சேலம் மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை
வியாழன், 10 மே, 2012
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் காவேரி தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சக்திவேலன், ஜெயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஓமலூர் மெயின் ரோட்டில் தனியார் சொகுசு பஸ்களை நிறுத்தி வைத்து, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சொகுசு பஸ்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.சேலம்- உளூந்தூர்பேட்டை நான்கு வழி சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சேலம்- கரூர் அகல ரயில்பாதை பணிகள் முடிவுக்கு வந்து விட்டதால், அதில், பயணிகள் ரயில் இயக்கத்தை துவக்க வேண்டும். ஏற்காட்டுக்கு செல்லும் ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. சேலம் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் அதிகரித்து நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகாரட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற வேண்டும், என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக