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மே-18-ல் இலங்கை முள்ளிவாய்கால் போரில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

செவ்வாய், 15 மே, 2012

கடலூர்:

நதிநீர், புயல் நிவாரணம், ஈழத்தமிழர் படுகொலை விவகாரம், நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை உள்ளிட்டவைகளில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் குற்றம்சாட்டினார்.

கடலூரில் திங்கள்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அளித்த பேட்டி :

மே 18-ம் தேதி கடலூரில் மாவட்ட மாநாடு நடக்க இருந்தது. மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடப்பதால் மாநாட்டை ஜூன் 24-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு எந்தவித பெரிய அளவிலான உதவியும் செய்யவில்லை. தமிழக அரசு கோரிய நிதி உதவியும் வழங்கவில்லை. மத்திய அரசுக்கு எதிராக வரிகொடா இயக்கம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகம் முன் போராட்டம் நடத்தவுள்ளோம். கடந்த 25 ஆண்டுகளாக போராடிவரும் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரமும், வீடு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என நெய்வேலி நிர்வாகத்தை வலியுறுத்துவது, உச்ச நீதிமன்றம், நதிநீர் நடுவர் மன்றம் முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னையில் அளித்த தீர்ப்பை கேரளம் மற்றும் கர்நாடக அரசு நடைமுறைபடுத்த மறுக்கிறது. இம்மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவது,

தனியார் கல்வி நிறுவனங்கள் பணக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எம்.பி.பி.எஸ். இடம் ரூ.75 லட்சத்துக்கு விலை பேசப்படுகிறது. தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை நடக்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. தமிழ் ஈழப் போரில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டுவது, தனி ஈழம் குறித்து இலங்கை தமிழர் மத்தியில் ஐ.நா. முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்தப்பட உள்ளது.< மே-18-ம் தேதி குமராட்சி கடை வீதியில் இலங்கை முள்ளிவாய்கால் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியல் தமிழ், ஈழ ஆர்வலர்கள் பங்கேற்பர். ஊழல், லஞ்சத்தை ஒழிக்க படித்த இளைஞர் படையை அமைத்து, அவர்களை கண்காணிப்பு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு ஊழல் லஞ்சவாதிகளை அடையாளம் காட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும். அம்பேத்கர் கேலிச்சித்தரம் தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்யானந்தா:

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா தேர்வு செய்யப்பட்டதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தன்மீது உள்ள வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் பொய்யென நிருபித்துவிட்டு பின்னர் வேண்டுமானால் ஆதீனமாக பதவி ஏற்றுக்கொள்ளட்டும் என தி.வேல்முருகன் கூறினார். பேட்டியின்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தாண்டவராயன், பாடலிமணி, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி நகர இளைஞரணி செயலாளராக கோ.ராயர் நியமனம்

திங்கள், 14 மே, 2012


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி நகர இளைஞரணி செயலாளராக கோ.ராயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.







Read more...

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வியாழன், 10 மே, 2012


தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின், சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் காவேரி தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சக்திவேலன், ஜெயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஓமலூர் மெயின் ரோட்டில் தனியார் சொகுசு பஸ்களை நிறுத்தி வைத்து, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சொகுசு பஸ்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


2.சேலம்- உளூந்தூர்பேட்டை நான்கு வழி சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சேலம்- கரூர் அகல ரயில்பாதை பணிகள் முடிவுக்கு வந்து விட்டதால், அதில், பயணிகள் ரயில் இயக்கத்தை துவக்க வேண்டும். ஏற்காட்டுக்கு செல்லும் ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


3. சேலம் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் அதிகரித்து நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகாரட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற வேண்டும், என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP